Posts

Showing posts with the label கிறிஸ்துமஸ் பாடல்

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார் இயேசு பிறந்தார்||chinnachiru kulanthaiyai piranthar

Image
சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்! இயேசு பிறந்தார்! பாவத்தைப் போக்க, பயமதை நீக்க, பாலகனாய்ப் பிறந்தார் 1. மேய்ப்பர்கள் வந்தனரே! மிக வேகமாய் வந்தனரே! சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து பணிந்து கொண்டனரே! 2. வாருங்கள் மானிடரே! இயேசுவின் பின் செல்லவே! சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து, பின் செல்லுவீர் என்றுமே!

ஆறுதலின் மகனாம்என்னும் நாமம் பெற்றோனாம்||aaruthalin maganaam

Image
1. ஆறுதலின் மகனாம் என்னும் நாமம் பெற்றோனாம் பக்தன் செய்கை, வாக்கிலே திவ்விய ஒளி வீசிற்றே 2. தெய்வ அருள் பெற்றவன் மா சந்தோசம் கொண்டனன் வார்த்தை கேட்ட நேகரும் சேர்ந்தார் கர்த்தர் அண்டையும் 3. பவுல் பர்னபாவையும் ஊழியத்திற்கழைத்தும் வல்ல ஞான வரத்தை ஈந்தீர் தூய ஆவியை 4. கிறிஸ்து வலப் பக்கமாய் நாங்களும் மாசற்றோராய் நிற்க எங்கள் நெஞ்சையும் தேவரீரே நிரப்பும்

கண்ணான கண்ணின் மணி கண்ணுறங்கு செல்ல மணி

Image
கண்ணான கண்ணின் மணி கண்ணுறங்கு செல்ல மணி ஆரிரோ நான் பாடுவேன் பொன்னான பொன்னின் மணி பொங்கி வரும் வெள்ளிமணி தாலேலோ நான் பாடுவேன் ஆராரோ பாட இங்கு யாருமில்லேன்னு நீ வாடத் தேவையில்லை நானும் உன்னோடு தாயாக நான் இருப்பேன் கண்ணா கண்ணா உன்னோடு தான் இருப்பேன் ஒண்ணா 1. உலகத்தில் எல்லாரும் வேகமாக போகுறாங்க உனை வந்து பாக்குறது வீண் என்று எண்ணுறாங்க வாடாதே வாடாதே எந்தன் கண்ணே யார் எங்கே போனாலும் நான் உன் முன்னே காலம் ஒருநாள் மாறும் - நம் கவலை யாவும் தீரும் நாளும் ஒருநாள் விடியும் - நல்ல உறவும் மண்ணில் மலரும் கண்ணே நீ இப்போது கண்மூடித் தூங்கு 2. ஈராயிரம் காலமாக ஆண்டு தோறும் மறக்காம இயேசு பிறப்பு நாளில் எல்லோரும் மகிழ்வாங்க (2) மெய்யாக மெய்யாக நீதான் கண்ணே இயேசென்னும் பிஞ்சுப் பூ மண்ணில் கண்ணே உன்னை அறிந்தவர்கள் வருவார்கள் உள்ளதை உன்னிடம் தருவார்கள் உறவின் வாழ்த்துகள் உரைப்பார்கள் உளமதில் அமைதி பெறுவார்கள் கண்ணே நீ இப்போது கண்மூடித் தூங்கு

கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை அன்பு காணிக்கை

Image
கடவுள் இந்த உலகினுக்களித்த காணிக்கை அன்பு காணிக்கை (2) அன்னை மரியின் வயிற்றில் பிறந்த மைந்தன் காணிக்கை தெய்வ காணிக்கை (2) 1. மனித உறவினை விரும்பிய இறைவன் மைந்தனைத் தந்தான் காணிக்கை (தன்) 2 புனித அன்பின் வெளிப்பாடாக புதல்வனைத் தந்தான் காணிக்கை (தன்) 2 இறைவன் தந்தான் காணிக்கை உளம் எண்ணி வியக்கும் காணிக்கை (2) இயேசுவே அந்த காணிக்கை விலைமதிக்க இயலா காணிக்கை (2) 2. காணிக்கை தந்த இறைவனுக்கு கைமாறென்ன செய்திடுவோம் (நாம்) 2 ஊனுடல் தந்த இயேசுவுக்கு உவந்திட என்ன தந்திடுவோம் (அவர்) 2 இறைவன் நமது தந்தை என்று வாழ்வது நமது காணிக்கை -2 இயேசு வாழ்வின் ஒளியென காட்டி பகர்வது இதய காணிக்கை -2

ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே

Image
ஏற்றிடுவீர் எம் காணிக்கைப் பொருளை எமக்காய்ப் பிறந்த நல் இயேசுவே (2) 1. அன்பாலே உலகை நிரப்பிய அழகே அளிக்க வந்தோம் எங்கள் இதய அன்பை (2) ஆவியின் கனிகளைப் பொழிகின்ற தலைவா தருகின்றோம் தனிப்பதம் பணிந்தே 2. என் நெஞ்சில் நிம்மதி ஒளிதந்த நிலவே இன்னுயிர் கலந்த வான்முகிலே (2) வாழ்வினை பலியாய் மலர்ப்பதம் படைத்தே -2 இறைஞ்சுகின்றோம் பரமனின் திருமுன் 3. பொன்னோடு போளமும் தூபமும் ஏந்தி மன்னவர் மூவர் காணவந்தார் (2) மூவுலகாளும் ஆண்டவர் உமக்கே -2 மனமுவந்தே காணிக்கை தந்தோம்

என்னிதய வேந்தனே இயேசு பாலனே உன்னைத் தாலாட்ட வா ராஜனே எந்தன் தாயாக வா

Image
என்னிதய வேந்தனே இயேசு பாலனே உன்னைத் தாலாட்ட வா ராஜனே எந்தன் தாயாக வா (2) ஆராரிரோ ஆரிரரோ - 2 1. பாவிநம் அருகிலே மரியன்னை மடியிலே பூமகன் அழுவதும் ஏனோ இந்த பாமரன் பாவங்கள் தானோ (2) கந்தையை உடுத்தியே சிந்தையைக் கவர்ந்திட்டாய் -2 விந்தை என் இயேசு பாலனே இந்த மந்தையைக் காக்கும் மீட்பனே - ஆராரிரோ ஆரிரரோ - 2 2. உலகம் முழுவதும் உந்தன் கையிலே கலகமின்றி வாழுதே என்றும் அமைதியை உன்னில் காணுதே (2) ஏழ்மையின் சின்னமாய் எளிமையின் கோலமாய் - 2 குடிலினில் உம்மைத் தந்தவா இந்த குவலயம் காக்க வந்தவா - ஆராரிரோ ஆரிரரோ - 2

என் இயேசுவே என் தெய்வமே என் வாழ்வில் வாழ்வாய் மலர்ந்தவரே

Image
என் இயேசுவே என் தெய்வமே என் வாழ்வில் வாழ்வாய் மலர்ந்தவரே (2) உன் சக்தி ஆற்றல் என்னோடு வாழும் என் செயல்கள் எல்லாம் உன் பெயரைச் சொல்லும் (2) என் இயேசுவே என் தெய்வமே என் இதயப் பேழையில் பிறந்தவரே 1. உன் ஸ்பரிசம் என் அங்கம் எங்கெங்கும் உண்டு உடல் தூய்மை போற்றியே என்றென்றும் வாழ்வேன் அறிவாற்றல் ஒளியேற்றும் தீபம் நீ வாழும் என் நினைவினிலே இருள் சூழ ஒருபோதும் துணியேன் என் இதயமே பேராலயம் திருப்பீடத்தில் அருள் ஓவியம் மலராய் மணமாய் நான் மாறுவேன் - 2 2. நீ சென்ற காலடித் தடயங்கள் தேடும் குழந்தையாய் தொடர்வேன் உனை தினமும் வேண்டி மண்மேடோ மலைமுகடோ முட்புதரோ எதுவோ உனைத்தொடர்ந்து நான் வருவேன் தடைகளைத் தாண்டி அன்பாலே வாழ்வை அர்ச்சனை செய்வேன் நேயத்தின் செயலால் உன் விருந்தில் அமர்வேன் உறவே உயிரே உனைப் பிரிய மாட்டேன் - 2

எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம்

Image
எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம் (2) அன்னை மரியின் மடியில் தவழும் இயேசுவை வணங்கிடுவோம் - அவர் வானம் புகழ பூமி மகிழ மண்ணகம் வந்துவிட்டார் வாங்க - வாழ்த்திப் போற்றிடுவோம் எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம் (2) 1. வார்த்தையே மனுவாய் உருவான கடவுள் வானவன் அன்பால் மீட்பரானார் வானகம் விட்டு வாழ்விக்க வந்தார் வானோர் போற்றும் தூயரானார் பாவம் போக்கும் மாவீரன் இவரே பாலகனாய் இங்கே தூங்குகின்றார் (2) ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த இயேசுவை வணங்கிடுவோம் - நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம் எளிய வடிவில் குடிலில் பிறந்தார் வாங்க வணங்கிடுவோம் (2) 2. ஏழை எளிய இறைமக்கள் வாழ்வில் ஒளியை ஏற்ற பிறந்துவிட்டார் பாவம் அறியா பரிசுத்த தேவன் பாவிகள் நமக்காய்த் தோன்றிவிட்டார் சமத்துவம் ஓங்க சன்னிதி சென்று பாலகன் பாதம் பணிந்திடுவோம் (2) ஏழைகள் வாழ எளிமையில் பிறந்த இயேசுவை வணங்கிடுவோம் - நாளும் அவர் வழி வாழ்ந்திடுவோம்  

