Posts

Showing posts with the label தவக்காலப் பாடல்

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் , aani konda um kaayangalai

Image
ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன்  பாவத்தால் உம்மை கொன்றேனே  ஆயரே என்னை மன்னியும்  வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே   இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே  அன்புடன் முத்தி செய்கின்றேன் வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே  இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே  அன்புடன் முத்தி செய்கின்றேன் திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே  திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே  அன்புடன் முத்தி செய்கின்றேன் -- (ஆணி கொண்ட)

காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே - Kaakum Yenthan Anbu Deivamey Kalam Thoorum

Image
காக்கும் எந்தன் அன்பு தெய்வமே காலம் தோறும் கரங்கள் தாங்கியே எம்மைக் காத்திடுவாய் 1. துன்பதுயரம் என்ற போது துணையாய் வந்த தெய்வமே உள்ளம் நொறுங்கி உடையும் வேளை உன்னைத் தேடி ஓடி வந்தேன் கருணை தெய்வமே கரங்கள் தாருமே 2. விடியல் நோக்கி நெருப்புத் தூணாய் பாலைநிலத்தில் நடத்தினாய் கடலை அடையத் துடிக்கும் ஆறாய் உந்தன் வழியாய் நடக்க வந்தேன் உடனே வாருமே உதவி தாருமே

அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ - Anbe Yenthan Aaruirey Anbal Uyiraith Thanthanaiaye

Image
அன்பே எந்தன் ஆருயிரே அன்பால் உயிரைத் தந்தனையோ துன்பம் உனக்கு நான் தந்தேன் - மன்னித்து என்னை ஏற்பாயே 1. சிலுவை உனக்கு அரியணையோ சிந்திய ரத்தம் மேலாடையோ கூரிய முள்தான் உன் முடியோ கூடிய காயம் உன் அழகோ 2. கரங்கள் விரித்து இருப்பதேனோ கனிவுடன் உன்னோடணைத்திடவோ கண்களில் இன்னொளி குன்றியதேனோ காரிருள் நின்று மீட்டிடவோ 3. உலகில் சிலுவைப் போதனையோ உயர்ந்ததாய் நீயும் தந்தனையோ நண்பனுக்காய் உயிர் தருவதைப்போல் அன்பில்லை என்று உரைத்தனையோ

கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை - Kalvari Malaiaye Noki Deivamey Nee Thananthaniaye Tharaiyil

Image
கல்வாரி மலையை நோக்கி தெய்வமே நீ தன்னந்தனியே தரையில் விழுந்து சிலுவை சுமப்பதும் ஏன் முத்தமிட்டு நண்பனே காட்டி கொடுத்த துரோகமோ புதிய உலகம் புதிய இதயம் காணும் லட்சிய நோக்கமோ 1. பாவி என்று யாரையும் நீ வெறுக்கவில்லை  தவறு செய்தால் தட்டிகேட்க மறுத்ததில்லை  உந்தன் குரலை கேட்டும் நீதிகேட்டு பயந்தனர் மிகப்பெரியவர் உன்னை பாரும் அந்த சிலுவை மரத்தில் அறைந்தனர் அந்த கொடியவர் அன்பு செய்தவன் நீ ஈர நெஞ்சவன் நீ தந்தாய் இவர்களை மன்னியும் தெரியாமல் செய்கிறார்கள் என்ற உன் மனது பெரியது உந்தன் இதயமும் பெரியது   2. சாதி என்றும் மதங்கள் என்றும் - பிரிக்கும் உலகில் பணம் பதவி மோகம் என்றும் மோதும் உலகில் இந்த குறையை நீக்க அன்பு என்னும் பெயரை தந்தவர் நீர் அன்றோ அன்புக்காக சிலுவை மரத்தில் ரெத்தம் சிந்தியது நீயன்றோ உடலை தந்தவன் நீ உயிரை ஈந்தவன் நீ நண்பனுக்காக உயிரையும் தந்திடும் அன்பே - உயர்ந்தது அதை தந்த உன் அன்பு உயர்ந்தது இதிலும் பெரியது வேறில்லை 

உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் - Ummidam Adaikalam Pugunthen Iraiva Ummidam

Image
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் இறைவா உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன் (2) அன்பு தேவன் நீ அருகிருக்கையில் ஆறுதலை அடைந்திடுவேனே உந்தன் அன்பையும் அறிந்திடுவேனே 1. அன்பு செய்த உள்ளங்கள் அகன்று போகலாம் அழுகையும் கண்ணீரும் சொந்தமாகலாம் நம்பிச் சென்ற மனிதர்கள் நகைத்து ஒதுங்கலாம் தனிமையும் வெறுமையுமே என்றும் தொடரலாம் இறைவா நீ என்னைக் கைவிடாய் துணையாய் நீ என்னுள் உறைந்திட்டாய் ஆறுதலாய் நீ இருக்க அச்சமின்றி வாழுவேன் 2. உண்மை நெறியில் செல்வதால் உலகம் வெறுக்கலாம் உரிமை காக்க உழைப்பதனால் உயிரைச் சிதைக்கலாம் பொதுநலனைப் பேணுவதால் பெயரை இழக்கலாம் வேதனையும் நெருக்கடியும் வாழ்வில் நிலைக்கலாம் இறைவா நீ ... ...  

உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் - Unakaga Maritheney yenakaga nee yenna Seithai

Image
உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் - 2 1. திருந்துவாய் என்று நான் நினைத்தேன் நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் -2 நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய்  ‌ 2. சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றேன் சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் -2 சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் 3.முழு முதல் கடவுளை தேடச் சொன்னேன் முதல்முறை தரையில் தள்ளி விட்டாய்-2 முதல்முறை தநையில் தள்ளி விட்டாய் 4. அருள் மிக நிறைந்த என் தாயே சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் - 2 சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் 5. என் சிலுவையை சுமக்க நான் உன்னை தேடினேன் சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய் - 2 சீமோனை காட்டி நீயும் ஒளிந்துக் கொண்டாய் 6. முகத்தை துடைத்தாள் என் முகம் தந்தேன் இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் - 2 இதம் அகம் சரிபாதி ஏற்க மறுத்தாய் 7. எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன் இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2 இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2 8. அழுதார் அழுதார் அன்புடையார் ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2 ஐயோ அதையும் கேலி செய்தாய்  9. உறவே உறவே மனிதம் என்றேன் உடைத்து உடைந்து தள்ளி விட்டாய் - 2 உடைத்து உடைந்த...

உனக்காக நான் மரித்தேனே / unakaga naan marithene

Image
உலகோர் உன்னைப் பகைத்தாலும் உண்மையாய் அன்பு கூறுவாயா? உற்றார் உன்னை வெறுத்தாலும் உந்தன் சிலுவை சுமப்பாயா? உந்தன் சிலுவை சுமப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் உலக மேன்மை அற்பம் என்றும் உலக ஆஸ்தி குப்பை என்றும் உள்ளத்தினின்று கூறுவாயா? ஊழியம் செய்ய வருவாயா? ஊழியம் செய்ய வருவாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல் மேய்கிறார் பாவப்புல் வெளியில் மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும் மேன்மையை நாடி போகிறாயா? மேன்மையை நாடி போகிறாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய் இயேசு என்றால் என்ன விலை என்றே கேட்டிடும் எத்தனை பேர் பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர் ஜீவ அப்பம் கொடுப்பாயா? ஜீவ அப்பம் கொடுப்பாயா? உனக்காக நான் மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய் (2) எனக்காக நீ என்ன செய்தாய்

