Posts

Showing posts with the label தூய ஆவி பாடல்

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் - Thooyaadhi thooyavarae – umadhuPugazhai, naan paaduvaen

Image
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே – தூயாதி 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே – தூயாதி 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே – தூயாதி 4. பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே – தூயாதி

ஆண்டவர்க் குகந்த புனிதரிதோமாந்தர் அனைவரின் புகழ்பெற்றார் - Andavarikugantha Pudgarithomanthar Annaivarin puzgalpeeta

Image
ஆண்டவர்க் குகந்த புனிதரிதோ மாந்தர் அனைவரின் புகழ்பெற்றார் ஈடிணையில்லா வந்தனையும் இன்றே பெறவும் தகுதி பெற்றார் 1. புனிதம் தகைமை தாழ்ச்சியுடன் பொற்புரு கற்புக் கணிகலனாய் உடலில் உயிரும் உள்ளவரை உன்னத வாழ்வும் வாழ்ந்தாரே 2. அவரது புனித வாழ்க்கையினால் ஆயிரம் பேர்கள் ஆங்காங்கே அவல நோய்கள் கொண்டவர்கள் அற்புதமாகவே குணம் பெற்றார் 3. ஆகவே நாமும் சபையாக அவரது புகழ்தனைப் பாடுவதால் உற்ற அவரது வேண்டுதலால் உதவிகள் பெற்று மகிழ்வோமே 4. விண்ணக அரியணை மேலமர்ந்து மின்னிடும் ஒளியில் வீற்றிருந்து மூவுலகெல்லாம் ஆண்டு வரும் மூவொரு இறைவன் வாழியவே - ஆமென்

தேவ ஆவியே தூய ஆவியே – திவ்யபிரசன்னத்தால் தாகம் தீருமே - thaeva aaviyae thooya aaviyae – thivyapirasannaththaal thaakam theerumae

Image
தேவ ஆவியே தூய ஆவியே – திவ்ய பிரசன்னத்தால் தாகம் தீருமே 1.ஆறுதல் அளிப்போனே தேற்றரவாளனே அடியார்களிடம் என்றென்றும் தங்குவோனே 2.சத்திய ஆவியே சக்தியும் அளிப்போனே சாட்சி பகர்வோனே சத்தியர் இயேசுவே 3.புறாவின் ரூபமே பிதாவின் மகிமையே புதிய எண்ணெயால் புதுப்பித்தருளுமே 4.ஆண்டவர் ஆலயமாம் எங்களின் இதயமே ஆவியின்வாசஸ்தலம் தூய்மைப்படுத்துமே

ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே - aaviye thooya aaviye

Image
ஆவியே தூய ஆவியே ஆவியே தூய ஆவியே 1. சுகம் தாரும் தேவ ஆவியே பெலன் தாரும் தூய ஆவியே 2. ஜெயம் தாரும் தேவ ஆவியே வரம் தாரும் தூய ஆவியே 3. தாயிலும் மேலாக நேசித்தீரே தந்தையிலும் மேலாக அரவணைத்தீர் 4. யாருமே இல்லாமல் தவிக்கும்போது நீரே வந்து என்னை ஆதரித்தீர்

ஆவியிலே புதுமை அடைவோம் - அருள் ஆழியிலே மூழ்கிக் களிப்போம் - Aavileaye Pudumai Adaivom Arul Aaliyiley

Image
ஆவியிலே புதுமை அடைவோம் - அருள் ஆழியிலே மூழ்கிக் களிப்போம் இயேசுவுக்கு சான்று பகர்வோம் - அவர் சாட்சிகளாய் வாழ்வை அமைப்போம் 1. அன்பு என்னும் ஆடையணிவோம் - நல்ல ஆனந்த அமைதி அடைவோம் ஆதி சபை வாழ்க்கையினை ஆண்டவரின் ஆவியிலே வீதியெங்கும் கண்டு களிப்போம் 2. வேதனையாம் அலைகள் ஓங்கலாம் - பெரும் சோதனையாம் புயலும் வீசலாம் இறைவன் நம்மைக் காக்கின்றார் இன்பமுற அழைக்கின்றார் நிறைவாழ்வு இன்று அடைவோம் 3. பிரிவினையாம் நோய்கள் தீரும் - இனி குறுகிய நம் பார்வை மாறும் இறையரசின் கொடைகளையும் புனித அருங்குறிகளையும் இல்லங்கள் கண்டு மகிழும்  

ஆவியானவரே என்னை நிரப்பிடுமே அல்லேலூயா அல்லேலூயா - Aaviyanavarey Yennai Neerapidumey Hallelujah hallelujah

Image
ஆவியானவரே என்னை நிரப்பிடுமே அல்லேலூயா அல்லேலூயா 1. உண்மையின் ஆவி உயிருள்ள ஆவி நீதியின் ஆவி நேர்மையின் ஆவி 2. ஞானத்தின் ஆவி நேசத்தின் ஆவி ஒளியின் ஆவி ஒற்றுமையின் ஆவி 3. சாந்தத்தின் ஆவி சத்தியத்தின் ஆவி வல்லமையின் ஆவி மீட்பின் ஆவி

ஆவியானவரே ஆவியானவரே‌ அபிஷேகம் செய்யும் ஆவியானவரே -Aavi Yanavarey Abiseegam Seium Aaviyanavarey

Image
ஆவியானவரே ஆவியானவரே அபிஷேகம் செய்யும் ஆவியானவரே உம் திருக்கொடைகளால் எம்மை நிரப்பும் 1. ஆரோனை அபிஷேகம் செய்தவரே குருகுலமாய் தெரிந்து கொண்டவரே 2. ஏசாவை அபிஷேகம் செய்தவரே தீர்க்கதரிசியாய் தெரிந்தவரே 3. தாவீதை அபிஷேகம் செய்தவரே இஸ்ரயேலின் அரசனாய் தெரிந்தவரே

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே - AaviYanavarey Anbin Aavi Yanavaerey Ippo Varum Irangi Varum

Image
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே 1. உலையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே 3. ஆவியின் வரங்களினால் எம்மையும் நிரப்பிடுமே எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே

ஆவியான தேவனே அசைவாடுமே அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே - Aavi Yana Devaney Asaivadumey

Image
ஆவியான தேவனே அசைவாடுமே அருள்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே வாரும் ஆவியே தூய ஆவியே 1. தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே - உம் திருக்கரத்தின் வல்லமையைப் பொழிந்திடுமய்யா 2. ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே - என் சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா 3. தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே - என் துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா  

அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே - Appa Pidathavey Anbana Deva

Image
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே 1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி 2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் 3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்தி கழுவி அணைத்தீரே 4. இரவும் பகலும் அய்யா கூட இருந்து எந்நாளும் காப்பவரே மறவாத தெய்வம் மாறாத நேசர் மகிமைக்குப் பாத்திரரே 5. ஒன்றை நான் கேட்டேன் - அதையே நான் தேடி ஆர்வமாய் நாடுகிறேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம் பணி செய்திடுவேன்