Posts

Showing posts with the label திருவிருந்து பாடல்

அகவிருந்தாக என் இறைவா வா, Aaga Virunthaaga Yen Iraiva Va

Image
அகவிருந்தாக என் இறைவா வா - மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை உமதுடலென நீ மாற வைத்தாய் 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம் 3. நேரிய மனத்தவர் குறை தணிப்பாய் - எமை நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் நலமிகு உணவால் நிறைத்திடுவாய் - இனி உலகினை உனிலே வாழ வைப்பாய்  

நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு||Naney Vaniitu Irangi vantha Uyirulla Unnavu

Image
நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2) எனது உணவை உண்ணும் எவனும் பசியை அறிந்திடார் (2) -என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் அழிந்து போகும் உணவுக்காக ‌உழைத்திட வேண்டாம் (2) -என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும உணவிற்கே உழைப்பீர் மன்னா உண்ட முன்னோர் எல்லாம் மடிந்து போயினர் (2) -உங்கள் மன்னன் என்னை உண்ணும் எவரும் மடிவதே இல்லை

அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே || Anbin Deva Narkarunaiilley

Image
அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையில் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர் அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே எமை மீட்டீர் பொற்புடன் அப்ப இரச குணத்தில் எப்பொழுதும் வாழ் இறைவனானீர் எத்தனை வழிகளில் உமதன்பை எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர் கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும் நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும் யாவரும் வாழத் தயைபுரிவீர் 

நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு

Image
நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு இதை யாராவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் (2) எனது உணவை உண்ணும் எவரும் பசியை அறிந்திடார் (2) -என்றும் எனது குருதி பருகும் எவரும் தாகம் தெரிந்திடார் அழிந்து போகும் உணவிற்காக உழைத்திட வேண்டாம் (2) -என்றும் அழிந்திடாத வாழ்வு கொடுக்கும் உணவிற்கே உழைப்பீர்

கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது இந்த உணவையே உண்போம் ஓருடலாவோம்

Image
கிறிஸ்துவின் சரீரமிது கிறிஸ்தவர் உணவுமிது - இந்த உணவையே உண்போம் ஓருடலாவோம்  ஒரு மனம் கொண்டு வாழ்ந்திருப்போம் - 2 கருணையின் வடிவமிது நம் கடவுளின் வாழ்வுமிது - 2 அருளின் படிவமிது நம் ஆனந்த சக்தியிது - 2 மனதிற்கு இனிமை தரும் நம் மாசுகள் நீக்கிவிடும் - 2 மண்ணக வாழ்வையுமே மிக மாண்புறச் செய்துவிடும் - 2 உறவுக்குப் பாலமிது நம் உரிமைக்குக் குரலுமிது - 2 உண்மையின் கோலமிது எந்த நன்மைக்கும் நன்மையிது - 2 

செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்

Image
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க - 2 இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன - 2 உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் - 2 உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே - 2 எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே - 2 உந்தன் அருளை விதைத்தால் இந்த உலகம் உய்யுமே உலகம் எல்லாம் இணைவது உன் உள்ளம் ஒன்றிலே இயற்கை நிறைவு கொள்வது உன் செயலின் பண்பிலே - 2 மனித உள்ளம் மகிழ்வது உன் புனித உறவிலே - 2 மறையும் வாழ்வு மலர்வது உன் மகிழ்வின் பங்கிலே 

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம்

Image
இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் - 2 பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி - 2 பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே - 2 அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து - 2 இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் - 2 இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் - 2 எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே - 2