Posts

Showing posts with the label ஜெபங்கள்

புனித மிக்கேல் சம்மனசுக்குப் புகழ்மாலை

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும் பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா          - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி உலகத்தை மீட்டு இரட்சித்த சுதானாகிய சர்வேசுரா       - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி தூய ஆவியாகிய சர்வேசுரா        - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித தமத்திருத்துவமாய் இருக்கிற ஏக சர்வேசுரா          - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி புனித மரியாயே .... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . சர்வேசுவரனுடைய ஞானத்தால் நிறைந்திருக்கிறவரான  புனித மிக்கேலே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தாழ்ச்சியின் கண்ணாடியான  புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . கீழ்படிதலை ஏவுகிறவரான  புனித மிக்கேலே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் . தேவ குமாரனை உத்தம நெறியில் ஆராதிக்கிறவ...

புனித யூதா ததேயுவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

Image
 ✝️🌹மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுவே🧎‍♂️  ✝️🌹எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே🧎‍♂️  ✝️🌹புண்ணியங்கள் மின்னித் துலங்கும் தூயவரே🧎‍♂️  ✝️🌹புதுமை வரங்களில் சிறந்தவரே🧎‍♂️  ✝️🌹தம்மை தேடி வந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே🧎‍♂️  ✝️🌹உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம்.🧎‍♂️ ✝️🌹இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்🧎‍♂️  ✝️🌹இதய பூர்வமான நன்றி நவில்கிறோம்.🧎‍♂️ ✝️🌹எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்🧎‍♂️  ✝️🌹சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.🧎‍♂️ *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* ✝️🌹நேசிக்கப்படத் தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர் பெற்று இயங்கும் தயாள இருதய புனித யூதா ததேயுவே 🧎‍♂️ ✝️🌹உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போக விடாதேயும்.🧎‍♂️ ✝️🌹யூதாசின் பெயர் ஒற்றுமையால் உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் ...

புனித சவேரியாருடைய விருப்பமான செபம்

Image
இயேசுவே, உம்மை உமக்காகவே அன்பு செய்கிறேன். ஏனென்றால் சிலுவை மரத்தில் உம் அன்பால் என்னை அணைத்துக் கொண்டீர். ஆணிகள், ஈட்டி, இகழ்ச்சிகள்,  மரணம் இவைகளை அனுபவித்து என்னை அரவணைத்தீர். நான் உமக்கு எதிராயிருப்பேன் என்று தெரிந்தும் எனக்காக இவ்வளவும் ஏற்றுக் கொண்டீர்! என்னை எப்பொழுதும் அன்பு செய்யும் இயேசுவே! உம்மை நான் ஏன் அன்பு செய்யக்கூடாது? நீர் மோட்சம் கொடுப்பீர் என்றல்ல! நான் அன்பு செய்வது அல்லது எரி நரகத்தில் தள்ளிவிடுவீர் என்பதற்காகவும் அல்ல‌. என்னை ஏற்றுக் கொண்ட உம் அன்பை முன்னிட்டு நான் உம்மை நேசிக்க துடிக்கிறேன். என்றென்றும் என் இதய வேந்தனாக இருப்பீராக!.

புனித சூசையப்பரை* *நோக்கி ஜெபம், மன்றாட்டு* *மற்றும் புகழ்மாலை*

Image
✝️🌷🌻🌷✝️🌷🌻🌷✝️ ✝️💐 மகா பாக்கியம் பெற்ற அர்ச். சூசையப்பரே ! 🧎‍♂️ ✝️💐 எங்களுடைய துன்ப வேளையில் உமது பரிசுத்த பத்தினியின் உதவியை இரந்து மன்றாடின பின்பு, உமது பாதுகாவலையும் நம்பிக்கையோடு தேடி வருகிறோம்.🧎‍♂️ ✝️💐 தேவ தாயாரான ஜென்ம பாவமில்லாமல் உற்பவித்த அர்ச். கன்னி மரியாயிடத்தில் உமக்குள்ள சிநேகத்தின் பேராலும், திவ்விய குழந்தை இயேசு நாதருக்கு நீர் காண்பித்த தந்தைக் குரிய அன்பைக் குறித்தும், உம்மிடத்தில் நாங்கள் கேட்கும் மன்றாட்டு ஏதென்றால் 🧎‍♂️ *✝️ (விரும்பியதைக் கேட்கவும்.) ✝️*  ✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தமது இரத்தத்தால் நமக்காக சம்பாதித்த சுதந்தரத்தை தேவரீர் கிருபையாய்ப் பார்க்கவும் எங்கள் இக்கட்டிலே உமது பலமுள்ள ஒத்தாசையால் துணையா யிருக்கவும் மன்றாடுகிறோம்.🧎‍♂️ ✝️💐 ஓ! திவ்விய குடும்பத்தை உத்தம ஞானத்தோடு நடத்திவந்த கைத்தாதையே ! 🧎‍♂️   ✝️💐 இயேசு கிறிஸ்து நாதர் தம்முடையவர்களாகத் தெரிந்து கொண்ட ஜனங்களைப் பராமரித்தருளும். 🧎‍♂️ ✝️💐 ஓ! மிகவும் அன்பு நிறைந்த எங்கள் தகப்பனே ! 🧎‍♂️ ✝️💐 நாங்கள் எவ்வித தப்பிதத்திலும் கேட்டிலும் விழாதபடி எங்களைக் காப்பாற்றும்....

நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்

Image
🍥❤🍥❤🍥❤🍥❤ நமது காவல் தூதரிடம் மன்றாடுவோம்🙏✝️🧚‍♂️✝️🙏 🍀🌺🍀🌺🍀🌺🍀🌺 ✝️🧚‍♂️ நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார்.  ✝️🧚‍♂️உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.  திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 91:11-12 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனால் எங்களுக்கு பாதுகாப்புத் தந்திட ஏற்படுத்தப்பட்டுள்ள எங்கள் இறைவனின் வான தூதரே! 🧚‍♂️✝️🙏 எங்களுக்கு ஞான ஒளியைத் தந்து எல்லாத் தீமையிலிருந்தும் பாதுகாத்திட வேண்டும் என்று மன்றாடுகிறோம் 🙏✝️🙏  ஆமென் 🧚‍♂️✝️🙏✝️🧚‍♂️ ☀🌹☀🌹☀🌹☀🌹☀

மாதா அன்னைக்கு ஐந்நூறு துதிகள்

Image
மாதாவுக்கு ஐந்நூறு துதிகள் 1.பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​ 8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 9 இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 18 வலக்கர...

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

Image
தூய அந்தோணியாரை நோக்கிபொது மன்றாட்டு:-                              எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏதும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்.  புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மன்றாட்டுக்களை கேட்டருளும். உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியவற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும். நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்.  எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்...

ஜெபம்|Tamil Prayer

Image
ஆண்டவரே இயேசுவே! படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைத் துதிக்கின்றேன். இஸ்ராயேலரை ஆயர் என ஆள்பவரே! உம்மைப் புகழ்கின்றேன். உமது ஆற்றலால் என்னை உம்மில் தூண்டி எழுப்பும் தயவிற்காக நன்றி கூறுகின்றேன். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய் ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது" என்று உமது ஆட்சியை நான் தேடி அடைய வேண்டும் என்பதையும், அதையே வலிமையாகப் பறறிக் கொள்ள வேண்டும் என்பதையும் இன்றைய இறை வார்த்தையில் வாசிக்கினறேன். இரட்சகரே! வாழ்வு தரும் தூய ஆவியே! இந்த பாவ உலக இச்சை நிறைந்த ஊனியல்பின் செயல்களை விட்டு வலிமையான உமது வார்த்தையில் நிலைத்திருக்க எனக்குக் கிருபை தாரும். இயேசுவே ஆண்டவரே! நான் பலவீன பாவி. உமது அன்புக்கு, உமது பரிசுத்த அரவணப்புக்குத் தகுதி இல்லாதவனாய் பல இச்சையான செயல்களால் என் மனதையும், உடலையும் அலங்கரித்து, உலக மோகத்தில் இருக்கும் என்னைக் கழுவி தூய்மையாக்கி உம்மில் வாழ வளர அருள் தாரும். இன்றைய நாளில் தூய ஆவியானவர் என்னை வழிநத்துவாராக! என்...

காலை ஜெபம்|Tamil Prayer

Image
ஆண்டவரே இயேசுவே, விண்ணையும், மண்ணையும் அனைத்தையும் படைத்த இஸ்ராயேலின் கடவுளின் பரிசுத்த நாமம் போற்றப்படுவதாக; எனெனில் "அவரே எனக்கு அமைதி தந்தார்; தான் அடைந்த துன்பத்தால் எனக்கு வாழ்வு தந்தார்; எனவே நான் நன்றி கூறுகின்றேன். உமது திருகாயங்களால் நான் குணமடைந்தேன் என்றும்ஒ, என் ஆயரும் கண்காணிப்பாளருமான உம்மிடம் திரும்பி வந்திருக்கின்றேன்" என்றும், இன்றைய இறை வார்த்தையின் ஊடாக என்னை உம்மில் வாழ அழைப்பதற்காக நன்றி கூறுகின்றேன். என் ஆயனே! இந்த மாயை நிறைந்த பாவ உலகில் விழுந்து போகாமல் என்னை செம்மையான பாதையில் வழிநாடத்தும். பாவத்தில் விழச்செய்யும் பகைமையிடம் இருந்து என்னைப் பாதுகாரும். உமது பேரன்பிற்குள் வைத்துப் பாதுகாரும். பாவிகளுக்கு உமது வழிகளைக் கற்பிப்பவரே! இந்த மகா பாவியான எனக்கு உமது ஒளியின் வழிகளைக் கற்பித்தருளும்‌. ஆண்டவரே இயேசவே! நீர் துன்பப்பட்ட போதும் பாவங்கள் செய்யவில்லை; பழிச்சொற்கள் சொல்லவில்லை; நான் கடக்கும் இந்த வாழ்வை விட பல சவால்களோடு நீர் கடந்தீர்; உமது பாதச் சுவட்டைப் பின்பற்றி உமக்கு உரியவனாக வாழ வல்லமை தந்து வழி நடத்தும். இன்றைய நாளில் என்னைக் கரம்ப...

