Posts

Showing posts with the label அடிப்படை செபங்கள்

திருச்சபையின் மேன்மைக்காக பிதாவாகிய சர்வேசுரனை நோக்கி ஜெபம்

Image
நித்திய பிதாவே!  தேவரீர் ஆதியிலேதானே உமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட திருச்சபையை நினைத்தருளும் சுவாமி.  உம்முடைய ஏக சுதனாகிய சேசுகிறீஸ்துநாதர் தமது திரு இரத்தமெல்லாம் சிந்திச்  சுதந்தரித்துக் கொண்ட பரிசுத்த திருப்பத்தினி அதுதான் என்று எண்ணுவீராக.  அது தன்னுடைய திவ்விய பத்தாவுக்கும், தன்னை மீட்ட விலைமதியாத கிரயத்துக்கும் பாத்திரமானதாய் விளங்கத்தக்கதாக, தேவரீர் அதை மேன்மைப்படுத்தி, அர்ச்சியசிஷ்டதன சோதிக்கதிரால் பிரகாசிக்கச் செய்து, மிகுதியான தேவ இஷ்டப்பிரசாதங்களால் பூரிப்பித்தருள வேண்டுமென்று தேவரீரை ஆசைப் பெருக்கத்துடனே மன்றாடுகிறோம். அதன் பிள்ளைகளான சகலரும் பற்றுதலுள்ள விசுவாசத்துடனே தேவரீரை அறிந்து அனுசரித்து, உறுதியான நம்பிக்கையுடனே தொழுது மன்றாடி, உத்தம சிநேகத்துடனே நேசித்துச் சேவிக்கச் செய்தருளும் சுவாமி.   ஆமென். 

காணிக்கை ஜெபம்

Image
இயேசுவின் திரு இருதயமே! நாங்கள் கட்டிக்கொள்ளும் துரோகங்களுக்குப் பரிகாரமாகவும் தேவரீர் திருப்பீடத்தில் ஓயாமல் உம்மைத்தானே பலியாக ஒப்புக்கொடுக்கும் சகல கருத்துக்களுக்காகவும், அடியேல் இன்று செய்யும் ஜெபங்களையும், கிரியைகளையும், படுந்துன்ப வருத்தங்களையும், தூய கன்னிமரியாயின் மாசில்லாத திரு இருதயத்தின் வழியாக உமக்கு ஒப்புக்கோடுக்கிறேன் சுவாமி. இந்த மாதத்திற்கும் இந்த நாளுக்கும் சபையாருக்கும் குறிக்கப்பட்ட சகல கருத்துக்களுக்காகவும் விசேஷமாய் அவைகளை ஒப்புக்கொடுக்கிறேன் சுவாமி -ஆமென்.

திருச்சிலுவை அடையாள செபம்

Image
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

புனித அருளானந்தர் நவநாள் செபம்

Image
செந்தமிழ் நாட்டிலே இயேசுமறையைப் போதிக்க வந்த மகிமை நிறைந்த அப்போஸ்தலரே! சொல்லிலும், செயலிலும் வல்லமை மிகுந்த புனித அருளானந்தரே, எங்களைக் கருணையுடன் நோக்கியருளும். எங்கள் குடும்பங்கள், உற்றார் உறவினர் மீதும், மாந்தர் அனைவர் மீதும் இரங்கியருளும். இறைவனின் ஏவுதலுக்கு இடைவிடாது செவிசாய்த்த உமது வியப்புக்குரிய பிரமாணிக்கத்தையும், கடின பயணங்களை மேற்கொண்டு. வேதனைகள், துன்பங்களைத் தாங்க உம்மைத் தூண்டின தளராத ஊக்கத்தையும் எண்ணி உம்மைப் புகழுகிறோம். உமது இதயத்தில் பற்றியெரிந்த அன்புத் தீ எங்கள் இதயத்திலும் பற்றியெரியச் செய்தருளும். மீட்புப் பணியினை நாங்களும் மனமுவந்து நிறைவேற்ற எங்களைத் தூண்டியருளும் மகிமை நிறைந்த பாதுகாவலரே! மறவ நாட்டின் நல்ல ஆயரே! உம்முடைய உழைப்புகளையும், செப தவங்களையும், வீரத் தியாகத்தையும் முன்னிட்டு இறைவனிடமிருந்து நாங்கள் கேட்கும் மன்றாட்டைப் பெற்றுத் தந்தருளும். ரூனெயளர் ஆமென். (தேவையான மன்றாட்டை மௌனமாகக் கூறவும்)