வானகத் தூதர் அணி மகிழ்வதாக, பாஸ்கா புகழுரை, Vanaga Thoodar Anni mazkilvathaga

Image
கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி கிறிஸ்துவின் ஒளி இதோ - இறைவனுக்கு நன்றி வானகத் தூதர் அணி மகிழ்வதாக இத்திருச்சடங்கிலே பெருமகிழ்ச்சி பொங்குவதாக மாண்புமிக்க மன்னரது வெற்றிக்காக எக்காளம் தொனித்து மீட்பை அறிவிப்பதாக. இப்பெருஞ் சுடர்களால் ஒளிவீசப் பெற்று இவ்வுலகும் பெருமகிழ்ச்சி கொள்வதாக முடிவில்லா மன்னரது பேரொளியால் உலகெல்லாம் துலங்கி, தன்னைச் சூழ்ந்த இருளனைத்தும் ஒழிந்ததென்று உணர்வதாக. திருவிளக்கின் பெருஞ்சுடரால் அழகுபெற்று அன்னையாம் திருச்சபையும் களிகூர்வதாக. இறைமக்கள் அனைவரது பேரொலியால் இக்கோயில் எதிரொலித்து முழங்குவதாக. (எனவே, இத்திருவிளக்கின் வியத்தகு ஒளியைச் சூழ்ந்துநிற்கும் அன்புமிக்க சகோதர சகோதரிகளே, உங்களை வேண்டுகிறேன்: என்னுடன் சேர்ந்து, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவீரே. தகுதியற்ற அடியேனைத் திருப்பணியாளருள் (திருத்தொண்டருள்) சேர்த்திடத் தயைகூர்ந்த இறைவன்தாமே திருவிளக்கின் பேரொளியை என்மீது வீசி இத்திரியின் புகழ்சாற்றச் செய்வாராக). முன்மொழி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. பதில்: உம்மோடும் இருப்பாராக. முன். இதயங்களை ஆண்டவரி...

ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம், Ovaoru Pakirvum Punnitha Veyaalanam.

Image
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம் அந்த இயேசுவை உணவாய் உண்போம் இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம் (2) 1. இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே (2) வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே (2) நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம் -2 நாளைய உலகின் விடியலாகவே 2. பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே (2) இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே (2) இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் -2 இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே

ஆணி கொண்ட உன் காயங்களை | Aani Konda Un Kayangalai

Image
ஆணி கொண்ட உன் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் -  2 பாவத்தால் உம்மைக் கொன்றேனே -  2 ஆயனே என்னை மன்னியும் -  2 வலது கரத்தின் காயமே -  2 அழகு நிறைந்த இரத்தினமே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது கரத்தின் காயமே -  2 கடவுளின் திரு அன்புருவே அன்புடன் முத்தி செய்கின்றேன் வலது பாதக் காயமே -  2 பலன் மிகத் தரும் நற்கனியே அன்புடன் முத்தி செய்கின்றேன் இடது பாதக் காயமே -  2 திடம் மிகத் தரும் தேனமுதே அன்புடன் முத்தி செய்கின்றேன் திருவிலாவின் காயமே -  2 அருள் சொரிந்திடும் ஆலயமே அன்புடன் முத்தி செய்கின்றேன்

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் | Enathu Janamae Naan Unakku Enna Theengu Seithaen Sol

Image
எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய் எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே அதனாலே உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய்  ! -  எனது சனமே நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைநிலத்தில் வழிநடத்தி உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன் அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய் - எனது சனமே நான் உனக்காக எகிப்தியரை அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை வதைத்து ஒழித்தேன் நீ என்னைக் கசையால் வதைத்துக் கையளித்தாய் - எனது சனமே பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி எகிப்தில் நின்றுனை விடுவித்தேன் நீயோ என்னைத் தலைமையாம் குருக்களிடத்தில் கையளித்தாய்! - எனது சனமே நானே உனக்கு முன்பாக கடலைத் திறந்து வழி செய்தேன் நீயோ எனது விலாவை ஓர் ஈட்டியினாலே திறந்தாய்! - எனது சனமே மேகத்தூணில் வழிகாட்டி உனக்கு முன்னே நான் சென்றேன் நீயோ பிலாத்தின் நீதிமன்றம் என்னை இழுத்துச் சென்றாயே! - எனது சனமே பாலைவனத்தில் மன்னாவால் நானே உன்னை உண்பித்தேன் நீயோ என்னைக் கன்னத்தில் அடித்துக் கசையால் வதைத்தாயே! - எனது சனமே இனிய நீரைப் பாறை...

