Posts

எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் |el shaddai nambuven uyirullavarai ummaye

Image
எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல் நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே! உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம் எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் | karthar unnai nithamum nadathi

Image
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் துதிப்போரை கை விட மாட்டார் நுகத்தடி விரல் நீட்டை போக்கி நீபச் சொல்லை நடு நின்று நீக்கி கிருபை என்னும் மதிலை பணிவார் உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார் அவர் சொல்லி நடக்காததேது அவர் வார்த்தை தரையில் விழாது சொன்னதிலும் அதிகம் செய்வார் உன்னை நன்றியுடன் பாட செய்வார் கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி மா வரட்சியில் திரட்சியை தருவார் உன் ஆத்துமாவை திருப்தி செய்வார் தொடர்ந்து துதி செய் மனமே உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார் துதிப்போரை கை விட மாட்டார்

உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக || Unnathangalile iraivanuku maatchimai

Image
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக  உலகினிலே நல்மனத்தவர்க்கு  அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர் உலகின் பாவம் போக்குபவரே எம்மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர் ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்  மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமேன்.  

மரியன்னை மன்றாட்டு மாலை

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா தூய்மை நிறை மூவொரு இறைவா புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவனின் புனித அன்னையே கன்னியருள் சிறந்த கன்னியே கிறிஸ்துவின் அன்னையே இறையருளின் அன்னையே தூய்மைமிகு அன்னையே கன்னிமை குன்றா அன்னையே அன்புக்குரிய அன்னையே வியப்புக்குரிய அன்னையே நல்ல ஆலோசனை அன்னையே மீட்பரின் அன்னையே திருச்சபையின் அன்னையே அறிவுமிகு அன்னையே போற்றுதற்குரிய அன்னையே வல்லமையுள்ள அன்னையே தயையுள்ள அன்னையே நம்பிக்கைக்குரிய அன்னையே நீதியின் கண்ணாடியே ஞானத்திற்கு உறைவிடமே எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே ஞானப் பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே பக்தி நிறை பாத்திரமே மறைபொருளின் நறுமலரே தாவீது அரசரின் கோபுரமே தந்த மயமான கோபுரமே பொன் மயமான ஆலயமே உடன்படிக்கையின் பேழையே விண்ணகத்தின் வாயிலே விடியற்காலையின் விண்மீனே நோயுற்றோரின் ஆரோக்கியமே பாவிகளுக்கு அடை...

மங்களம் மங்களம் மங்களமே ,Mangalam Mangalam Mangalamae

Image
மங்களம் மங்களம் மங்களமே 1. மணமக்கள் மாண்புரவே மணவாழ்வு இன்புரவே மணவாளன் இயேசுவின் மாசில்லா ஆசியால் மணமக்கள் இணைந்திடவே ஆ ஆ ஆ 2. ஆதாமும் ஏவாளோடும் ஆபிரகாம் சாராளோடும் ஆதியில் ஆண்டவன் அனாதி திட்டம்போல் ஆண்பெண்ணும் சேர்ந்திடவே ஆ ஆ ஆ 3. இல்லறம் நிலங்கிடவே நல்லறம் தொலங்கிடவே வல்லவன் வான்பதன் வழிகாட்டும் வார்த்தையில் பல்லாண்டு வாழ்ந்திடவே ஆ ஆ ஆ

கானாவூரின் கல்யாணத்தில் தான் | Kaanavorin kalyaanaththil thaanTheyvamakan thaamae puthumai seythaar

Image
கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வமகன் தாமே புதுமை செய்தார் 1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் ஆகா நான் எங்கு காண்பேனோ இயேசு என் நேசர் போல் 2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார் தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் ஆகா நான் எங்கு காண்பேனோ நேசர் என் இயேசு போல்