புனித அருளானந்தருக்குச் செபம்

Image
கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்த புனித அருளானந்தரே, அரண்மனை வாழ்வையும், உலக இன்பங்களையும், உற்றார் உறவினரையும், சொந்த நாட்டையும் துறந்து, தொலை நாடாகிய இந்தியாவுக்கு வந்து, மறவ நாட்டிலே கிறிஸ்துவின் அரசை நிறுவ, எண்ணில்லாத் துன்ப துயரங்களையும் இன்னல் இடைஞ்சல்களையும் பொருட்படுத்தாது, பத்தொன்பது ஆண்டுகளாய் உழைத்து, கணக்கற்ற ஆன்மாக்களை திருமந்தையில் சேர்த்த ஒப்பற்ற வீரரே! உமது குருதியால் புனிதமாக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்களாகிய எங்கள் மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். புனித சவேரியாரைப் பின்பற்றி மெய்மறையைப் பரப்ப வந்த உத்தம போதகரே! மறவ நாட்டு மாணிக்கமே! எல்லார்க்கும் எல்லாமாக விளங்கி, எங்கள் முன்னோர்க்கு வாழ்வுதரும் நற்செய்தியை அறிவித்தீர். சோர்வின்றி நல்லன செய்யவும், அஞ்சா நெஞ்சத்தோடு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும், சோதனைகளையும், சாவையும் உறுதியுடன் ஏற்றுக் கொண்டீர். ஓ வீரம் மிகுந்த தியாகியே! இயேசு சபையின் ஒப்பற்ற மறைச்சாட்சியே! உம் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்த நாட்டில் உழைத்து வரும் குருக்களுக்கும் திருத்தொண்டர், துறவியர், வேதியர் அனைவருக்கும் உமக்கிருந்த இறையன்பும், ஆன்ம...

இயேசுவை நோக்கி இரக்கத்திற்கான ஜெபம்

Image
ஆண்வராகிய இயேசுவே, எங்கள் மேல் இரக்கம் வையும். எங்கள் மேல் இரக்கமாயிரும். எங்களைத் தீர்ப்பிடாதேயும். எங்கள் மூதாதையர், எங்கள் சகோதர, சகோதரிகள் வழி வந்த எல்லாக் குற்றங் குறைகளையும், பாவங்களையும், மன்னித்தருளும். எங்களுக்கு வரப்போகும் தண்டனையை விலக்கி விடும். எங்களை உமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு உமது ஆவியால் எங்களை வழி நடத்தியருளும்.

ஆபத்தான வேளையில் அன்னையை நோக்கி ஜெபம்

Image
நிரந்தர சகாயத்தின் நேச ஆண்டவளே! மாசணுகாத்தாயே உம்மை நாங்கள் இவ்வீட்டின் ஆண்டவளாகவும், எஜமாட்டியாகவும் தெரிந்து கொள்கிறோம். கொள்ளை நோய், இடி, மின்னல் புயல் காற்றிலிருந்தும் விமானத்தாக்குதல் விரோதிகளின் பகை குரோதத்திலிருந்தும் இவ்வீட்டைப் பாதுகாத்தருளும், மிகவும் அன்புள்ள தாயே! இங்கு வசிக்கிறவர்களை ஆதரியும். அவர்கள் இங்கிருந்து வெளியில் போகும் போதும், உள்ளே வரும் போதும் அவர்களுக்குத் துணையாயிருந்து சடுதி மரணத்தினின்றும் அவர்களை இரட்சியும், எங்களை சகல பாவங்களிலும் ஆபத்துக்களிலும் நின்றும் காப்பாற்றும். இவ்வுலகில் நாங்கள் சர்வேஸ்வரனுக்கு பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து உம்மோடு கூட நித்தியத்திற்கும் அவரின் இன்பமான தேவ தரிசனத்தை அடைந்து சுகிக்க எங்களுக்காகப் பிரார்த்தித்தருளும் தாயே! - ஆமென்.

