Posts

Showing posts with the label Tamil Christian songs lyrics

அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான்

Image
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே 6. அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா 8. யேகோவா ஷாலோம் சாமாதானம் தருகிறீர் சாமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம் சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்

Image
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே

அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார்.

Image
அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார் அவர் கைக்கும் எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

அதி-மங்கல காரணனே துதி-தங்கிய பூரணனே

Image
அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி-மங்கின எங்களுக்கும், திதி-சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே - அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும், மிகு-உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்? - அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ? - அதி-மங்கல

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே

Image
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளேநல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்

Image
1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர், உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர். எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. 4. வாலிபர் நெறி தவறாமலும், ஈனர் இழிஞரைச் சேராமலும், ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே நல் சேவை செய்ய நீர் அருள்வீரே. 5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய் காரும், உம் பலம் ஆறுதல் தாரும் நோயுற்றோர் பலவீனர் யாரையும் தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும். 6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும் அன்பாய் அணைத்து ஆதரித்திடும் அவரைக் காத்து அல்லும் பகலும். 7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர, ஆவியில் அன்பில் என்றும் பெருக, எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள் இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

Image
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே (2) இடம் அசைய உள்ம் நிரம்ப இறங்கி வாருமே(2) பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே (2) கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே (2) அசைவாடும்... தேற்றிடுமே உள்ங்களை இயேசுவின் நாமத்தினால் (2) ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் (2) அசைவாடும்... துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் (2) நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே (2) அசைவாடும்...

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும்

Image
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2) 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே (2) எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2) எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2) அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் (2) இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2) எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2) 3. ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் (2) யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2) எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2) 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2) அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2) ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2) 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2) இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2) எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)

அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய்

Image
1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் நிறைந்த மீட்புண்டாக்கினார் என் ரட்சகர், என் நாதர்.

அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா | Akilamengum sella va

Image
அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கழ்படிந்து எழுந்து வா – 2 1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா - 2 2. தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா – 2 3. நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே| Akilathaium Aakayathaium Unthan Valla

Image
அகிலத்தையும் ஆகாயத்தையும் உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே உந்தன் நல்ல கரத்தினாலே ஆகாதது ஒன்றுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை சர்வ வல்லவரே கனமகிமைக்கு பாத்திரரே ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை Ah! Lord God, Thou hast made the Heavens And the earth by Thy great power Ah Lord God, Thou hast made the heavens And the earth by Thine outstretched arm. Nothing is too difficult for thee (2) Great mighty God. Great in counsel and mighty in deed Nothing Nothing, Absolutely nothing Nothing is too difficult for Thee.

ஆராதனை ஆராதனை துதி ஆராதனை| Arathanai Arathanai Thuthi Arathanai

Image
ஆராதனை ஆராதனை துதி ஆராதனை ஆராதனை -(2) காலயிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கே தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை -(2) வான பிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணிரே உமக்கு ஆராதனை -(2) மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை 

இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் | Yesuvae Vazhventu kattrukonden – Yesuvae vaalventu kattukkonntaen

Image
இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2) என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2) நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும் தடையெல்லாம் விடையாக மாறிப்போகும் அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும் பரலோகம் எனக்காக வேலை செயும் – (2) 1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும் என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2) என் நெரத்தை முதலீடு செகிறேன் மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும் 2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக எங்கள் சபையும் பெருகுதே – (2) தேசத்தின் கட்டுகள் மாறுதே அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும் 3. அந்நிய பாஷை பேசப் பேச ஆவியும் அனலாய் மாறுதே – (2) நான்சொல்ல பரலோகில் கட்டுமே நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்

தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா ||thaaypola thaetti thanthai pola aatti

Image
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா 1. மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா 2. பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா 3. தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா

என்னைக் காண்பவரேதினம் காப்பவரே||Ennai KaanbavaraeThinam Kaappavare

Image
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர் நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் உம் திருக்கரத்தால் தினமும் என்னைப் பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர்

நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் || Naan Padumbothu En Udhadu -

Image
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும்-2 1.நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும்-2 உம் துதியால் என் நாவு நிறைந்து இருப்பதாக-2 நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்-2-பாடும்போது 2.எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே-2 புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே-2-நாள்தோறும் 3.(நான்) கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர்-2 (ஒரு) குறைவின்றி குழந்தையாக வெளியே நீர் கொண்டுவந்தீர்-2-நாள்தோறும் 4.(என்) இளமை முதல் இதுவரையில் நீரே என் எதிர்காலம்-2 நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும்-2-நாள்தோறும் 5.(நான்) முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே-2 (என்) பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே-2-நாள்தோறும்

அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு||Anal Mooti Eriya Vidu ||Berkmans song

Image
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார் பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானே அக்கினித்தூணும் இவர்தானே நடக்கும் பாதையெல்லாம் தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார் உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய

அக்கரைக்குப் போவோமா மக்காஜாலியாகப்போவோமா||akkaraikkup povomaa makkaajaaliyaakappovomaa

Image
அக்கரைக்குப் போவோமா மக்கா ஜாலியாகப்போவோமா படைத்தவரின் வழியிலே பயணம் போவோமா – பரிசுத்தரின் பாதையில் பயணம் போவோமா மகிமையான வழியிலே மோட்சம் போவோமா உண்மையின் வழியிலே பயணம் போவோமா தடைகளை தாண்டி பயணம் மா போவோமா நமக்கிருக்கும் இலக்கை நோக்கி வேகம் போவோமா அக்கரைக்குப் போவோம் நாம் வேகமாகப் போவோம் நாம்

அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் சஞ்சாரி|| akkaraikku yaaththiraiseyyum seeyon sanjaari

Image
அக்கரைக்கு யாத்திரை செய்யும் சீயோன் சஞ்சாரி ஓளங்கள் கண்டு நீ பயப்படண்டா காற்றினேயும் கடலினேயும் நியந்திறிப்பான் களிவுள்ளோன் படகிலுண்டு 1. விஸ்வாசமாம் படகில் யாத்ற செய்யும் போள் தண்டு வலிச்சு நீ வலஞ்ஞிடும் போள் பயப்படண்டா கர்த்தன் கூடேயுண்டு அடுப்பிக்கும் ஸ்வர்கீய துறமுகத்து 2. என்றே தேசம் இவிடே அல்லா இவிடே ஞான் பரதேச வாசியாணல்லோ அக்கரையா என்றே சாஸ்வத நாடு அவிடெனிக் கொருக்கிற்ற பவனமுண்டு 3. குஞ்ஞாடதின்றே விளக்காணு இருளொரு லேசவும் அவிடேயில்லா தருமெனிக்கு கிரீடமொந்து தரிப்பிக்கும் அவனென்ன உல்சவ வஸ்த்ரம்

எபிநேசரே எபிநேசரே நன்றி நன்றி இந்நாள் வரை சுமந்தவரே நன்றி

Image
John Jebaraj Songs  நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு போல சுமந்தீரே நன்றி 1. ஒன்றுமே இல்லாமல் துவங்கின என் வாழ்வு நன்மையால் நிறைந்துள்ளதே-2 ஓரு தீமையும் நினைக்காத நல்ல ஒரு தகப்பன் உம்மைப்போல இல்ல-2-எபிநேசரே 2. அன்றன்றைக்கான என் தேவைகள் யாவையும் உம் கரம் நல்கியதே-2 நீர் நடத்திடும் விதங்களை சொல்ல (ஒரு) பூரண வார்த்தையே இல்ல-2-எபிநேசரே 3. ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னையும் அழைத்தது அதிசயமே-2 நான் இதற்கான பாத்திரன் அல்ல இது கிருபையே வேறொன்றும் இல்ல-2-எபிநேசரே