Posts

Showing posts with the label வருகை பாடல்

வருக வருகவே வசந்த மலர்களே மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள்

Image
வருக வருகவே வசந்த மலர்களே மலர்ந்திடவே மகிழ்ந்திடவே விரைந்து வாருங்கள் எழுக எழுகவே இறைவன் காணவே இனிமை ததும்ப இன்னிசையில் இணைந்து வாருங்கள் 1. சுமை சுமந்து சோர்ந்த வாழ்வை மறந்து வாழுவோம் சுகம் நிறைந்து மலர்ந்த வாழ்வை மகிழ்ந்து வாழுவோம் ஆனந்தம் காணவே அவரிலே கூடுவோம் இருகரங்கள் விரித்தவராய் அழைக்கும் இறைவன் குரலைத் தேடி 2. உலகம் யாவும் இனி அவரின் ஆட்சி ஆக்குவோம் உண்மை விதைத்து உலகை அவரின் மாட்சி ஆக்குவோம் அமைதியின் தூதராய் அவரிலே வாழுவோம் ஆதவனாய் ஒளிவீசி அழைக்கும் இறைவன் குரலைத் தேடி

வருவாய் இன்று கிறிஸ்தவ குலமே கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று

Image
வருவாய் இன்று கிறிஸ்தவ குலமே கிறிஸ்து விடுத்த அழைப்பினை ஏற்று 1. வேதத்தின் நிறைவாம் வார்த்தையளிக்கும் விருந்தினை யுண்ண விரைவாய் குலமே உண்போர் எல்லாம் ஓர் குலமாகி உன்னத பலியை உவந்தே செலுத்த 2. திருநீராட்டால் வந்தது உரிமை திருப்பலி தனையே செலுத்தும் அருமை கிறிஸ்துவை அறியா உலகுக்குப் புதுமை கிறிஸ்தவக் குலமே உந்தன் பெருமை 3. கிஸ்துவின் வழியில் வருவது குருவே கீதங்கள் முழங்க நுழைவதும் அவரே பாவங்கள் போக்கிப் பகைமையை நீக்கும் மீட்பின் பலியை மீளவும் செலுத்த

வாரீர் இறையடி தொழவே வாரீர்அருள்தனைப் பெறவே வாரீர்

Image
வாரீர் இறையடி தொழவே வாரீர் அருள்தனைப் பெறவே வாரீர் திரண்டிடும் அலையென முகிழ்ந்திடும் மழையென மகிழ்ந்து விரைந்து வாரீர் 1. மஞ்சள் முகமது மங்களப் புன்னகை பொங்கிட மங்கையர் வாரீர் வஞ்சம் துளி கூட இன்னும் நுழையாத பிஞ்சு மனங்களே வாரீர் வங்கக்கடல் போல பொங்கும் உளம் கொண்ட சங்கத் தமிழரே வாரீர் தங்கள் பணி தீர்ந்த நெஞ்ச நிறைவோடு தாங்கும் முதியவரே வாரீர் 2. வறுமை பிணியிலே வாழ்வு சுமையாக வாடும் சோதரர் பாரீர் விழிகள் குளமாகி வழியும் நீர் தேக்கி விம்மும் குரலினைக் கேளீர் சிறிய சகோதரர்க்கு செய்த பணி எல்லாம் தேவன் பணிதான் என்று அறிய உண்மையினை அறிந்து அன்பு வரம் அடைய இன்று நீர் வாரீர் 3. தரணி மீட்பதற்கு இறையின் ஏக மகன் இயேசுவே இங்கு வந்தார் வருந்தி மலைமீது இறந்து உயிர்த்து நாம் இழந்த வாழ்வுதனை வென்றார் அடைந்து அவர் தந்த அருளின் திருவாழ்வை விசுவாசத்தாலே பெறுவோம் தடைகள் ஏதுமில்லை வரங்கள் பெறுவதற்கு விரைந்தே நாமும் வருவோம்

வாருங்கள் அன்பு மாந்தரே பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப்

Image
வாருங்கள் அன்பு மாந்தரே பலி செலுத்த வாருங்கள் பண்ணிசைத்துப் பாடுங்கள் 1. இயேசு என்னும் ஆதவன் கதிர் விரிக்கக் காணுங்கள் இதயம் என்ற மலர் விரித்து மணம் பரப்ப வாருங்கள் ஆசை என்ற இருள் மறைந்து அன்பு உதயமாகவே அருள் வழங்க இதயம் சேரும் அன்புருவைக் கேளுங்கள் 2. அன்பு என்றால் என்னவென்று அவனைக் கேட்டுப் பாருங்கள் அத்தனையும் தருவதுதான் அன்பு என்று கூறுவான் தன்னை ஈந்து அன்பு செய்த தேவன் இங்கு வருகின்றார் தம்மை முற்றும் தந்து இன்று யாவும் பெற்றுத் திரும்புவோம்

வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட

Image
வாருங்கள் இறைமக்களே இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட 1. குருவுடன் கூடி குடும்பமாய் மாறி இறைவனை உண்டு புனிதராய் மாறிட 2. இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே 3. பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட 4. என்றுமே வாழும் இறைவனை உண்டு என்றும் நல் வாழ்வில் அவருடன் வாழ்ந்திட

வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம் இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம்

Image
வாருங்கள் வாருங்கள் இறைமக்கள் ஒருங்கிணைவோம் இறைவனின் பலியினில் இதயத்தை இணைத்திடுவோம் இதைவிட அதிசயம் ஏதுமில்லை - இந்த திருப்பலிக்கிணையிங்கு எதுவுமில்லை இணைவோம் பகிர்வோம் நிறைவடைவோம் 1. வார்த்தையின் வடிவினில் பேசிடும் கடவுள் வாழ்ந்திட வழி சொல்லும் பலியிதுவே உழைப்பின் கனிகளை காணிக்கையாக உவப்புடன் ஏற்றிடும் பலியிதுவே தன்னுடல் தந்து நம்மையே காக்கும் தியாகத்தின் பகிர்வின் பலியிதுவே 2. உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேற்றுமை அகற்றி சமத்துவம் சமைத்திடும் பலியிதுவே மனதின் சோதனை வேதனை அனைத்தும் வென்றிட வலுதரும் பலியிதுவே தோல்விகளாலே துவண்டிடும் வேளை துணிச்சலை தருகின்ற பலியிதுவே

வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழ்ந்திடவே

Image
வாருங்கள் வாருங்கள் பலியினில் கலந்திடவே கூடுங்கள் கூடுங்கள் இறைவனில் மகிழ்ந்திடவே இகத்தில் என்றும் இனிதாய் வாழ இறைவன் ஆசீர் நம்மில் மலர ஒன்றாய் கூடிடுவோம் இணைந்தே பாடிடுவோம் 1. இறைவன் நம்மில் வாழ்ந்திட வேண்டும் ஆ நாமும் இறைவனில் வளர்ந்திட வேண்டும் ஆ உறவில் நாளும் நிலைத்திடவே உண்மை தேவனை அறிந்திடவே 2. இறைவன் பாசத்தை சுவைத்திட வேண்டும் ஆ தந்தை இறைவனில் கலந்திட வேண்டும் ஆ கருணை உள்ளத்தில் நனைந்திடவே என்றும் அவரில் சேர்ந்திடவே

விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே

Image
விடுதலை இராகங்கள் விடியலின் கீதங்கள் முழங்கிட வாருங்களே புது உலகமைத்திட புதுவழி படைத்திட அன்புடன் வாருங்களே வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள் அனைவரும் வாருங்களே 1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார் உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து அன்பினில் நாம் இணைவோம் 2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும் வறுமைப் பிடியிலே அலறும் குரல்களே இறைவன் மொழியாகும் பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் இறைவனின் அரசின் இனிமையைக் காண இன்றே முயன்றிடுவோம்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் இறைவன் குரலைக் கேட்டு எழுந்து வாருங்கள் அழைக்கும் அவரில் சங்கமமாக விரைந்து வாருங்கள் பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே படைத்த தேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள் 1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார் பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே பரமதேவன் புகழ் பரப்ப பணிந்து வாருங்கள் 2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார் வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

அழைக்கும் இறை உன் குரல் கேட்போம் உம் அழைப்பினை ஏற்றுப் பின்தொடர்வோம் | Azlaikum Irai Un Kural Ketpom

Image
அழைக்கும் இறை உன் குரல் கேட்போம் உம் அழைப்பினை ஏற்றுப் பின்தொடர்வோம் எரியும் புதரில் மோயிசனை வீசும் காற்றில் எலியாசை இடியின் ஒலியில் சின்னப்பரை இறைவன் அழைத்து வா என்றுரைத்தார் அழைப்பை ஏற்று விரைகின்றோம் அருளால் நிறைத்து வாழ வைப்பாய் தனக்கென வாழாப் பணி ஏற்றோம் பிறர்க்கென வாழும் வரம் நல்கிடுவாய் தகுதியில்லாத எமை ஏனோ இறைவா விரும்பி அழைத்தாயோ உனக்கென உள்ளத்தை அளிக்கின்றோம் உறவென உனையாம் அடையச் செய்திடுவாய்

அழைக்கின்றார் அழைக்கின்றார் ஆண்டவர் நம்மை அழைக்கின்றார் அன்புடனே ஆர்வமுடன் அண்ணலின் | Azlaikintar Azlaikintar Andavar namai Azlaikintar Anbudaney