புனித சூசையப்பருக்கு செபம்

Image
  புனித சூசையப்பரே! உம் அடைக்கலம் மிகவும் மகத்தானது. வல்லமை மிக்கது. இறைவனின் சந்நிதியில் உடனடி பலன் அளிக்க வல்லது. ஏனவே என் ஆசைகளையும், எண்ணங்களையும் உம் அடைக்கலத்தில் வைக்கிறேன். உம் வல்லமை மிக்க பரிந்துரையால் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய சேசுவிடம் எங்களுக்குத் தேவையான எல்லா ஆன்ம நலன்களையும் பெற்றுத்தாரும். இதன் வழியாக மறு உலகில் உமக்குள்ள ஆற்றலைப் போற்றி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு நன்றியும், ஆராதனையும் செலுத்தக் கடவேன். புனித சூசையப்பரே! உம்மையும் உம் திருக்கரங்களில் உறங்கும் சேசுவையும் சதா காலமும் எண்ணி பூரிப்படைய தயங்கியதில்லை. இறைவன் உம்மார்பில் சாய்ந்து தூங்கும் வேளையில் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. உம் மார்போடு அவரை என் பொருட்டு இணைத்து அணைத்துக் கொள்ளும். என் பெயரால் அவருக்கு நெற்றியில் முத்தமிடும். நான் இறக்கும் தருணத்தில் அந்த முத்தத்தை எனக்குத் தரும்படி கூறும். மரித்த விசுவாசிகளின் ஆன்ம காவலனே எங்களுக்காக மன்றாடும். - ஆமென்.

புனித தேவசகாயம் பிள்ளையின் இறுதி ஜெபம்

Image
இயேசுவே என்னைக் கைவிடாதேயும், இயேசுவே என்னை முழுவதும் உமக்கு அர்ப்பணிக்கின்றேன். அன்னை மரியே எனக்கு அருள்புரியும். - ஆமென் 

பனிமய மாதா ஜெபம்

Image
மிகவும் இரக்கமுள்ள தாயே! தூய கன்னி மரியே! இதோ.. உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து சரணடைந்து உமது அருட்காவலை மன்றாடிய ஒருவரையும் நீர் கைவிட்டதாக உலகில் ஒருபோதும் சொல்லக்  கேள்விப்பட்டதில்லை என்பதை நினைத்தருளும் கன்னியருடைய அரசியான கன்னிகையே தயயுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் நான் தூண்டபெற்று அடியேன் உம் திருப்பாதம் அண்டி வருகிறேன். பாவியாகிய நான் உம் திருமுன் துயர த்தோடு உமது இரக்கத்திற்காக காத்து நிற்கிறேன். மனுவுருவான திருமகனின் தாயே! எம் மன்றாட்டைப் புறக்கணியாமல் எனக்காக தயவாய் வேண்டிக்கொள்ளும்  -ஆமென்

புனித அல்போன்சா பக்தி மாலை

Image
புனித அல்போன்சா பக்தி மாலை தொடக்க மன்றாட்டு தூய ஆவியே எழுந்தருளி வாரும். உமது கொடைகளை பொழிந்து எங்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவீராக. மோட்ச வீட்டின்மீதான நம்பிக்கையில் எங்களை வழிநடத்தும். எங்கள் இதயங்களை இறையன்பால் பற்றி எரிய செய்வீராக. புனித அல்போன்சாவே நீர் புண்ணிய வழியில் நடந்து சென்றது போல எங்களையும் நல்வழியில் நடத்தியருளும். நாங்கள் தாழ்ச்சியிலும், எளிமையிலும் பிரமாணிக்கத்துடன் உமக்கு ஊழியம் புரிந்து புனிதத்திலும் விவேகத்திலும் தெய்வபயத்திலும் நாளுக்கு நாள் முன்னேற இறைவனை மன்றாடும். ஆமென். புனித அல்போன்சா செய்த செபம்: "ஓ என் ஆண்டவராகிய இயேசுவே உம் திருஇதயத்தின் காயத்தினுள் என்னை நீர் மறைப்பீராக. அன்பும் மதிப்பும் பெறுவதற்கான ஆசையினின்று என்னை நீர் விடுவித்தருளும். பேரும் பெருமையும் தேடுவதற்கான முயற்சியினின்று என்னை காப்பாற்றும். நான் சிறு அணுவளவேனும் உம் திரு இதயத்தினது அன்புத்தீயின் ஒரு பொறியும் ஆகும் வரையில் என்னை நீர் தாழ்த்துவீராக. எல்லாப் படைப்புக்களையும் என்னையுமே மறந்துவிடுவதற்கான அருளை எனக்கு தந்தருளும். சொல்ல...

