Posts

Showing posts with the label சூசையப்பர் பாடல்கள்

எம்மை காத்திடும் சூசை தந்தையே நன்றி பாடியே வாழ்த்துகின்றோம்| Yemmai Kaathidum Soosai Thanthaiaye Nantri Paadiaye Vazlthukintrom

Image
எம்மை காத்திடும் சூசை தந்தையே நன்றி பாடியே வாழ்த்துகின்றோம் வளர்ந்து ஏறும் எம் திருச்சபையும் உந்தன் பாதுகாவலினால் தொழிலாளர்களின் பாதுகாவலரே சூசை தந்தையே எங்கள் குடும்பங்களின் பாதுகாவலரே சூசை தந்தையே உந்தன் பாதுகாவலில் இறைமகன் இயேசுவும்  ஞானத்தில் வளர்ந்தாரே உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால் இறைவாழ்வை காண்போமே கன்னி மேரியின் தூய்மை காத்தவரே சூசை தந்தையே இறை தந்தையின் திட்டம் ஏற்றவரே சூசை தந்தையே உழைப்பின் மேன்மை என்னில் உணர்த்திய தந்தையே உழைப்பால் உயர்வோமே உம் துணை என்றும் எம்மை தொடர்ந்து வந்தால் இறைவாழ்வை காண்போமே.

வாழ்க இயேசு கை தாதையே தேவ மாதா இன்பத்தாலே | Vazlga Yesu kai Thathaiayr Dheeva Madha Inbathaley

Image
    வாழ்க இயேசு கை தாதையே     தேவ மாதா இன்பத்தாலே     தாழ்மை மிகுந்தவரே     வாழ்க வாழ்க 1. துன்பப்படுவோர்களுக்கும்     துயரத்தாலே வாடுவோர்க்கும்     இன்பமான தஞ்சமே -2     வாழ்க வாழ்க  2. மாசில்லாத கன்னிகைக்கு     மணவாளன் ஆனவரே     புனித சூசை மாமுனியே - 2     வாழ்க வாழ்க 

தாதை சூசை முனியே உன் தாள் பணிவோம் இனிதே | Thaadai Susai Munniaye Un thall Pannivom Inithey

Image
தாதை சூசை முனியே உன் தாள் பணிவோம் இனிதே தாசர் எமை தினம் நினைந்தே - நீர் தாருமே உம் துணை கனிந்தே மீட்பர் இயேசுவைத் தாதா - மிக்க மாட்சிமை தங்கிடும் தூயா மாசில் மரியின் மணாளா - எமக்கு ஆசிரும் அருளும் தயாளா வாழ்வில் ஏழ்மையைக் கண்டாய் - மனத் தாழ்மை அதுவுமே கொண்டாய் ஞான நன்மை பல செய்வாய் - இந்த ஞாலமே ஒளிபெறச் செய்வாய்.

மறையோர் புகழும் மாவளனே மாமலர் மகிமையில் கொண்டவரே | Maraiyor Pugalum Mavazlaney Mamalar Mahimaiyil Kondavarey

Image
மறையோர் புகழும் மாவளனே மாமலர் மகிமையில் கொண்டவரே தேவமகன் திருத்தந்தையென்றே தேனுலகார் மரித்துணையென்றே மாதவம் செய்தாய் மகத்துவம் கொண்டாய் மானில வாழ்வினில் மேன்மைக் கொண்டாய் திருச்சபைக்கே பெரும் தந்தையரே திருஇல்லம் காத்திடும் எந்தையரே திருமறை வழுவா நீதியின் கருவாய் திகழ்ந்திடும் எங்கள் காவலரே

புனித வளனாரின் புகழ்மணக்க அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க| Punitha Vzlanaarin Puzgalmannaika Avar Ponnadi Pannivom Arul Siraika

Image
புனித வளனாரின் புகழ்மணக்க அவர் பொன்னடி பணிவோம் அருள்சிறக்க மனிதருள் சிறந்த மாணிக்க மாவரே மலையிலும் பலம் நிறைந்த மனம் படைத்தவரே நிலையினில் தவசா நேர்மையும் அவரே நித்திய மறையின் காவலும் அவரே நீதிமான் என்று அழைக்கப்படுபவரே திருக்குடும்பத்தை வழிநடத்தியவரே நல்மணரத்தின் பாதுகாவலரே துன்புறுவோரின் தேற்றரவே.

வந்தோம் உம் புகழ் பாடி வரம் தரும் வளன் முனிவா | Vanthoom Umm Puzgah Paadi Varam Tharum Vzlan Munniva

Image
வந்தோம் உம் புகழ் பாடி  வரம் தரும் வளன் முனிவா வாழ்க வாழ்க வாழ்க  மறையவர் போற்றும் மாவளனே மாமரி கற்பின் காவலனே நீதிமானின் புகழ்பாடிடவே நிதம் துதித்தோம் நின் காலடியே உழைப்பின் சிறப்பு உணர்ந்தவனே உழைப்பவர்க்குறுதி அளிப்பவரே உழைப்பால் மீட்பு அடைந்திடவே உம்மவர்க்கருள் தர வேண்டிடுவோம். 

