ஐம்பத்து மூன்று மணி ஜெபமாலை
அளவில்லாத சகல நன்மைச் சுரூபியாயிருக்கிற சர்வேசுரா சுவாமி! நீச மனுருமாய் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்கள், மட்டில்லாத மகிமைப் பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய சந்நிதியிலே இருந்து ஜெபம் பண்ண பாத்திரம் ஆகாதவர்களாயிருந்தாலும் தேவரீருடைய அளவில்லாத தயையை நம்பிக்கொண்டு தேவரீருக்கு ஸ்துதி வணக்கமாகவும், அர்ச்சியசிஷ்ட தேவமாதாவுக்குத் தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம்; இந்தச் செபத்தைப் பக்தியோடே செய்து பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசை கட்டளை பண்ணியருளும் சுவாமி. சகலமான புண்ணியங்களுக்கும் விசுவாசமென்கிற புண்ணியம் அஸ்திவாரமா யிருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாச மந்திரம் சொல்லுகிறது. (விசுவாச மந்திரம்) மெய்யான சர்வேசுரனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற சேசுநாதர் சுவாமி படிப்பித்த பரலோக மந்திரம் சொல்லுகிறது. பர... பரிசுத்த கன்னியாஸ்திரீயாயிருக்கிற தேவமாதாவினுடைய பிரதான மகிமைகளைக் குறித்து மூன்று பிரதான புண்ணியங்களைக் கேட்கிற வகையாவது: பிதாவாகிய சர்வேசுரனுக்குக் குமாரத்தியாயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே, எங்களிடத்தி...