புனித அல்போன்சாவிடம் செபம்

Image
புனித அல்போன்சாவே! நம் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும், உயிர்ப்பிலும் பங்குகொண்ட நீர், எங்கள் மத்தியில் இருந்து தேர்ந்துகொள்ளப்பட்டீர். புண்ணியத்தில் வளர்ந்த நீர் இறைவனால் புனித நிலைக்கும் மோட்ச பாக்கியத்திற்கும் அழைத்துக்கொள்ளப்பட்டீர் . எங்களின் துன்பங்களிலும் துயரங்களிலும் இறைவனிடம் எமக்காய் பரிந்து பேசும். ஓ துன்பங்களால் தூய்மை அடைந்த தூயகமே! உம்மை போல் நாங்களும் இறைவனை முற்றிலும் சரணடைந்து தூய வாழ்வு வாழ வழிநடத்தும். கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும், எம் பாவங்களின் மன்னிப்பிற்காகவும், அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மீட்பிற்காகவும் எங்கள் துன்பங்களை பொறுமையோடு ஏற்று இறை மகிமைக்காக வாழும் வரம் தாரும்.  ஆமென்.

தூய ஆவியை நோக்கிய செபம்

Image
தூய ஆவியே என் ஆருயிரே உம்மை ஆராதிக்கிறேன். என்னில் ஒளியேற்றி என்னை வழிநடத்தும். எனக்கு திடமளித்து என்னை தேற்றும் நான் செய்யவேண்டியதைச் சொல்லும். ஆணையிடும். உமது திட்டத்தை தெயப்படுத்தினால் போதும் எனக்கு நடக்க வேண்டுமென்று நீர் விரும்புவதை நான் அன்புடன் ஏற்று அடிபணிகிறேன்.

வேளாங்கண்ணி மாதா ஜெபம்

Image
மகா பரிசுத்த கன்னிகையே, இயேசுவின் தாயாராயிருக்குமாறு நித்தியமாக பரிசுத்த மூவொரு கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட தூய மணியே! கடவுளுடைய திருப்புதல்வன் உமது திரு உதரத்தில் அவதாரமான போதும், ஒன்பது மாதமளவாக அவரை உமது மாசணுகாத கருவில் தாங்கிய போதும், நீர் அடைந்த பேரின்பத்தை உமது ஏழை ஊழியனாகிய அடியேன் உமக்கு நினைவூட்டுகிறேன். எனது அன்பினாலும், செபங்களாலும் நீர் அப்போது அனுபவித்த இன்பத்தை மீண்டும் புதுப்பிக்கவும் கூடுமானால் அதிகரிக்கவும் விரும்பகிறேன். துன்பப்படுகிறவர்களுக்கு இரக்கம் மிகுந்த அன்னையே! நீர் அப்போது அனுபவித்த இப்பெருமகிழ்ச்சியைக் கொண்டாடுபவர்களுக்கு நீர் வாக்களித்துள்ள விசேஷ உதவியையும், பாதுகாப்பையும் எனக்கு இத்துன்ப நேரத்தில் தந்தருளும். உமது தெய்வப் புதல்வனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை கொண்டுள்ளேன். கேட்பவருக்கு அளிப்பதாக அவர் தந்த வாக்குறுதியை நினைத்து, உமது பெரும் வல்லமை நிறைந்த மன்றாட்டுக்களில் உறுதி கொண்டுள்ளேன். இந்த நவநாளின் போது நான் செய்யும் விண்ணப்பங்களை கடவுளுடைய திருச்சித்தத்திற்கு ஏற்றவையானால் அவரிடம் பரிந்து பேசி அடைந்து தந்தருளும். நான் கேட்க...