சிலுவைப் பாதையின் 14 நிலைகள்|| 14 Stations of Way of the Cross

Image
1. இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார் Jesus is  Condemned to Death 2. இயேசுவின் மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள் Jesus takes up his Cross 3. இயேசு முதல் முறை தரையில் விழுகிறார் Jesus falls for the first time 4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார் Jesus meets his mother Mary 5. சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமக்க உதவுகிறார். Simon of cyrene helps Jesus carry the Cross 6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் முகத்தைத் துணியால் துடைக்கிறார் Veronica wipes the face of Jesus 7. இயேசு இரண்டாம் முறை தரையில் விழுகிறார் Jesus falls for the second time 8. இயேசு எருசலேம் பெண்களைச் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் Jesus meets the women of Jerusalem 9. இயேசு  மூன்றாம் முறை நரையில் விழுகிறார் Jesus falls for the Third Time 10. இயேசுவின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகிறார்கள் Jesus is stripped of his garments 11. இயேசுவை சில...

அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் Azlagai Nirkum Yar Ivargal

Image
அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் போர்களத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள் 1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் 2. காடு மேடு கடந்து சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் 3. தனிமையிலும் வறுமையிலும் இலாசர் போன்று நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் 4. எல்லா சாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின்கீழ் இயேசு இரத்தத்தால் சீர்போராட்டம் செய்து முடித்தோர் 5. வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு வெள்ளை குருத்தாம் ஓலைப் பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனமுன் ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகம் அடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை 7. ஆட்டுகுட்டிதான் இவர் கண்ணீரை ஆறஅகற்றி துடைதிடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றிற்கு அள்ளிப்பருக இயேசுதாமே

ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை அருளிச் செய்தீரே|| Aadhiyil Aethaenil Aathaamuk Kaevaalai Arulich Seytheerae

Image
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை அருளிச் செய்தீரே அவ்விதமாகவே இவ்விரு பேரையும் இணைத்தருள்வீரே 1. மங்களமாய் திருமறையைத் தொடங்கி மங்களாமாய் முடித்தீர் மங்கள மா மணவாளனாய் மைந்தரை மாநிலத்தில் விடுத்தீர் 2. ஆபிரகாம் எலியேசர் தம் மன்றாட்டுக் கருள் புரிந்தீரே அங்ங்னமே இந்த மங்களம் செழிக்க ஆசியருள்வீரே 3. கானாவூர் கலியாணம் கண்டு களித்த எம் காத்தரே வந்திடுவீர் காசினி மீதிவர் நேசமாய் வாழ்ந்திட கிருபை செய்திடுவீர் 4. இன்பமும் துன்பமும் இம்மண மக்கள் தாம் இசைந்து வாழ்ந்திடவே அன்பர் உம் பாதம் ஆதாரம் என்றும்மை அணுகச் செய்திடுவீர்

ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் |Aathiyilae Oru Kalyaanam Athu Aethaenilae Nadantha Kalyaanam

Image
ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் – 3 டும் டும் டும் மேளம் இல்லை பிப்பி பிப்பி பிப்பி நாதம் இல்லை – 2 அலங்கார மேடையில கல்யாணத்துக்கு ஆளும் இல்லை மண்ணக்கட்டி மாப்பிள்ளை எலும்பு அக்கா பொண்ணு – 2 ஆதியிலே – 1 மண்ணக்கட்டி மாப்பிள்ளை ஆதாம் அண்ணச்சி பொண்ணு எலும்பு அக்காவும் ஏவாள் தானங்க – 2 தேவன் அவர் உறவிலே தினமும் இன்பம் கட்டுங்க – 2 ஆதியிலே ஒரு கல்யாணம் அது ஏதேனிலே நடந்த கல்யாணம் கல்மாணம் – 1 சாத்தான் வந்த வேளையில் பாவம் வந்தது பாவம் வந்த பின்னாலே சாபம் வந்தது -2 இன்பமெல்லாம் மாறிட்டு துன்பம் வந்து சேர்ந்தது – 2 மானிடரே மானிடரே நல்ல கேளுங்க மன்னன் இயேசு உறவிலே செழித்து வாழுங்க – 2 ஜெபம் வேத வாசிப்பும் ஜெயம் பெறு வாழ்விலே – 2