நிந்தையும் கொடிய வேதனையும் நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை, Ninthaiyum Kodiya Vethanaiyum
நிந்தையும் கொடிய வேதனையும் நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை சிந்தையில் கொண்டு தியானிக்கவே தினம் அருள் புரிவீர் ஆண்டவரே சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு 1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம் இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம் மாசற்ற செம்மறி ஆனவர்க்கு மரண தண்டனையாம் விதித்து நின்றோம் அவரோ மௌனம் காத்துநின்றார் அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார் -சிலுவையிலே 2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை பரமனின் திருவுளம் நிறைவுறவே ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார் ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி எனைப்பின் செல்பவன் தனை மறுத்து சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார் -சிலுவையிலே 3. சிலுவையின் பாரம் அழுத்தியதால் திருமகன் தரையில் விழலானார் வலுவற்ற அடியோர் எழுந்திடவே வல்லப தேவா வரமருள்வீர் எமைப் பலப்படுத்தும் அவராலே எல்லாம் செய்திடக் கூடுமன்றோ -சிலுவையிலே 4. உதிரம் வியர்வைத் தூசியினால் உருவிழந்திருந்த தன் மகனை எதிர்கொண்டு வந்த அன்னை மனம் இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம் அந்நிய காலம் வரையெங்கள் அடைக்கலமாய் நீ இருந்திடம்மா -சிலுவையிலே 5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல உதவிய சீமோன் போல் யா...