கன்னியின் மகனை காத்த நல் வளனே உன்னடி பணிந்தோம் உறவினிலே| Kanniyin Maganai Kaaatha Nal Vazlaney Unnadi Panninthom Uraviniley

Image
கன்னியின் மகனை காத்த நல் வளனே உன்னடி பணிந்தோம் உறவினிலே இறைமகன் உந்தன் கரங்களிலே - தினம் இலங்கிடும் தூய ஒளியினிலே எம்மையும் இணைப்பாய் கருணையிலே இனி என்றுமே வாழ்வேன் அருளினிலே எகிப்திய பாலைவனத்தினிலே - உனை இறைவனாம் மரியும் தொடர்ந்தனரே எதிர்படும் பாலை வாழ்வினிலே  எமை இருகரம் நீட்டியே நடத்திடுவாய் 

செம்மலர் கரம் தன்னிலே வண்ணமாய் மலர் தாங்கும்

Image
செம்மலர் கரம் தன்னிலே வண்ணமாய் மலர் தாங்கும் தந்தையே அருள் வளனே போற்றுவோம் உமை நிதமே உன் கரம் இறைமைந்தன் அன்புடன் அமர்ந்திருந்தார்  உன் துணை வேண்டுமையா மன்னனை ஏந்துதற்கு மரியன்னை தூய்மை நெறி உம் நெறி பயனன்றோ புண்ணிய நெறிப் பேண உன் துணை வேண்டுமையா நீதியின் பாதையிலே நட்புடன் செல்வதற்கு அன்பர்க்குன் துணை வேண்டும் தந்தையே அருள்வளனே

பூங்கொடி தாங்கிடும் புனிதரே வாழ்க ஏசுவின் தந்தையாம் | Poongkodi Thaangidum Punitharey Vazlga Yesuvin Thanthaiyam

Image
பூங்கொடி தாங்கிடும் புனிதரே வாழ்க ஏசுவின் தந்தையாம் சூசையே வாழ்க வாழ்க சூசையே வாழ்க  வானுலகாளும் தேவனின் மைந்தன் வந்துரைத்தார் உன் கரங்களிலே ஞானமும் அறிவும் நீதியும் அன்பும் நிறைந்திருந்தன உன் கண்களிலே மாபெறும் கிறிஸ்து வேந்தனின் அன்னை வாழ்ந்திருந்தாள் உன் இல்லத்திலே மானிடர் போற்றும் கற்பென்னும் செல்வம் வைத்திருந்தாள் உன் உள்ளத்திலே

தென்றல் சூழலில் கமழும் மலராம் லீலி கரமேந்தி Thentral Soolalil Kamalum Malaram Leeli Karameenthi

Image
தென்றல் சூழலில் கமழும் மலராம் லீலி கரமேந்தி திகழும் முனிவா - எழிலார் தலைவா புகழ்சூசை வளன் தாதா (3) தூதன் கனவில் தோன்றி துரிதே பெயர்வீர் அயல்நாடே எனவே இசைந்து ஏகினீர் எகிப்து புகழ் சூசை வளன் தாதா (3) அறிவு ஞானம் கலையே அதிகம் அதிகம் எமக்கருள வளர் செய்தனையே - தினமும் வேண்டிடுவோம் புகழ் சூசை வளன் தாதா (3)

பாவாலும் மனப்பூவாலும் சூசை தாதாவை ஸ்துதிப்போம்| Paavaalum Manaipoovalum Soosai Thathavai Thuthiipoovom

Image
பாவாலும் மனப்பூவாலும் சூசை தாதாவை ஸ்துதிப்போம் பாதார விந்தம் தாள் பணிந்தே அவர் சீரோங்கிய பேராதரவை பெறுவோம் பூவாலும் புண்ணிய பூமான்யாரிலும் மேலான வரம் பூண்டவரை வேதாகமே நீதிமானென மிகவே மதிக்கும் மாதவரை வாசத் தண்மலர் சேர்க்கையின் தண்டமே வன்மையாகவே பூத்திலங்க மாசில்லாத மாமரியின் மணவாளனாக தகை பூண்டவரை

