Posts

Showing posts with the label ஜெபமாலை Tamil Rosary

மகிமை நிறை மறை உண்மைகள்(புதன், ஞாயிறு)

Image
தந்தை! மகன்! தூய ஆவியாரின்! பெயராலே - ஆமென். தூய ஆவியார் செபம் தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென். தொடக்க செபம் எல்லா நன்மைகளும் நிறைந்த அன்பு இறைவா, கெட்ட மனித...

ஜெபமாலை மறை உண்மைகள்

Image
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனி) 1. கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக. 2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. 5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக. துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளி) 1. இயேசு பூங்காவனத்தில் இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக மனத்துயர் அடைய செபிப்போம்! 2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிக்கப்பட்ட தியானித்து உடலின் புலன்களை அடக்கி வாழும் வரத்தைக் கேட்டு செபிப்போம்! 3. இயேசு முள்முடி தரிக்கப்பட்டதை தியானித்து நிந்தை அவமான...

மிகவும் இரக்கமுள்ள தாயே!

கிருபை தயாபத்து மந்திரம் கிருபைதயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவாளின் மக்கள், உம்மைப் பார்த்து கூப்பிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பரதேசங்கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே! - இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்படி! - சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென். செபிப்போமாக : சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற இறைவா! முத்திபேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும் சரீரமும் தூய ஆவியின் அனுக்கரகத்தினாலே தேவரீருடைய திருமகனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கெனவே நியமித்தருளினீரே. அந்த திவ்விய...

கிருபை தயாபத்து மந்திரம்

தூய ஆவியார் செபம்

தூய ஆவியார் செபம் தூய ஆவியாரே / எழுந்தருளி வாரும். விண்ணகத்திலிருந்து / உமது பேரொளியின் அருள் சுடர் எம் மீது அனுப்பிடுவீர். எளியோரின் தந்தையே வந்தருள்வீர் / நன்கொடை வள்ளலே வந்தருள்வீர் / இதய ஒளியே வந்தருள்வீர். உன்னத ஆறுதல் ஆனவரே / ஆன்ம இனிய விருந்தினரே / இனிய தன்மைத் தருபவரே / உழைப்பின் களைப்பைத் தீர்ப்பவரே / வெம்மைத் தணிக்கும் குளிர் நிழலே / அழுகையில் ஆறுதல் ஆனவரே / உன்னதப் பேரின்ப ஒளியே / உம்மை நம்புவோருடைய இதயத்தின் ஆழம் நிரப்பிடுவீர். உமது அருள் ஆற்றல் இல்லாமல் மனிதரில் எதுவும் இல்லை / நல்லது அவனில் எதுவும் இல்லை / மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வரட்சியுற்றதை நனைத்திடுவீர். காயப்பட்டதை ஆற்றிடுவீர். வணங்காதிருப்பதை வளைத்திடுவீர். குளிரானதை குளிர் போக்கிடுவீர். தவறிப் போனதை ஆண்டருள்வீர். இறைவா உம்மை நம்பும் அனைவருக்கும் / உமது ஏழு கொடைகளையும் வழங்கிடுவீர். புண்ணியப் பலன்களையும் வழங்கிடுவீர் / இறுதியில் மீட்பை அளித்து அளவில்லாத இன்பமும் அருள்வீரே. -ஆமென்.

ஜெபமாலை அம்சங்கள்

செபமாலையில் இரண்டு அம்சங்கள் உள்ளன : 1. வாய்ச் செபம். 2. அதே வேளையில் நாம் உள்ளத்தில் தியானிக்க வேண்டிய மறை நிகழ்ச்சி என்ற மனச் செபம். 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து கொண்டிருந்தார்' என்பதை லூக்கா இருமுறை நினைவுப் படுத்துகிறார் (2: 19, 51). அந்த அன்னையின் இதயங் கொண்டு, அவரது பார்வையில் நம் மீட்பின் மறைநிகழ்ச்சிகளை நாம் தியானிக்கிறோம். அந்த மறை நிகழ்ச்சிகள் நம் மீட்புப் பணியின் நான்கு கட்டமாக தியானிக்கலாம் 1. தம்மையே வெறுமையாக்கி மனித உருவில் தோன்றினார் - மகிழ்ச்சி மறைநிகழ்ச்சிகள். 2. இயேவுவின் பணிவாழ்வு, இறையன்பின் வெளிப்பாடு - ஒளியின் மறை நிகழ்ச்சிகள். 3. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்படிபவரானார் - துயர மறை நிகழ்ச்சிகள். 4. கடவுள் அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தினார் - மகிமை மறை நிகழ்ச்சிகள். நற்செய்தியின் பொழிவே செபமாலை என்பதால், அனைவரும் பாராட்டிப் பயில வேண்டிய பக்தி முயற்சி இது.