பழைய கிறிஸ்து கற்பித்த செபம்

Image
  பரலோகத்தில்  இருக்கிற எங்கள்  பிதாவே !  உம்முடைய  நாமம்  அர்ச்சிக்கப்படுவதாக ,உம்முடைய  ராஜ்ஜியம்  வருக, உம்முடைய சித்தம்  பரலோகத்தில்  செய்யப்படுவது  போல  பூலோகத்திலும்  செய்யப்படுவதாக.            எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும் , எங்களுக்கு தீமை  செய்பவர்களை  நாங்கள்  பொறுப்பது போல  எங்கள் பாவங்களைப்  பொறுத்தருளும்,  எங்களை  சோதனையில்   விழவிடாதேயும்,  தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்.. -   ஆமென்

புனித அந்தோனியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே, கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம். புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே!நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம பிள்ளைகளின் மன்றாட்டுக்களை கேட்டருரும். உமது ஆதரவை நாடிவந்துள்ள உம அடியார் எம்மீது உம கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியவற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும். எங்கள் அன்புக்குரிய புனித அந்தோனியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்திற்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், ...

படிக்கும் முன் செபம்

அன்பு இறைவா! எங்கள் இதயங்களை உமது அன்பின் ஆவியாரால் பற்றி எரிய செய்தருளும். உமது தூய ஆவியாரின் வரங்களாலும், கொடைகளாலும் எங்களை நிரப்பி, நாங்கள் அறிந்து கொள்பவற்றை, நினைவில் நிறுத்தி, அதன் வழியில் சமூக முன்னேற்றத்திற்காகவும், பிறரின் நல் வாழ்வுக்காகவும் உழைத்திட வரம்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாகவும் எங்கள் தாய் அன்னை மரியாள் வழியாகவும் மன்றாடுகிறோம்.  -ஆமென்.

செவ்வாய்க்கிழமை காலைச் செபம்

Image
தேவ ஆராதனை நம்மைப் படைத்துக் காத்து இரட்சித்துப் பரிபாலனம் செய்துவரும் பிதா சுதன் இஸ்பிரித்து சாந்து என்னும் பரம் திரித்துவத்திற்கு எல்லாப் படைப்புகளாலும் அனவரதகாலம் ஸ்துதியும் தோத்திரமும் உண்டாகக்கடவது. திரி. தளங்களுக்குக் கர்த்தரான தேவன் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தராயிருக்கிறார். அவரது மகிமைப் பிரதாபத்தால் பூமி நிரம்பியிருக்கின்றது. பிதாவுக்கும் ஸ்தோத்திரம் சுதனுக்கும் ஸ்தோத்திரம், இஸ் பிரித்து சாந்துவுக்கும் ஸ்தோத்திரம் உண்டாகக்கடவது. இதோ இராக்காலம் தனது திரையை மடக்கிக்கொண்டு மறைய, விடியற்காலம் வர, காலைக் கிரகம் கம்பீரமாய்த் தோன்றப் போகின்றது. இதோ உமது கைப் படைப்பாகிய நான் படுக்கையை விட்டெழுந்து பயபக்தி வணக்கமுற்று இருகரங் குவித்து ஆத்தும் சரீர ஒடுக்கத்தோடு உமது தெய்வச் சந்நிதியில் வருகிறேன். சுயம்பு அநாதி அசரீரியே மட்டற்ற நன்மைக் கடலே , சர்வ வியாபியே, சர்வ லோக சிருஷ்டிகராய் இருக்கின்ற என் தேவனே, வானத்தில் சந்திரன், சூரியன், நட்சத்திரங்களும், பூமியில் மலைகள், சமுத்திரம் முதலிய காரியங்களும் தேவரீருடைய மகிமையைக் காட்டிக் கொண்டிருப்பதை நான் பார்த்தும், நான் ஆத்துமத்தில...

