நற்கருணையின் வரலாறு
நற்கருணையின் வரலாறு நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்தவ சமுதாயத்தின் செயலாக இருந்த நிலைமாறி குருக்களின் கொண்டாட்டமாக மாறியது இறையியல் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய திருப்பம். சமயக் கலவரக் காலங்களில் ஆயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது தியாகமும் திருச்சபையின் ஒற்றுமையுமே முன்னோங்கி நின்றன. ஆனால் கால வெள்ளத்தில் நற்கருணை குருக்களின் தனிச் சொத்தாகக் கருதப்பட்டதே ஏன்? என்ற கேள்வி இங்கு எழும்புகிறது. 2.1 குடும்பத் திருச்சபை பேராலயத் திருச்சபையாக..... எருசலேமிலிருந்து உரோமையை நோக்கிய நற்செய்திப் பயணம் உரோமை அரசை கிறிஸ்தவ மயமாக்குதலில் முடிந்தது. நற்செய்தியை அறிவித்து மனித சமுதாயத்தை இறையரசின் விழுமியங்களுக்கு ஏற்ப உருவாக்க வேண்டிய திருச்சபை உரோமை அரசின் சலுகைகளில் மயங்கி அரசாங்க சமயமாகி தன்னுடைய இலட்சியப் பாதையிலிருந்து பல வகைகளில் திசை திரும்பியதை வரலாறு நமக்குச் சொல்லும். திருச்சபை வலுவான அமைப்பாகி உலகமெங்கும் நற்செய்தியை அறிவிக்க மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதுதான். அத்தனை ஆண்டுகளாக குகைகளிலும், வீடுகளிலும் தங்களை மறைத்து கொண்டிருந்த திருச்சபை கூரைமேல் இருந்து நற்செய்தி அறிவிக்க சில தளங்கள் கி...