வான்போற்றும் மலரே சூசை முனியேஎன் தெய்வத் தந்தையே என்றும்

Image
வான்போற்றும் மலரே சூசை முனியே என் தெய்வத் தந்தையே என்றும் உன் அன்பு நிலையினில் ஓயாத உழைப்பினில் உன் பாதம் நான் தொடர்வேன் உந்தன் வாய்மை வழியினிலே என்றும் தூய்மை லீலியே அன்பின் சிறகினில் மகிழ்ந்து நான் வாழுவேன் 1. அறநெறி வாழ்வினில் அனைவருமே அருளினில் அகிலமும் சிறந்திடவே உழைப்பதன் மேன்மையை உணர்ந்திடவே உண்மையின் நெறியினில் உயர்ந்திடவே இறை இயேசுவை கையில் ஏந்திய புனிதருள் முதல்வனே மாமுனியே 2. இல்லறம் நல்லறம் என விளங்க இடர்பல ஏற்றிட துணிந்தவரே திருமறை என்ற சுடராய் ஒளிர்ந்தவரே இறைவனின் திருவுளம் அறிந்தவரே இறை இயேசுவை கையில் ஏந்திய புனிதருள் முதல்வனே மாமுனியே பீஏ ஹமஞூசுயூவிஏயூடி

மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே

Image
மாநிலம் போற்றிடும் மாவளனே திருமாமரி காவலனே-2 புனிதருள் முதல்வனே புகழ் சுமந்த -2 முனிவரனே உம் பதம் பணிந்தோம் -2 1. உழைப்பதன் வருத்தம் நீங்கியதோ இறைவன் கையில் தவழ்வதனால் (2) மலை போல் எழும் துயர் வாழ்வினிலே -2 மறைந்ததுவே தாய்மரி துணையால் 2. இறைவனின் பணிகள் செய்வதற்கு இரவும் நண் பகலும் உமக்கு மறைதரும் அருள்மொழி பெறுவதற்கு -2 மனத்திடம் தா உன் அடியவர்க்கு

என்றும் நீர்துணை மாவளனேஉன்னிடம்தான் எந்தன் புகலிடமே

Image
என்றும் நீர்துணை மாவளனே உன்னிடம்தான் எந்தன் புகலிடமே (2) மனதில் எல்லாம் உன் நினைவே நன்மைகளின் காவலனே வளனே வளனே மாவளனே வேண்டும் வரங்கள் தந்திடுவாய் (2) 1. பேச்சினிலே வாய்மையையும் நெஞ்சினிலே தூய்மையையும் நீர் தந்தால் வாழ்ந்திடுவேன் (2) உண்மையில் வழியினில் நான் சென்று ஒவ்வொரு நொடியிலும் உழைத்திடுவேன் உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் -2 வளனே ... ... 2. துன்பத்திலும் நீயிருப்பாய் தந்தையாய் நீ காத்திருப்பாய் இறையருள் யாவையும் பெற்றருள்வாய் (2) உன்னருள்தனிலே வாழ்ந்திருப்பேன் உன்கரம்தனிலே மகிழ்ந்திருப்பேன் உன்னிலே பேரின்பம் கண்டிடுவேன் - 2 வளனே ... ...

மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் | Mathumalar Niraikodi Kaiyilanthum

Image
மதுமலர் நிறைகொடி கையிலேந்தும் மாட்சிமை நிறைசூசை மாமுனியே துதிவளர் உமது நற்பதம் வந்தோம் துணை செய்து எமையாளும் தாதையரே வானுலகிழந்ததால் கர்வமுற்ற வன்மனக் கூளியின் வலையறுக்க தான் மனுவாய் உதித்த கடவுள் தாதையாம் சூசை உன் தஞ்சம் வந்தோம் ஒளிநிறை கதிரோனை ஆடை எனும் உடுவதைத் தலையிலும் முடிபுனைந்த துளிநிகர் அருள்பொழி மாமரியாள் துணைவனாம் சூசை உன் துணைபுரிவாய் தூதர் வானோர்க்கு மேலாய் உயர்ந்து துலங்கும் சிம்மாசனந் தனிலிருந்து ஆதிரையோரைக் கண் பார்த்துனது ஆசியை அளித்தருள் மாதவனே

எங்கள் காவலாம் சூசை தந்தையின் | Engal Kavalam Soosai Thanthaiyin

Image
எங்கள் காவலாம் சூசை தந்தையின் மங்களங்கள் எங்கும் சொல்லி இங்குப் பாடுவோம் -2 செங்கை அதிலே தங்க புஷ்பம் தங்கும் கோலை ஏந்திடும் -2 கன்னித் தாயாரின் பர்த்தா நீயல்லோ உன்னதமார் பேறும் மாட்சி உற்ற பாக்கியனே  -2 சென்னி மகுட முடி புனைந்த மன்னர் கோத்ர மாதவா  -2 இயேசு நாதரின் செல்வத் தாதை நீ நேச புத்திர துதியாம் பாடக் கூடி வந்தோமே -2 தேசம் ஒருங்கும் திசைகள் எங்கும் ஆசைகொண்டு பாடவே  -2 தந்தை என்றுன்னை வந்து பாடினோம் உந்தன் மைந்தன் சொந்தமென்று எம்மை காத்திட்டாய்  -2 அந்திக்காலை வந்த வேளை வந்து உதவி செய்திட்டாய்   -2