அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் இப்போது உன்னைத் தேடி வந்தேன்|| Appa Un Pillai Thavaru Seithen

அப்பா உன் பிள்ளை தவறு செய்தேன் இப்போது உன்னைத் தேடி வந்தேன் இறைஞ்சுகிறேன் இரக்கம் வையும் ஏற்றருளும் இறைவா 1. செல்வத்தைப் புகழ்ந்தேன் ஏழ்மையை இகழ்ந்தேன் உன்னை இழந்தேன் ஊதாரி ஆனேன் (2) பெற்றோரின் பெருமையை மறந்தே திரிந்தேன் -2 பாவங்கள் அனைத்திலும் உழன்றே நொந்தேன் 2. தந்தை உன் அன்பை ஏற்றிட மறந்தேன் மந்தையைப் பிரிந்த செம்மறி ஆனேன் (2) நிந்தனை புரிவோர் வழியில் கலந்தேன் -2 உந்தனை நினைத்தேன் திரும்பி வந்தேன் 3. பாவத்தின் சுமையை இன்றுதான் உணர்ந்தேன் பண்புள்ள தந்தாய் அண்டி வந்தேன் (2) கதியென்று செல்ல வேறிடம் இல்லை -2 கையேந்தி கேட்கிறேன் உந்தன் பிள்ளை