காலை ஜெபம்| Tamil Prayer

Image
ஆண்டவரே இயேசுவே, படைகளின் ஆண்டவரே! உம்மை ஆராதிக்கின்றேன். என் துணையாளரே! உம்மைத் துதிக்கின்றேன். என் உள்ளத்தில் உறைபவரே! உம்மைப் புகழ்ந்து பாடுகின்றேன். உமது கைவினைப் பொருளாம் என்னை கைவிடாதேயும். "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்" என்று, இன்றைய இறைவார்த்தை மூலமாகக் கற்பிக்கும் இறைவா! உமக்கு நன்றி கூறுகின்றேன். குழந்தாய் எனக்கு செவிகொடு என்று பாவியான என்னை உம் விருந்திற்கு அழைக்கும் இயேசுவே! உமது மாறா பரிசுத்த அன்பில் இருந்து உம்மைப் பிரிந்து சென்ற நிலைகளை எண்ணி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கின்றேன். உன்பாதத்தில் உமது அரவணைப்பை உணர மீண்டுமாக எனக்கு உதவி செய்யும். இன்னும் பிரிந்து இருக்கும் குடும்பங்களையும், அன்பான உறவுகளையும் உம் பாதம் தருகிறேன். அவர்களின் உறவுகளை உம் திரு இரத்தத்தால் மீண்டும் புதுப்பியும். கசப்பான உணர்வுகள் மறைந்து புதிய தொடக்கமாக மாற்றும். அனைத்துக் குடும்பங்களும் உம் மாட்சியை எடுத்துரைக்கும் நல் கிறிஸ்தவ குடும்பங்களாக மாற்றும். "எனது சதையை உண்டு என் இ...

காலை ஜெபம் | Tamil Prayer

Image
ஆண்டவர் இயேசுவே, எனக்காக மனுவுரு எடுத்தவரே! உம்மை ஆராதிக்கின்றேன். எனக்காக நற்கருணையில் வீற்றிருப்பவரே! ஆராதிக்கிறேன். "வாழ்வுதரும் உணவு நானே" என்றவரே! என் ஆன்ம பசியைப் போக்கும். இயேசுவே! உம் வார்த்தையை அனுப்பி என் அச்ச உணர்வுகள், என் தோல்விகள், கண்ணீர்கள், தனிமை, ஏக்கங்கள் அனைத்திலும் இருந்து விடுவித்தருளும். உமது காயத்தால் என் உடல் வாதைகள் அனைத்தையும் சுமந்தவரே! உமக்கு நன்றி கூறுகின்றேன்.எனக்கு சமாதானத்தை அருள வந்த உமக்கு, நான் என் பாவங்களால் துன்பங்களையே தந்தேன் ஐயா! என்னை மன்னியும். பாவிகளையே மீட்க வந்த தெய்வமே! என்பாவத்தை மன்னித்து புதுவாழ்வு தரபோவதற்காக நன்றி கூறுகிறேன். உமக்காக இரத்தம் சிந்தி தனது வாழ்வை உமக்காக அர்ப்பணித்த புனிதர்களைப் போன்று நானும்; அவர்களில் விளங்கிய மன வலிமையையும், தூய்மையான வாழ்வையும் என்னில் வளர்த்திட நிறைவான கிருபையையும்; உமது பலத்தை தூய ஆவி வழியாகவும் பெற ஆசீர்வதியும். தேவபயமும் தேவ பக்தியும்; நிறைந்த சாட்சியான வாழ்வு வாழ அருள் தாரும். இன்றைய நாளில் ஒவ்வொரு நிமிடமும் உமக்கு உகந்த மகனாக வாழவும், மற்றவரை உமது பாதையில் அழைத்து வரும் உம...

அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்

தூய அதிசய மின்னல் மாதாவை நோக்கி ஜெபம்       எங்கள் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக தரையிறங்கிய மின்னல் மின்னல் மாதாவே! ஒளி வெள்ளத்தில் மண்ணுக்கு வந்த தங்கத் தாரகையே மனச்சோர்வினால் வாடும் நெஞ்சங்களுக்கு, ஆதரவற்றோர்க்கு அடைக்கல பாதையே! துன்ப துயரங்களிலிருந்து விடுதலை அளிப்பவளே! வறுமையில் வாடும் ஏழைகளின் வாழ்வை வளமாக்கும் தீராத நோயினால் அல்லல்படும் நோயாளிகளை நலமாக்கும் உம்மையே தஞ்சமென்று நாடி வரும் அடியோர்களின் வாழ்வை வளமாக்கும் எங்கள் அனைவருக்காகவும் உம் திருமகன் இயேசுவிடம் பரிந்து பேசி பாதுகாப்பு அளித்தருளும் தாயே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம் எம் உள்ளழரை ஆமேன் !