நம்பிக்கை தரும் சிலுவையே | Nambikkai Tharum Siluvaiyae

Image
நம்பிக்கை தரும் சிலுவையே நீ மரத்துட் சிறந்த மரம் ஆவாய் உன்னைப் போன்று தழை பூ கனியை எந்த காவும் ஈந்திடுமோ? இனிய சுமையை இனிய ஆணியால் இனிது தாங்கும் மரமே நீ மாட்சி மிக்க போரின் வெற்றி விருதை நாவே பாடுவாய் உலக மீட்பர் பலியதாகி வென்ற விதத்தைக் கூறியே சிலுவைச் சின்னமதைப் புகழ்ந்து ஜெயத்தின் கீதம் ஓதுவாய் (நம்பிக்கை) தீமையான கனியைத் தின்று சாவிலே விழுந்த நம் ஆதித் தந்தைக்குற்ற தீங்கை கண்டு நொந்த சிருஷ்டிகர் மரத்தால் வந்த தீங்கை நீக்க மரத்தை அன்றே குறித்தனர் (இனிய) வஞ்சகன் செய் சூழ்ச்சி பலவும் சூழ்ச்சியால் மேற்கொள்ளவும் பகைவன் செய்த கேட்டினின்று நன்மை விளையச் செய்யவும் வேண்டுமென்று நமது மீட்பின் ஒழுங்கில் குறித்து இருந்தது (நம்பிக்கை) எனவே புனித கால நிறைவில் தேவபிதா தம் மைந்தனை விண்ணில் நின்று அனுப்பலானார் அன்னை கன்னி வயிற்றிலே ஊன் எடுத்து வெளிவந்தாரே மண்ணகத்தைப் படைத்தவர் (இனிய) இடுக்கமான முன்னட்டியிலே கிடந்து குழந்தை அழுகிறார் தேவ உடலைத் துகிலில் பொதிந்து சுற்றி வைத்து கன்னித்தாய் இறைவன் அவர்தம் கையும் காலும் கச்சையாலே பிணைக்கின்றார் (நம்பிக்கை) முப்பதாண்டு முடிந்த பின்னர் உடலின்...

தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் | Thanthaiyae Um Kaiyil En Aaviyai Oppadaikkintren

Image
தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன் நான் ஒருநாளும் ஏமாற்றம் அடைய விடாதேயும் உம்முடைய நீதியின்பழ என்னை விடுவித்தருளும் உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் ஆண்டவரே வார்த்தையில் தவறாத இறைவா நீர் என்னை மீட்டருளும். என் எதிரிகள் அனைவருடையவும் பழிச் சொல்லுக்க நான் ஆளானேன் என் அயலாரின் நகைப்புக்கு இலக்கானேன் எனக்கு அறிமுகமானவர்களின் அச்சத்துக்குரியவன் ஆனேன் வெளியே என்னைக் காண்கிறவர்கள் என்னைவிட்டு ஓடுகின்றனர் இறந்து போனவன் போல் பிறர் கண்ணுக்கு மறைவானேன் உடைந்து போன மட்கலத்தைப் போலானேன் ஆனால் ஆண்டவரே நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன் நீரே என் கடவுள் என்றேன் என் கதி உம் கையில் உள்ளது ஆண்டவரே என் எதிரிகளிடமிருந்தும் என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்தும் நீர் என்னை விடுவித்தருளும் கனிந்த உம்திருமுகத்தை எனக்குக் காட்டியருளும் உம் அருளன்பைக் காட்டி என்னை ஈடேற்றும் ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்களே மனத்திடன் கொள்ளுங்கள் உங்கள் நெஞ்சம் உறுதி கொள்ளட்டும்  

திருச்சிலுவை மரமிதோ | Thiru Siluvai Maramitho

குரு :திருச்சிலுவை மரமிதோ இதிலேதான் தொங்கியது உலகத்தின் இரட்சணியம் எல் : வருவீர் ஆராதிப்போம்