Image
அழைக்கின்றார் அழைக்கின்றார்  ஆண்டவர் நம்மை அழைக்கின்றார் அன்புடனே ஆர்வமுடன் அண்ணலின்  அடிகளைத் தொடர்ந்திடுவோம் திருப்பலி செலுத்திட அழைக்கின்றார் திருமுன் பணிந்திட அழைக்கின்றார் ஆ... ஆ‌... ஆ... விருந்திலே கலந்திட அழைக்கின்றார்  விண்ணருள் தந்திட அழைக்கின்றார் தாபோர் மலைக்கு அழைக்கின்றார் தம்மையே காட்டிட அழைக்கின்றார் கல்வாரி மலைக்கும் அழைக்கின்றார் ஆ... ஆ... ஆ‌‌... கல்வாரி மலைக்கும் அழைக்கின்றார் தம்மையே தந்திட அழைக்கின்றார்.

உன் இல்லம் என்னும் ஆலயத்தில் நுழைகையிலே இறைவா, Un Illam yennum Aalaythil Nullaikaiyil Iraiva lyrics

Image
உன் இல்லம் என்னும் ஆலயத்தில் நுழைகையிலே இறைவா இன்பம் பொங்கிடும் இன்னல் எல்லாம் தீர்ந்திடும் அருள் தங்கிடும் இருள் எல்லாம் நீங்கிடும் எந்தன் உள்ளம் என்னும் மாளிகையில் (2) 1. தேன் சிந்தும் மலர்களாய் வந்தோம் தேடி உந்தன் பாதம் அமர்ந்திடுவோம் (2) உன் வழியில் நடந்திடுவோம் உன் ஒளியில் வாழ்ந்திடுவோம் -2 உயிரில் இன்பங்கள் சொந்தங்கள் ஆயிரம் - எங்கள் 2. ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை ஆனந்தத்தில் எங்கள் குரலோசை (2) வேதனைகள் மறைந்திடுமே தேன்துளிகள் நிறைந்திடுமே -2 உயிரில் உன்னருள் இன்பங்கள் ஆயிரம் - எங்கள்

வாருங்கள் இறை மக்களே கடல் அலையெனவே வாரீர், vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer

Image
வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்  நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக  அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்  சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே  எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2  வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே  வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்  தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்  அருள் ஒளி மனதினில் கலந்திடவே  கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2  மனிதனில் மனிதம் மலர்ந்திடவே  எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்  உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே  இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்

ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட, Aanantham Poongida Athisaiyangal Nandantida

Image
ஆனந்தம் பொங்கிட அதிசயங்கள் நடந்திட ஆண்டவன் சந்நிதிக்கு விரைந்து வாருங்கள் திருப்பலி பீடத்தில் தேவன் வருகிறார் திருந்திய உள்ளங்களில் அமைதி தருகிறார் 1. வறுமை யாவும் தீர இன்று வாழ்த்துப் பாடுவோம் பாடுவோம் பெருமை யாவும் நிலைக்க அவரில் சங்கமாகுவோம் அவரில் சங்கமம் வாழ்வில் சந்தோஷம் அவரில் நிலைத்திருந்தால் மிகுந்த கனி கொடுப்போம் சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே 2. உறவில் வளர உண்மை வழியில் வாழ்ந்து காட்டுவோம் வாழுவோம் பகிர்வில் உயர அன்பில் மலர்ந்து பணிகள் ஆற்றுவோம் உன் பணி தொடர்வதால் சாட்சியாய் மாறுவோம் உன் வழி செல்வதால் உலகை மாற்றுவோம் சீடராக வாழ்ந்து காட்டுவோம் எந்நாளுமே  

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம், Anbu Deepam Idhayam Yenthii Sangamamavom

Image
அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம் அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம்  அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம். 1. வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும் வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும்  இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2 நன்மைநெறியிலே நம்மை பகிரவும் நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும்  இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் - 2 இறைவனே தம்மையே இறைவனே தம்மையே மனிதர்க்கு அளிக்கும் இணையற்ற பலியின் புனித நிகழ்விலே  2. நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும் நேயப் பணியிலே நம்மை இணைப்பதும்  இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -2 மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும் மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும்  இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -2 அப்பமும் இரசமுமே அப்பமும் இரசமுமே இறை உயிராகும் அற்புதங்கள் நிகழ்த்தி நமை மறை உடலாக்கும் 

இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே, Inbam Poongum Naaliniley Iniya Nal Velaiyiley

