அகழ்ந்திடுவார் தம்மை Agailinthiduvar thamimai
அகழ்ந்திடுவார் தம்மை -என்றும் அன்புடன் நிலம் தாங்கும் என்னதான் குறைகள் செய்தாலும் உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும் அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வது உன்னாலே வல்லவன் நீயின்றி - என் இதயத்தில் நிறைவில்லை உந்தன் தாளில் கூடும் நானும் ஒன்றாவேன் உன்திரு நாளில் என்னுள்ளம் மங்களம் பாடும் தன்னில்லம் உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்