Posts

Showing posts with the label அந்தோணியார் பாடல்கள்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்| Mannulagil Intru Deevan Irangii Varukirar lyric

Image
  மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் - (2) எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார் மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும் கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார் அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை கொடுமை பாவம் துயரிலிருந்து வந்தார் குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்

இறைவனின் புனிதரே வாழ்க - இன்று இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம், Iraivanin Punnitharae Vazlga Intru Irranjii

Image
இறைவனின் புனிதரே வாழ்க - இன்று இறைஞ்சி உம் திருத்தலம் வந்தோம் அன்பர் அந்தோனியார் உம் அருளாலே - யாம் அற்புத வரம் பல அடைந்தோமே நன்மையின் நாயகனே கோடி நன்றிகள் சாற்றுகின்றோம் - 2 1. வாழ்வினில் துன்பங்கள் வருகையிலே வந்தோம் உம் திருவடியே உம் முகம் நோக்கிப் பார்க்கையிலே உவந்து எம் துயர்களைத் துடைப்பீரையா சமயம் பலவும் கடந்து உம்மைச் சந்திக்கும் பக்தர்கள் மனதில் (2) கவலை நீங்கிட கலக்கம் அகன்றிடக் கருணை மழையை நீர் பொழியுமையா 2. அலகையின் ஆதிக்கம் உயர்கையிலே அண்ணலே ஒடுக்குகின்றீர் நோய்களும் பிணிகளும் வாட்டுகையில் நலம் தரும் புதுமைகள் புரியுமையா குழந்தை இயேசுவைக் கரத்தில் ஏந்திக் கொஞ்சிடும் பேறு நீர் அடைந்தீர் (2) வாழ்க புனிதரே வந்தோம் பாதமே வளங்கள் தந்து வழிநடத்துமையா

எங்கள் புனிதா இதயத் தலைவா இசையில் வாழ்த்திடுவேன், Yenkal Punnitha Idhaiya Thalaiva Isaiil Vazlthiduven

Image
எங்கள் புனிதா இதயத் தலைவா இசையில் வாழ்த்திடுவேன் (2) கலக்கம் போக்கி கருணை தாரும் கனிந்த அன்பாலே சோகம் எல்லாம் சுகமாய் மாறும் துணையாய் வாழ்வில் நீ வந்தாலே மரத்தின் கிளைகள் அசைவிலும் பாடும் குயில்கள் இசையிலும் (2) புனிதர் உமது புகழைப் பாடும் - (2) புதுமைப் புனிதர் உமது நாமம் வாழ்க வாழியவே கடலில் எழும்பும் அலைகளும் தென்றல் காற்றின் இனிமையும் (2) புனிதர் உமது புகழைப் பாடும் - (2) புதுமைப் புனிதர் உமது நாமம் வாழ்க வாழியவே

பதுவை புனித அந்தோணியாரே உம் திருத்தலம் தேடி வந்தோம் |Paduvai Punitha Anthoniyarey Umm Thiruthalam Theedi vanthom Lyrics

Image
பதுவை புனிதர் அந்தோணியாரே உம் திருத்தலம் தேடி வந்தோம் கடைக்கண் பாரும் கவலைகள் போக்கும் குறையில்லா வாழ்வருளும் (2) வாழ்க! வாழ்க! எங்க பாதுகாவலர் வாழ்க - (2) பாவிகளின் அடைக்கலமே கவலைப்படுவோரின் தேற்றரவே (2) ஆறுகள் காடுகள் கடந்து வந்தோம் துன்பங்கள் துயரத்தில் சோர்ந்து வந்தோம் உமை நாடி அருள் தேடி நாங்கள் ஓடி வந்தோம் பாவங்கள் யாம் செய்தாலும் பரமனின் இரக்கம் பெறச் செய்வாய் (2) உமது உதவி இல்லை என்றால் எமக்கு இரங்குவார் யாருமில்லை பரிவோடு எமைப்பாரும் ஏக்கம் போக்கிவிடும்

