Posts

Showing posts with the label திருமறைச் சுவடி

உயிர்த்த இயேசு விண்ணேற்றம் அடையும் வரை என்ன செய்தார்?

Image
உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குப் பல முறை தோன்றி அவர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி வந்தார். 

சிலுவைச் சாவோடு இயேசுவின் வாழ்வு முடிந்துவிட்டதா?

Image
இல்லை. இயேசு தாம் முன்னுரைத்தவாறு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயிர்த்த நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். உலக முடிவு வரை எந்தநாளும் நம்முடன் இருக்கிறார்.

இயேசு நமக்காக அனுபவித்த முக்கியமான பாடுகள் யாவை?

Image
1. யூதத் தலைவர்களால் எதிர்க்கப்பட்டார். 2. கெத்சமனித் தோட்டத்தில் இரத்த வியர்வை சிந்தினார். 3. யூதாசால் காட்டிக் கொடுக்கப்பட்டார். 4. கல்லூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டார் 5. முள்முடி சூட்டப்பட்டார். 6. சிலுவையில் அறையுண்டு வேதனைப்பட்டு அவலச் சாவுக்கு உள்ளானார்.

இயேசு எவ்வாறு நம்மை மீட்டார்?

Image
இயேசு தம் விண்ணகத் தந்தையின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். நம் பாவங்களுக்காகப் பாடுபட்டு, சிலுவையில் இறந்தார். கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்தார். இவ்வாறு நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்தார். 

இயேசு கிறிஸ்து யார்?

Image
இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளும் மனிதரும் ஆனவர்; பாவத்திலிருந்து நம்மை மீட்பவர். கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள உறவில் நிறை வாழ்வு காண நமக்கு வழி காட்டுபவர்‌. 

இயேசு செய்த முக்கியமான அரும் அடையாளங்கள் யாவை?

Image
1. தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். 2. அப்பம் பலுகச் செய்தார். 3. புயலை அடக்கினார்; கடல்மீது நடந்தார். 4. நோய்களைக் குணப்படுத்தினார். 5. பேய்களை ஓட்டினார். 6. இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார். 7. தாம் இறந்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். 

தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு எவ்வாறு வெளிப்படுத்தினார்?

Image
தம் அரும் அடையாளங்களாலும் போதனையாலும் பாவிகளை மன்னித்ததாலும் சிலுவைச் சாவையே ஏற்றதாலும் தாம் கடவுளின் மகன் என்பதை இயேசு வெளிப்படுத்தினார்.

பிறர் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. இயேசு நம்மை அன்பு செய்வதுபோல நாமும் ஒருவர் ஒருவரை அன்பு செய்ய வேண்டும். 2. பகைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும். 3. இயேசு நம்மை மன்னிப்பதுபோல நாமும் பிறரை மன்னித்து வாழ வேண்டும்.

கடவுளின் அன்பைப் பற்றி இயேசு கூறுவது என்ன?

Image
1. கடவுள் நம் அனைவரின் அன்புத் தந்தை; நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகள். 2. அனைத்திற்கும் மேலாக நாம் கடவுளை அன்பு செய்ய வேண்டும்.

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் எப்படி கடவுள்?

Image
யாதொரு வேறுபாடும் இன்றி, மூவருக்கும் ஒரே அன்புறவு, ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே.

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் மூன்று கடவுளா அல்லது ஒரே கடவுளா?

Image
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் ஒரே கடவுளே. 

தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுளா?

Image
ஆம் தந்தை, மகன் மற்றும் தூய ஆவியார் கடவுள்தான்.

இயேசு திருமுழுக்குப் பெற்ற போது நடந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்கிறோம்.?

Image
கடவுள் ஒருவரே என்றும், அவர் தந்தை, மகன், தூய ஆவியார் என மூன்று ஆள்களாய் இருக்கிறார் என்றும் அறிந்து கொள்கிறோம். இந்த உண்மையையே மூவொரு கடவுளின் மறைபொருள் என்கிறோம்.

இயேசு திருமுழுக்குப் பெற்றவுடன் என்ன நிகழ்ந்தது?

Image
வானம் திறக்க, கடவுளின் ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்கி வந்தார். அப்பொழுது "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. இதன் பிறகு இயேசு தமது மீட்புப் பணியை வெளிப்படையாகத் தொடங்கினார்.

இயேசு யாரிடம் திருமுழுப் பெற்றார்?

Image
இயேசு திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

இயேசு திருமுழுக்குப் பெற்றாரா?

Image
ஆம், தமது முப்பதாம் வயதில் திருமுழுக்குப் பெற்றார்.

இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

Image
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார். 2. நாசேரேத்தில் வளர்ந்து வந்தார். 3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். 4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார். 5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்‌

இயேசுவின் தந்தை யார்?

Image
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே 

இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?

Image
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார் 

இயேசுவின் தாய் யார்

Image
இயேசுவின் தாய் எப்போதும் கன்னியான தூய மரியா