Posts

தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் | Devaney Arathekiren Deivamey

Image
தேவனே ஆராதிக்கின்றேன் தெய்வமே ஆராதிக்கின்றேன் அதிகாலையில் ஆராதிக்கின்றேன் ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன் கன்மலையே ஆராதிக்கின்றேன் காண்பவரே ஆராதிக்கின்றேன் முழுமனதோடு ஆராதிக்கின்றேன் முழங்காள் படியிட்டு ஆராதிக்கின்றேன் யேகோவாயீரே ஆராதிக்கின்றேன் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவானிசி ஆராதிக்கின்றேன் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவாஷாலோம் ஆராதிக்கின்றேன் எந்நாளும் சமாதானமே

நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் | Nadanmaadi Sotharipen Nadha

Image
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன் நாதா நான் உம்மைத் துதிப்பேன் கைத்தாள ஓசையுடன் கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன் காண்பவரே காப்பவரே கருணை உள்ளவரே காலமெல்லாம் வழி நடத்தும் கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா வல்லவரே நல்லவரே கிருபை உள்ளவரே வரங்களெல்லாம் தருபவரே வாழ்வது உமக்காக – ஐயா ஆண்டவரே உம்மைப் பிரிந்து யாரிடத்தில் போவோம் வாழ்வு தரும் வசனமெல்லாம் உம்மிடம்தான் உண்டு – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே அண்டி வந்தோம் ஆறுதலே அடைக்கலமானவரே

உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் | Uthavi Varum Kanmalai Noki Parkinten

Image
உதவி வரும் கன்மலை நோக்கிப் பார்கின்றேன் வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன் (2) 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க மாட்டார் (2) இஸ்ரவேலை காக்கிறவர் என்னாளும் தூங்க மாட்டார் (2) – உதவி 2. கர்த்தர் என்னை காக்கின்றார் எனது நிழலாய் இருகின்றார் (2) பகலினிலும் இரவினிலும் பாது காக்கின்றார் (2) – உதவி 3. கர்த்தர் எல்லா தீங்கிற்கும் விலக்கி என்னைக் காத்திடுவார் (2) அவர் எனது ஆத்துமாவை அனுதினம் காத்திடுவார் (2) – உதவி 4. போகும் போதும் காக்கின்றார் திரும்பும் போதும் காக்கின்றார் (2) இப்போது எப்போது என்னாளும் காக்கின்றார் (2) – உதவி

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் | Yentum Aanatham Yen Yesu Tharukintar

Image
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே (2) 1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் என்றும் தங்குவேன் தேவனை நோக்கி அடைக்கலப் பாறை என்றே சொல்லுவேன் 2. தமது சிறகால் என்னை மூடி காத்து நடத்துவார் அவரது வசனம் ஆவியின் பட்டயம் எனது கேடகம் 3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க தூதர்கள் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் காத்து கரங்களில் ஏந்துவார் 4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடந்தே செல்லுவேன் சாத்தானின் சகல வலிமையை வெல்ல அதிகாரம் எனக்குண்டு 5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு என்றும் பதிலுண்டு என்னோடு இருந்து விடுதலை கொடுத்து என்னை உயர்த்துவார் 6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு எதற்கும் பயமில்லை உன்னத தேவன் எனது அடைக்கலம் தங்கும் உறைவிடம் 7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு என்றும் விடுதலை அவரது நாமம் அறிந்த எனக்கு அவரே அடைக்கலம்

என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா | Yen Janamey Manamthirumpu Yesuvidam Odi Va

Image
என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் இன்று நீ ஆயத்தமா – மகனே 4. உன் பாவங்கள் போக்கிடவே சிலுவையை சுமந்தாரே உன் சாபங்கள் நீக்கிடவே முள்முடி தாங்கினாரே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே | Thuuya Aaviaye Bagathargal Thunayanavarey

Image
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-எங்கள் பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் - தினம் அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே-எங்கள் விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர்-தினம் அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் | Yesuvey Thudi sei manamey

Image
ஏசுவையே துதிசெய் பல்லவி ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே சரணங்கள் ஏசுவையே துதிசெய், நீ மனமே ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே 1. மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே 2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே 3. எண்ணின காரியம் யாவு முகிக்க மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா || Anbey Kalvari Anbaey ummai parkaialaye

Image
அன்பே கல்வாரி அன்பே உம்மைப் பார்க்கையிலே என் உள்ளம் உடையுதய்யா 1. தாகம் தாகம் என்றீர் எனக்காய் ஏங்கி நின்றீர் பாவங்கள் சுமந்தீர் – எங்கள் பரிகார பலியானீர் 2. காயங்கள் பார்க்கின்றேன் கண்ணீர் வடிக்கின்றேன் தூய திரு இரத்தமே துடிக்கும் தாயுள்ளமே 3. அணைக்கும் கரங்களிலே ஆணிகளா சுவாமி நினைத்து பார்க்கையிலே நெஞ்சம் உருகுதையா 4. நெஞ்சிலே ஓர் ஊற்று நதியாய் பாயுதையா மனிதர்கள் மூழ்கணுமே மறுரூபம் ஆகணுமே

கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே || Karthar mel Parathai vaithu Vidu

Image
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய் இருக்கின்றவர் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் அவரே நம்மை அணைத்துக் கொள்வார் கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் நிற்பவன் யார்? வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்போம் அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார் என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார்

எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம்|| Ekkalam Oothiduvom

Image
எக்காளம் ஊதிடுவோம் எரிக்கோவை தகர்த்திடுவோம் கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம் கல்வாரிக் கொடி ஏற்றுவோம் 1. கிதியோன்களே புறப்படுங்கள் எதிரிகளை துரத்திடுங்கள் தீபங்களை ஏந்திடுங்கள் தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் 2. சிம்சோன்களே எழும்பிடுங்கள் வல்லமையால் நிரம்பிடுங்கள் சீறிவரும் சிங்கங்களை சிறைபிடித்து கிழித்திடுங்கள் 3. தெபோராக்களே விழித்திடுங்கள் உபவாசித்து ஜெபித்திடுங்கள் எஸ்தர்களே கூடிடுங்கள் இரவுகளை பகலாக்குங்கள் 4. அதிகாலையில் காத்திருப்போம் அபிஷேகத்தால் நிரம்பிடுவோம் கழுகுபோல பெலனடைந்து கர்த்தருக்காய் பறந்திடுவோம்