அன்புத் தந்தையே கருணை தெய்வமே | Anbu Thanthaiyae Karunai Thaivamae

Image
அன்புத் தந்தையே கருணை தெய்வமே எங்கள் அந்தோணியாரே புனித நகரிலே புதுமை புரிந்திடும் பதுவைப் புனிதரே வாழ்க - 2 வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும் வரவும் உம் வரவால் தணியும் நோய்கள் நகரும் பிணிகள் தலைவா உன் தயவால் - 2 தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த தர்மம் தான் என்றாய் உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல வழியைச் சொன்னவரே இறை நல்வாழ்வில் நிதமும் வாழப் பாதை தந்தவரே - 2 எந்தன் நெஞ்சில் நீ இருந்து உண்மை நெறி செல்ல இறைவன் வாக்கை வாழ்ந்து காட்டிட புனித நகரிலே

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும்.  உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.   எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சப...

புனித அந்தோனியார் மன்றாட்டு மாலை

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா        - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா       - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவா மி தூய ஆவியாகிய சர்வேசுரா        -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா        -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியாயே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . பக்தி சுவாலகருக்கு ஒத்தவராகிய புனித பிரான்சிஸ்குவே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . பதுவைப் பதியரான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . விண்ணகத் திருவின் திருப்பெட்டியான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . மூப்பின் கீழமைச்சலுக்கு கண்ணாடியான புனித அந்தோணியாரே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தர்மத்தை மிகவும் பின்தொடர்ந்...

புனித அந்தோனியார் நவநாள் மன்றாட்டு

Image
1. வருகைப்பா (நிற்கவும்) பதுவை பதியராம் அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும், (மும்முறை) குரு: பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே எல்: ஆமென். குரு: பரிசுத்த திரித்துவத்துக்கு இப்பொழுதும் எப்பொழுதும் தோத்திரம் உண்டாவதாக எல்: ஆமென். குரு: பரிசுத்த தேவதாயே எங்கள் துன்ப வேளையில் நாங்கள் உமது அடைக்கலத்தை தேடி உம்மிடம் வருகின்றோம். மகிமை நிறைந்தவளும் மாசில்லாதவளுமான கன்னிகையே, எங்கள் மன்றாட்டைத் தள்ளிவிடாமல், எல்லா ஆபத்துகளிலிருந்தும் எங்களைக் காத்தருளும். எல்: ஆமென். புனித அந்தோனியாரை நோக்கி வேண்டுதல் ஜெபம் எல்: இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிர...

நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும், Nambungal Jebiungal nalathu nadakum

Image
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும் துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார்(2) மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரப்பார் எல்லாம் வல்லவர் நலம் தருவார்(2) வறியவரோ சிறியவரோ முதியோரோ இளையோரோ(2) பதுவைப் புனிதர் பரிந்துரப்பார் எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்(2)

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

Image
இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியாரே புதுமைகளை புரியும் எங்கள் புனித அந்தோணியாரே சரணமய்யா சரணமய்யா உந்தன் பாதம் சரணமய்யா துன்பப்படும் எங்களுக்கு சஞ்சீவி நீரே துன்பம் பிணி வறுமைகளை  களைபவரும் நீரே ஆறு மலை காடுகளை கடந்து வந்தோமே அழுது புலம்பும் எங்களுக்கு ஆறுதல் நீரே சரணமய்யா...... நற்கருணை மகிமையதை உணர்த்தியவர் நீரே நற்செய்தி போதித்த போதகரும் நீரே உயிருள்ள இயேசுவிற்காய்  வாழ்வைத் தந்தாயே உம்மைப் போல வாழ்ந்து காட்ட வரம் தருவாய் நீரே சரணமய்யா...... பரிசுத்தம் விளங்குகின்ற லீலி மலர் நீரே உன்னதமாம் எழ்மையின் மாதிரியும் நீரே கரமதில் பாலனை சுமந்து நின்றாயே கருணைக் கொண்டு வேண்டுதலை பரிந்துரைப்பாய் நீரே சரணமய்யா.....