Posts

உம்மை நேசித்திட கற்று தாருமே உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே| Ummai Nesithida Kartu Tharum Ummai

Image
உம்மை நேசித்திட கற்று தாருமே   உம்மை பற்றிக்கொள்ள கிருபை வேண்டுமே  மாயையினால் மனம் மயங்காமலே  என் கண்கள் உம்மை விட்டு விலகாமலே  ஜீவிய பாதையில் வழுவாமலே  என்னை காத்துக்கொள்ளும் எந்தன் ஆத்தும நேசரே  உம்மை பிரியா வரம் என்றும் வேண்டுமே  உம்மில் மூழ்கி அன்பில் கரைந்து போகவே - மாயையினால்  உம்மில் நிலைத்திருக்க பெலன் தாருமே  உமதன்பெல்லாமல் எதுவும் வேண்டாமே - மாயையினால் 

சாத்தான் ரொம்ப பொல்லாதவன் / sathan romba pollathavan

Image
சாத்தான் ரொம்ப பொல்லாதவன்  என்னை விடவே மாட்டான்  இயேசு அப்பா பேர சொன்ன  தொடவே மாட்டான்  அவர் அன்பு அவர் தயவு  எனக்குள் வந்ததும்  பயமில்லை (3) பயமில்லை (3)

உனக்காக நான் மரித்தேனே / unakaga naan marithene

Image
உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? உந்தன் சிலுவை சுமப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா? ஊழியம் செய்ய வருவாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப்புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி போகிறாயா? மேன்மையை நாடி போகிறாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? ஜீவ அப்பம் கொடுப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய்

பலத்தினாலும்‌ அல்ல பராக்கிரமத்தாலும்‌ அல்ல / balathinalum alla barakiramathinalum alla

Image
பலத்தினாலும்‌ அல்ல பராக்கிரமத்தாலும்‌ அல்ல உம்‌ ஆவியாலே எல்லாம்‌ ஆகிடும்‌ அன்பரே உந்தன்‌ பாதம்‌ அண்டி நான்‌ வந்துவிட்டேன்‌ உம்‌ ஆவியாலே அபிஷேகியும்‌ 1. குறைகளை மறைப்பவன்‌ வாழ்வடையான்‌ அறிக்கையைச்‌ செய்கிறவன்‌ தாழ்வடையான்‌ பரிசுத்தனாகவே நான்‌ வாழ்ந்திடவே பாவியாம்‌ என்மேல்‌ இரங்கிடுமே -- பலத்தினாலும்‌ 2. சுயமாக நான்‌ ஒன்றும்‌ செய்யாமலே நிதானித்து உந்தன்‌ சித்தம்‌ செய்திடவே - சமர்ப்பித்து உந்தன்‌ பாதம்‌ அடிபணிந்தேன்‌ ஆவியால்‌ மறுரூபம்‌ ஆகிடுவேன்‌ -- பலத்தினாலும்‌ 3. எதிரியாம்‌ பிசாசை நான்‌ வீழ்த்திடவே நீர்‌ ஜெயித்தது போல ஜெயித்திடவே வசனத்தில்‌ நிலைத்திடச்‌ செய்திடுமே உன்னதா! உம்மோடென்னை இணைத்திடுமே -- பலத்தினாலும் 4. விருதினைப்‌ பெற்றுக்கொள்ள உதவிடுமே விருதாவாய்‌ ஓடிடாமல்‌ காத்திடுமே ன்னானவைகளை நான்‌ மறந்திடுவேன்‌ "உம்மை நான்‌ அடைந்திட தொடர்ந்திடுவேன்‌ -- பலத்தினாலும்‌ 5. என்று நீர்‌ வருவீரோ என்‌ இயேசுவே ஏங்குதென்‌ உள்ளம்‌ உம்மோடிணைந்திடவே நேசத்தின்‌ அனல்‌ என்னில்‌ எரிந்திடுதே நேசரை என்றென்றுமாய்‌ மணந்திடவே -- பலத்தினாலும்‌

வானகத் தூதர் அணி மகிழ்வதாக, பாஸ்கா புகழுரை, Vanaga Thoodar Anni mazkilvathaga

Image
கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி வானகத் தூதர் அணி மகிழ்வதாக இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக. இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த இருளனைத்தும் ஒழிந்ததென்று உணர்வதாக. திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக. இறைமக்கள் அனைவரது பேரொலியால் இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக. (எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே. தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் (திருத்தொண்டருள்) சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என்மீது வீசி இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக). முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. பதில்: உம்மோடும் இருப்பாராக. முன். இதயங்களை ஆண்டவரி...

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம், Ovaoru Pakirvum Punnitha Veyaalanam.

Image
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம் அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் (2) 1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே (2) வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே (2) நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம் -2 நாளைய உலகின் விடியலாகவே 2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே (2) இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே (2) இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் -2 இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

Easter Photos

Image

சகல புனிதர்களின் மன்றாட்டுமாலை

ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும் கிறிஸ்துவே, இரக்கமாயிரும் - கிறிஸ்துவே, இரக்கமாயிரும் ஆண்டவரே, இரக்கமாயிரும் - ஆண்டவரே, இரக்கமாயிரும் புனித மரியாயே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித மிக்கேலே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவனின் புனித தூதர்களே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். புனித ஸ்நாபக அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித இராயப்பரே, புனித சின்னப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். புனித பெலவேந்திரரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அருளப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித யாகப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித மதலேன் மரியம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித ஸ்தேபானே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித லவுரேஞ்சியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித லாரன்சே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித பெர்பேத்துவா பெரிசித்தம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். புனித அஞ்ஞேசம்மாளே - எங்களுக்காக வ...

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் வந்தார்,mannuyirkkaakath thannuyir vidukkavalla paraaparan vanthaar vanthaar

Image
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் வந்தார் இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே ஏகபராபரன் வந்தார் வந்தார் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் மகிமைப் பராபரன் வந்தார் வந்தார் நித்திய பிதாவின் நேய குமாரள் நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார் மெய்யான தேவன் மெய்யான மனுடன் மேசியா ஏசையா வந்தார் வந்தார் தீவினை நாசர் பாவிகள் நேசர் தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார் ஜெய அனுகூலர் திவ்விய பாலர் திரு மனுவேலனே வந்தார் வந்தார்

சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார், sarva vallavar en sonthamaanaarsaavai ventavar en jeevanaanaar

Image
சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார் ஆ…இது அதிசயம் தானே ஓ……இது உன்மை தானே கண்டு கொண்டேன் ஒரு புதையல் பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர் இயேசுதான் என் ராஜா சந்தோஷமும் சமாதானமும் என் உள்ள்த்தில் பொங்குதம்மா பாவமெல்லாம் போக்கிவிட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் பரலோகத்தில் எனது பெயர் எழுதிவிட்டார் என் இயேசு என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வது தான் ஊரெல்லாம் சொல்லிடுவேன் உலகமெங்கும் பறைசாற்றுவ்ன் ஜீவிக்கின்றார் என் இயேசு சீக்கிரமாய் வந்திடுவார் உயிரொடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்       அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்