ஊர்வலம் போகுது இறுதி ஊர்வலம் போகுது | Oorvalam Poguthu Iruthi Oorvalam Poguthu

Image
ஊர்வலம் போகுது - 3 இறுதி ஊர்வலம் போகுது அன்று இறைவனின் ஊர்வலம் இன்று மனிதனின் ஊர்வலம் -2 அதில் மாண்புகள் மலர்ந்திடும் புது வாழ்வுகள் பிறந்திடும் சுமையில்லாமல் பயணமில்லை சுவையில்லாமல் வாழ்வுமில்லை (2) சுமைகளை விரும்பி ஏற்றிடும் தோள்களில் சுமையும் சுவையாகும் இறைவனின் வழியாகும் - 2 வேதனையில்லாமல் பயணமில்லை வெற்றியில்லாமல் வாழ்வுமில்லை (2) துன்பமாம் சிலுவை வெற்றியின் சின்னம் வேதனை உரமாகும் தேவனின் வழியாகும் - 2

எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக, Yenakaga Iraiva yenakaga Idarpada vantheeer

Image
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக   1. பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர் பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார் -எனக்காக இறைவா 2. தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை மாளாத் துயரால் துடிக்க வைத்தார் -எனக்காக இறைவா 3. விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும் எழுந்தீர் துயர்களின் நினைவோடு -எனக்காக இறைவா 4. தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத் தாங்கிய அன்னை துயருற்றாள் -எனக்காக இறைவா 5. மறுத்திட முடியா நிலையாலே - சீமோன் வருத்தினார் தன்னை உம்மோடு -எனக்காக இறைவா 6. நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின் விலையாய் மாதின் சிறு துணியில் -எனக்காக இறைவா 7. ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததனால் - அந்தோ சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும் -எனக்காக இறைவா 8. விழிநீர் பெருக்கிய மகளிருக்கு - அன்பு மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர் -எனக்காக இறைவா 9. மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால் ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர் -எனக்காக இறைவா 10. உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த மடைகள் திறந்திட மெய் நொந்தீர் -எனக்காக இறைவா 11. பொங்கிய உதரம் வடிந்திடவே - உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே -எ...

எங்கே சுமந்து போகீறீர்? சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர், Yenkey Sumathu Poojareer Siluvaiaye Neer

Image
எங்கே சுமந்து போகீறீர்? சிலுவையை நீர் எந்கே சுமந்து போகிறீர் பொங்கும் பகைவராலே, அங்கம் நடு நடுங்க எங்கே போகிறீர் 1. மனித பாவத்தாலே, மரணத்தீர்வை பெற்று தூய செம்மறிபோலே, துக்கத்துடன் வருந்தி எங்கே போகிறீர் 2. பாரச்சிலுவை மரம், பாவத்தின் சுமை தாங்கி பாசத்துடன் அனணத்து, பாரத்துடன் நடந்து எங்கே போகிறீர் 3. கல்வாரி மலை நாடி, தள்ளாடி தரை வீழ்ந்து எல்லோரின் பாவங்களை, தனிமையால் சுமந்து எங்கே போகின்றீர் 4. மாமரி கன்னி அன்னை, மகனின் கோலங் கண்டு மாதுயருடன் வாடி, மனம் நொந்து வருந்த எங்கே போகிறீர் 5. உதிரம் ஆறாய் சிந்தி, உள்ள உரமிழந்து சீரேன் சீமோன் துணையை, ஏற்று வழி நடந்து எங்கே போகிறீர் 6. கர்த்தரே உம் வதனம், இரத்தக் கறையால் மங்கி உத்தமி வெராணிக்கம்மாள், வெண் துகிலால் துடைத்தும் எங்கே போகிறீர் 7. பாவங்கள் ஒன்றாய் சேர்ந்த, பாரச் சுமையினாலே மீண்டும் தரையில் வீழ்ந்தும் வீரத்துடன் எழுந்து எங்கே போகிறீர் 8. புண்ணிய ஸ்தீரிகள் பலர், புலம்பி அழும் வேளை ஆறுதல் கூறி நீரும், நேசக்கண்ணீர் சொரிந்து எங்கே போகிறீர் 9. சிலுவை பாரத்தாலே, மாமரி ஏகமைந்தன் மூன்றாம் முறை தரையில், முகம் படிந்தெழுந்தும் எங்க...

ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே, Yerukirar Thalladi Thavalnthu kalaipodey

Image
ஏறுகிறார் தள்ளாடி தவழ்ந்து களைப்போடே என் ஏசு குருசை சுமந்தே என் நேசர் கொல்கொதா மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார் கன்னத்தில் அவன் ஓங்கி அறைய சின்னப் பிள்ளை போல் ஏங்கி நின்கிறார் அந்தப் பிலாத்தும் கையை கழுவி ஆண்டவரை அனுப்புகிறேன் மிஞ்சும் பெலத்தால் ஈட்டி எடுத்தே நெஞ்சை பிளந்தான் ஆ! கொடுமை இரத்தமும் நீரும் ஓடி வந்தே இரட்சகரை நோக்கியே பார் இந்தப் பாடுகள் உந்தன் வாழ்வுக்காய் சொந்தப் படுத்தி ஏற்றுக் கொண்டார் நேசிக்கின்றாயோ ஏசு நாதரை நேசித்து வா குரு செடுத்தே சேவல் கூவிடும் மூன்று வேளையும் சொந்த குரவை மறுதலித்தான் ஓடி ஒளியும் பேதுருவையும் தேடி அன்பாய் நோக்குகின்றார் பின்னே நடந்தே அன்பின் சீஷன்போல் பின்பற்றிவா சிலுவை வரை காடியைபோல் கசந்திருக்கும் கஷ்டங்கள் அவரிடம் சொல் செட்டைகளின் கீழ் சேர்த்தணைத்திடும் சொந்த தாயின் அன்பதுவே எருசலேமே எருசலேமே என்றழுதார் கண்கலங்க

இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும்| Yesuvey Yen Deivamey Yenmel Manam Irangaum

Image
இயேசுவே என் தெய்வமே என் மேல் மனமிரங்கும் நான் பாவம் செய்தேன் உம்மை நோகச் செய்தேன் உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் என்னை மன்னியும் தெய்வமே 1. உம்மை மறுதலித்தேன் பின்வாங்கிப் போனேன் உம் வல்லமை இழந்தேனய்யா என்னை மன்னியும் தெய்வமே 2. முள்முடி தாங்கி அய்யா காயப்பட்டீர் நீர் எனக்காகப் பலியானீர் உம் இரத்தத்தால் கழுவிவிடும் 3. துன்ப வேளையிலே மனம் துவண்டு போனேன் உம்மை நினையாது தூரப் போனேன் என்னை மன்னியும் தெய்வமே 4. அநியாயம் செய்தேன் கடும் கோபம் கொண்டேன் பிறர் வாழ்வைக் கெடுத்தேனய்யா என்னை மன்னியும் தெய்வமே

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால். Yesuvin Anbai marathidu vaiyoo

Image
இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் 1. மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் மரித்து தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ 2. அளவில்லா அன்பு அதிசய அன்பு ஆழமகல நீளம் எல்லை காணா அன்பு களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு கல்வாரிமலைக் கண்ணீர் சொல்லிடுமன்பு 3. அலைகடலைவிடப் பரந்த அன்பு அன்னைமார் அன்பெல்லாம் திரையிடுமன்பு மலைபோல் எழுந்தென்னை வளைத்திடுமன்பு சிலையெனப் பிரமையில் நிறுத்திடுமன்பு 4. எனக்காக மனவுரு தரித்த நல்லன்பு எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு எனக்காகப் பாடுகள் ஏற்ற பேரன்பு எனக்காக உயிரையே தந்த பேரன்பு 5. கலைக்கடங்கா அன்பு கதிதரும் அன்பு கைதிபோல் இயேசுவைச் சிறையிடும் அன்பு விலையிலலாப் பலியாக விளங்கிடுமன்பு விவரிக்க விவரிக்க வளர்ந்திடும் அன்பு