போர் வீரரான விமாணியை காப்பாற்றிய ஜெபமாலை!
ஒரு முறை ஐந்து போர் விமானங்கள் ஆள் நடமாட்டமில்லா அடர்ந்த காட்டில் விபத்திற்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த ஐந்து போர் வீரர்களும் விபத்தில் இறந்திருப்பார்கள் என்று நம்பப்பட்டது. அந்த வீமானத்தையும், அவர்கள் சடலத்தையும் தேடும் பணி துதிரிதப்படுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்குப் பின் அந்த இடத்தை அடைந்தார்கள். ஐந்து விமானங்களும் நொறுங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் அவர்களுக்கு காத்து இருந்தது. ஒரே ஒரு போர்வீரர் விமானி மட்டும் உயிருடன் இருந்தார். மற்ற நான்கு வீரர்களும் இறந்திருந்தனர். அவர்கள் ஆச்சரியம் மிகுந்தது. எப்படி இந்த ஆள் இல்லா அடந்த காட்டில் தண்ணீர், உணவு இல்லாமல் எப்படி உயிர் வாழ்ந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்தான் அதிலும் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. “நான் இவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ்ந்ததிற்கு நான் சொல்லிய ஜெபமாலையே காரணம். எனக்கு இங்கே நீரும் இல்லை. உணவும் இல்லை. ஆனாலும் நான் விடாமல் ஜெபமாலை சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு ஜெபமாலையே நீரும் உணவுமாகியது. நான் இடைவிடாமல் சொல்லிய ஜெபமாலையே என்னை இவ்வளவு நாட்கள் உயிரோடு காப்...