Posts

Showing posts with the label திருப்பலி பாடல்

தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர்

Image
தூயவர் தூயவர் தூயவர் மூவுல கிறைவனாம் ஆண்டவர் வானமும் வையமும் யாவுமும் மாட்சிமையால் நிறைந்துள்ளன உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா ஆண்டவர் திருப்பெயரால் வருபவர் ஆசி பெற்றவரே உன்னதங்களிலே ஓசானா உன்னதங்களிலே ஓசானா

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே- Ulagin Paavam Pookum Iraivanin

Image
  உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே எம்மேல் இரக்கம் வையும் எமக்கு அமைதி அருளும்

உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக || Unnathangalile iraivanuku maatchimai

Image
உன்னதங்களிலே இறைவனுக்கே மாட்சிமை உண்டாகுக  உலகினிலே நல்மனத்தவர்க்கு  அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே வாழ்த்துகின்றோம் இறைவனே உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மகிமைப்படுத்துகின்றோம் யாம் உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் தேவ தந்தை இறைவனே ஏகமகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திருச் செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர் உலகின் பாவம் போக்குபவரே எம்மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர் ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர் நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர் பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்  மாட்சியில் உள்ளவர் நீரே - ஆமேன்.  

ஆண்டவரே இரக்கமாயிரும் || Andavarey Irakamairum

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்

தேவாலய வலப்புறமிருந்து தண்ணீர் புறப்படக் கண்டேன்|| Devalaiya vala puram irunthu

Image
தேவாலய வலப்புறமிருந்து  தண்ணீர் புறப்படக் கண்டேன்- அல்லேலூயா அந்தத் தண்ணீர் யாரிடம் வந்ததோ அவர்கள் யாவருமே ஈடேற்றம் பெற்றுக் கூறுவர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள் ஏனெனில் அவர் நல்லவர் அவர் தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே பிதாவும் சுதனும் தூய ஆவியும் துதியும் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் புகழும் ஒன்றாய்ப் பெறுக ஆதியில் இருந்ததுபோல் இன்றும் என்றும் நித்தியமாகவும் -ஆமேன்.