திங்கட்கிழமை மாலைச் செபம்

Image
பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென். சர்வேசுரன் சத்தியமாயிருக்கிறபடியால் அவரை விசுவசிக்கிறேன், சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவராயிருக்கிற படியினாலே அவரை நம்புகிறேன், சர்வேசுரன் சகல நன்மையாயிருக்கிறபடியினாலே அவரை முழு மனதோடு நேசிக்கிறேன். திரிகாலச் செபம் செபிக்கவும் ,  பர.அருள்  விசுவாச மந்திரம். ஆனந்த சந்தோஷங் கொண்டு பரலோகத்தில் இருக்கிற சம்மனசுகளே! பூமண்டலத்தில் இருக்கிற சகலமான படைப்புகளே! ஆண்டவரைத் துதித்து நமஸ்காரம் செய்ய என்னுடனே வாருங்கள். ஆண்டவரே! நான் என் பாவங்களைச் சங்கீர்த்தனஞ் செய்து கொண்டு நீர் எனக்குச் செய்த எண்ணிறந்த உபகாரங் களைப் புத்தியில் நினைத்துக் கொண்டு பய பக்தியோடே நடுநடுங்கித் தூசியோடு தூசியாய் உமது தெய்வ சந்நிதியிலே விழுந்து உம்மை ஆராதித்து நமஸ்காரம் செய்கிறேன். ஆண்டவரே! நீரே பெரிய தேவனுமாய், என்னை உண்டு பண்ணினவருமாய், உண்மையின் உப்பரிகையுமாயிருக்கிறீர். உலகத்தின் பேரில் இருக்கப்பட்ட சகல மனிதர்களுக்கும் அமுது கொடுத்து அவர்கள் பாவங்களை அடிக்கடி பாராட்டாமல் பொறுத்து ஆண்டு வருகிறீர். பூமியின் ஆழங்களையும் உமது ...

திங்கட்கிழமை காலைச் செபம்

Image
நித்திய பிதாவே என் பாவங்களின் மன்னிப்புக்காகவும் திருச்சபையின் அவசரங்களுக்காகவும் சேசுகிறீஸ்துநாதருடைய திரு இரத்தத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். இதோ இருளின் திரை நீங்கப் பிரகாசக் கிரகம் தோன்றுகின்றது. பரலோக பூலோக பாதாளம் எனப்பட்ட மூன்று உலகங்களிலும் அடங்காத தேவாதி தேவனே! நான் இருகரங் குவித்து மொத்தத் தாழ்ச்சியோடு உம்மை நமஸ்கரிக்கிறேன். சர்வ இன்பத்தின் ஊருணியே நித்திய சந்தோஷத்தின் வெள்ளமே! நான் உம்மை ஆவலாய்த் தாவி வணங்குகிறேன். தேவரீர் பழைய ஏற்பாட்டிலும் புது ஏற்பாட்டிலும் சொல்லியதெல்லாம் உயிர் மூச்சாய் விசுவசிக்கிறேன். என் ஏக நித்திய ஆஸ்தியே! என்னை உண்டுபண்ணின கர்த்தரே உமது பேரில் நான் கொண்டிருக்கிற அன்பினால் உமது பாதத்தில் உயிரைவிட ஆசிக்கிறேன். என் ஏக நம்பிக்கையே! என் நல்ல இராசாவே! தேவரீருடைய தோத்திரத்திற்காக என் இரத்தமெல்லாம் சிந்த ஆசிக்கிறேன். நீர் எனக்குச் செய்த எண்ண முடியாத நன்மைகளுக்காக நான் தூசியோடு தூசியாய்த் தாழ்ந்து, பய பக்தி பட்சத்துடனே உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறேன். சம்மனசுகளோடும், அர்ச்சியசிஷ்டவர்களோடும் தேவரீரைத் துதிக்க ஆசிக்கிறேன். உலகத்திலுள்ள ச...