Image
இன்பம் பொங்கும் நாளினிலே இனிய நல் வேளையிலே இதயங்களின் சங்கமமே இறையரசில் மங்களமே 1. உலகம் கண்ட உதயம் நம்மில் உறவு கொண்ட இதயம் மனங்கள் அன்பில் இணையும் அருள் மழையில் மலர்ந்து நனையும் குறைகள் யாவும் இன்று கரைந்திடுமே - மன நிறைவு காண நெஞ்சம் விரைந்திடுமே (2) 2. அகந்தை அனைத்தும் அழியும் - மண்ணில் அடிமைக் கோலம் ஒழியும் அன்பின் தீபம் ஒளிரும் தேவன் அருளில் யாவும் மிளிரும் பயணம் இனிது இங்கு தொடர்ந்திடுமே - அன்பின் பாதை பாரெங்கும் படர்ந்திடுமே (2)

தீபத்தின் ஒளியினில் இணைவோம், deepathin oliyinil

Image
தீபத்தின் ஒளியினில் இணைவோம்  திருப்பலி செலுத்திட விரைவோம் புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட  நல் வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களேன்  நம் வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார் அவரின் இல்லம் தினம் வந்தால் நம் உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே  அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே  இயேசுவோடு நாம் நடந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடம் இல்லையே  நன்மை செய்து நீ முயன்றால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே  வார்த்தை இங்கு மனுவானார் நம் வாழ்வினில் என்றும் குடி கொண்டார்  அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவோமே, Andavar Thirusannithiyil Ananthamudaney Paaduvomey

Image
ஆண்டவரின் திருச்சந்நிதியில் ஆனந்தமுடனே பாடுவோமே-2 1. மகிழ்வுடன் அவரை ஆராதிப்போம் மங்கள கீதங்கள் முழங்கிடுவோம் (2) அவரே தேவன் என்றறிவோம் அவரே நம்மைப் படைத்தாரே 2. நாம் அவர் மேய்ச்சலின் ஆடுகளாம் நாமே அவரது பெருமக்களாம் (2) துதிப் புகழோடு நுழைந்திடுவோம் தூய அவரது வாசல்களில் 3. தேவனின் திருப்பெயர் போற்றிடுவோம் தேவனின் நன்மைகள் சாற்றிடுவோம் (2) தேவனின் கிருபை உண்மையுமே தலைமுறை தலைமுறை நீடிக்குமே

அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம், Amaithiyin karuviyai Andavarey

Image
அமைதியின் கருவியாய் ஆண்டவரே வருகின்றோம் (2) நெஞ்சுக்குள்ளே நீர் அமைத்த அன்பு என்னும் இல்லம் தன்னில் வளர்கின்றோம் – 2 1. நீயாக தந்த வாழ்க்கை இங்கு நிலைமாறி போவதேனோ மாறாத அருள் நேசம் மன்றாடி கேட்கின்றேன் ஊருக்கு ஊரிங்கு போர்க்களங்கள் உள்ளுக்குள் உள்ளத்தில் போர்க்குணங்கள் மாறும் காலம் காண வேண்டும் மனித நேயம் வாழட்டும் 2. பேதங்கள் ஏதும் இல்லை என்னும் வேதங்கள் இன்று வேண்டும் எல்லோரும் உன் பிள்ளைகள் இது இல்லையென்றால் நீரும் இல்லை வானுக்கு மேல் உந்தன் வீடு இல்லை பூமிக்கு கீழும் ஏதும் இல்லை மனித இதயம் மாறும் போது புதிய அரசு பூமியில்

அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே - Alaikadalenath Thirandu Vaareer Irai Makkaley

Image
அலைகடலெனத் திரண்டு வாரீர் இறைமக்களே அருள்மழையினைப் பொழிய தேவன் காத்திருக்கின்றார் ஒரு கொடி கிளை நாமென இனி வாழும் நாளிலே புது உறவும் புது யுகமும் ஆகும் வாழ்விலே 1. வேதம் வாழ வேண்டும் மனிதம் மலர வேண்டும் நாடு செழிக்க வேண்டும் சத்தியம் நிலைக்க வேண்டும் இயேசுவாக வேண்டும் வரங்கள் சேர வேண்டும் வாழ்வினில் புது வசந்தங்கள் வர நீதிதேவன் ஆட்சி மலர உண்மை அன்பு நீதியே மண்ணில் வாழ்வுப் பாதைகள் உலகம் தேடும் அமைதியை உணர்ந்து உயர்ந்து வெல்க 2. பொய்மை நீங்க வேண்டும் வாய்மை வளர வேண்டும் தீமை ஒழிய வேண்டும் தர்மம் ஓங்க வேண்டும் வாழ்வில் தூய்மை வேண்டும் நெஞ்சில் நேர்மை வேண்டும் வாழ்வினில் புது அர்த்தங்கள் பிறக்க பாசதீபம் எங்கும் ஒளிர