புதிய வானம் புதிய பூமி காணுவோம் புலருகின்ற புதிய ஆண்டில் | Puthiya Vaanam Puthiya Boomi Kaanuvom Pularukinta Puthiya Aandil
புதிய வானம் புதிய பூமி காணுவோம் புலருகின்ற புதிய ஆண்டில் புதிய மனிதராய் ஆகுவோம் வாருங்கள் அருள் தேடுங்கள் வாழ்வினில் புகழ் சேருங்கள் வாழ்க்கைப் பயணம் தொடங்கும் நேரம் வள்ளல் இயேசு உள்ளம் பெறுவோம் வாழ்வின் நிறைவாம் அன்பின் கொடைகள் வாழ்வில் கண்டு வளமை சேர்ப்போம் இறைவன் வழியில் நடக்கும் போது பயமே எனக்கில்லை - அவர் துணையில் நானும் வாழும் போது அச்சம் எனக்கில்லை மனித மாண்பைக் கொணரத் துடிக்கும் மனிதர் நடுவில் வாழ்வில் பிறக்கும் மகிழ்வால் வாழ்வை நனைக்கும் பணியில் மனங்கள் யாவும் ஒன்றி வாழும் மனித உறவை வளர்க்கும் பணியில் மாற்றம் இனி இல்லை - அவர் மனதை அடையும் இலட்சிய நோக்கில் மாற்றம் இனி இல்லை