Posts

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் ||Kattadam Kattidum Sirpigal

Image
கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் சுத்தியல் வைத்து அடித்தல்ல ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் ஒவ்வொரு செயலாம் கற்களாலே உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் பத்திரமாக தாங்கிடுவார் கைவேலை அல்லா வீடொன்றை கடவுளின் பூரண சித்தப்படி கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் கட்டிடுவோமே நித்தியத்திற்காய் பாவமாம் மணலில் கட்டப்பட்ட பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே – ஆவலாய் இயேசுவின் வார்த்தைக் கேட்போம் அவரே மூலைக்கல் ஆகிடுவார்

Magilvom Magilvom - மகிழ்வோம் மகிழ்வோம்

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு இராஜன் நம் சொந்தமாயினார் இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே – இந்த 2. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார் தூரம் போயினும் கண்டுக்கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் 3. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் 4. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார் அவர் சமூகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

Yaridam Selvom Iraivaa - யாரிடம் செல்வோம் இறைவா

Image
யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா    (4) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தர வேண்டும்    (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ  (2) ஆதரித்தே அரவணைப்பாய்    (2) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா  (2) குணமதிலே மாறாட்டம்  (2) குவலயந்தான் இணைவதெப்போ   (2) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல்   (2) உலகிருக்கும் நிலை கண்டு      (2) உனது மனம் இரங்காதோ       (2)

தேவசாகயம் மவுன்ட் புகைபடங்கள்

Image

அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்

தூய அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்       எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மின்னல் மாதாவே! ஒளி வெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கு, ஆதரவற்றோர்க்கு அடைக்கல பாதையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும் தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடி வரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் எம் உள்ளழரை ஆமேன் !

ஏ அம்மா என் தாயே மாசில்லாத கன்னிகையே Ye Amma Yen Thaey Masillatha Kannikaiyae

Image
ஏ அம்மா என் தாயே மாசில்லாத கன்னிகையே அறியா பிழையை கருணையோடு மன்னித்து அருள்வாய் தயாபரி தங்கத்திலான உப்பரிகை தாவீது வம்சத் தாய்மடி சாரோனின் ரோஜாத் தோட்டம் நீ ஆசிர்வதியும் அம்மா ஆவியகன் உன்னதமே ஆதிநாதன் ஆலயமே செங்கோலை ஏந்தும் விண்ணரசி ஆசிர்வதியும் அம்மா தேவனின் தாயும் நீ ஜீவனின் ராணி நீ தாயான கன்னி மாமரி ஆசிர்வதியும் அம்மா

நீயே நிரந்தரம் இயேசுவே ||Neeye Nirantharam

Image
நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம் 1. அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம் மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் – (2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம் நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) 2. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம் தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன் 3. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம் நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் – (2) நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் (2) அம்மையப்பன்

ஆரோக்கிய மாதாவே உமது புகழ் Arokkiya Mathave Umathu Pugazh

Image
ஆரோக்கிய மாதாவே உமது புகழ்  பாடித் துதித்திடுவோம் -எந்நாளும் பாடித் துதித்திடுவோம்  (2)  அலைகள் மோதிடும் கடற்கரை தனிலே வசித்திட ஆசை வைத்தாயே  (2) பலவிதக் கலைகளும் பாரில் சிறந்திட அனைவருக்கும் துணை புரிந்தாயே  (2)  தேன் கமழும் சோலை சூழ்ந்து விளங்கும் வேளாங்கண்ணியில் அமர்ந்தாயே  (2) வானுலகும் இந்த வையகமும்  -அருள் ஓங்கிட எங்கும் நிறைந்தாயே  (2) முடவன் தந்த மோரைப் பருகிக் கொண்டே -அவன் குறைகளை நீக்கிட நினைத்தாயே  (2) நடந்திடக் கால்களும் நோயற்ற வாழ்வும் இயேசுவின் அருளால் கொடுத்தாயே  (2)  பாலன் இயேசுவின் பசியைப் போக்கவே பசும்பால் வாங்கித் தந்தாயே  (2)  -இந்த உலகம் உள்ளவரை உன்னை வேண்டிக்கொள்ளும் அடிமைகள் வாழ்ந்திட அருள்புரிவாய் (2)  சக்தி விளங்கும் உந்தன் தரிசனம் கிடைத்தால் சஞ்சலம் யாவும் தீர்ந்திடுமே  (2) பக்தியுடன் உன்னைப் பணிந்து போற்றுபவர் வாழ்வினிலே இன்பம் நிறைந்திடுமே  (2)  கவலையினால் மனம் வருந்தும் ஏழைகளின் கண்ணீரைக் கனிவுடன் துடைத்தாயே   (2)  -நமது நன்னாளில் வந்து தானங்கள் ச...

நீயே எனது ஒளி நீயே எனது வழி ||Neeye Enathu Oli Neeye Yenathu Vazhi|Chitra Songs

Image
நீயே எனது ஒளி நீயே எனது வழி நீயே எனது வாழ்வு இயேசையா – (2) நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள் நன்மை என்ன தீமை என்ன அழியாத கோலங்கள் – (2) நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையில் பொருளாவாய் – (2) உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள் அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக் கோலங்கள் தட்டுத் தடுமாறி விழத் தகுமான சூழல்கள் – (2) நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய் – (2) உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே

Umathu Mugam - உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை உமது திரு நாமம் அறிந்தவர்கள் கைவிடப்படுவதில்லை நம்பினோரை நீர் மறப்பதில்லை உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை உடைந்த பாத்திரம் என்று நீர் எவரையும் தள்ளுவதில்லை ஒன்றுக்கும் உதவாதோர் என்று நீர் எவரையும் சொல்லுவதில்லை இயேசு மகா ராஜா எங்கள் நேசா இரக்கத்தின் சிகரம் நீரே ஏழைகளின் பெலன் நீரே எளியோரின் நம்பிக்கை நீரே திக்கற்றோர் வேதனை அறிந்து உதவுடும் தகப்பன் நீரே