எல்லாருக்கும் இன்று திருவிழா ஏழை மக்களுக்கு பெருவிழா

Image
எல்லாருக்கும் இன்று திருவிழா ஏழை மக்களுக்கு பெருவிழா பொல்லார்க்கும் நல்லார்க்கும் பொழிகின்ற மழைபோலே எல்லார்க்கும் அருள் வழங்கும் இயேசு பிறந்த திருவிழா 1. வண்டு வந்து தீண்டாத செண்பகப்பூ வாசமதை தென்பொதிகை தென்றல் எங்கும் சுமந்து செல்லுது (2) அன்னைமரி வான்மதியாய் அன்புமகன் கதிரவனாய் மண்ணுலகில் யாவருக்கும் மகிழ்வைத் தந்தது பண்ணிசைத்து நடனம் செய்து பாட்டுப் பாடுங்கள் கண்மணியாம் குழந்தை இயேசு பாதம் நாடுங்கள் விண்ணகத் தந்தையின் அன்பு மழையிது மண்ணக மாந்தரின் நெஞ்சில் மலருது 2. காரிருளை நீக்குகின்ற காலை எழும் கதிரவன் போல் பாவஇருள் போக்க வந்த உலக ஞாயிறு (2)அவர் சொல்லும் மொழி தேனமுது செல்லும் வழி விண்ணரசு அவ்வழிதான் யாவருக்கும் மீட்பு என்பது - பண்ணிசைத்து ...

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா

Image
எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க எனக்கென்ன கவலை என் இறைவா - இனி அச்சமென்ப தெனக்கில்லை வழியெங்கும் தடையில்லை தலைவா (2) உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 1. பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன் வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய் உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே - 3 பிறக்கவா 2. வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன் நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய் உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ உந்தன் உறவானது உயிர்த் துணையானது உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே மரியின் திருமகனே

Image
உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகிடுதே மரியின் திருமகனே ஒளி பிறந்தது வழி திறந்தது அருள் சுரந்தது இருள் பறந்தது (2) 1. உலகம் முழுவதும் உனது வடிவம் எதிலும் உன் வதனம் இறையே வா நெஞ்சில் உறைந்திடவே கறைகள் மறைந்திடவே இதயக் குடிலில் உதயம் தரவே குடிலில் உதித்தவனே 2. வறுமை எளிமை உனது வசந்தம் கருணை உன் மகுடம் மலரே வா கையில் தவழ்ந்திடவா புனிதம் மணம் தரவே இருண்ட உலகம் ஒளியைப் பெறவே இரவில் உதித்தவனே

உலகின் ஒளியே உண்மையின் விளக்கே உயிரினில் கலந்திட வா

Image
உலகின் ஒளியே உண்மையின் விளக்கே உயிரினில் கலந்திட வா மண்ணகம் வாழும் மனிதரின் வாழ்வை மாண்புறச் செய்திட வா (2) இயேசு பாலனே இதயம் வாருமே மனிதம் நாளும் புனிதம் காணும் மகிழ்வை அளித்திட வா 1. இருள் வாழ்வை அகற்றிட வருவீர் புது அருள் வாழ்வை அளித்திட எழுவீர் (2) பல கோடி உள்ளங்கள் மகிழ நீர் பகலவனாய் உதித்திடுவீர் (2) எந்தன் உள்ளம் உன்னைப் பாடும் என்றும் உந்தன் உறவைத் தேடும் என் உயிரே வருவீர் - உலகின் 2. புகழ் தேடி அலைகின்ற போது என்னில் புதுவாழ்வை அளித்திட வருவீர் (2) கரைசேரா ஓடங்கள் ஆனோம் நீர் கரை சேர்க்கும் துடுப்பாவீர் (2) உந்தன் வரவால் உள்ளம் மகிழும் எந்தன் உயிரும் உம்மில் இணையும் விண்மலரே வருவீர் - உலகின்

உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களேஒன்றுகூடியே வாருங்களே

Image
உயிர் நண்பர்களே அன்பின் சொந்தங்களே ஒன்றுகூடியே வாருங்களே உண்மை விடுதலையை நாம் சுவாசிக்கவே நம் இறைமகன் பிறந்துள்ளார் வாருங்கள் பாடுங்கள் விண்ணில் உள்ள தேவனுக்கே மகிமை மண்ணில் நல்ல மாந்தருக்கே அமைதி (2) 1. சின்ன பாலகனின் கொஞ்சும் சிரிப்பதையும் இதயம் மகிழ்ந்திடுதே துன்ப துயரங்களும் தொல்லை கவலைகளும் மறைந்து மாய்ந்திடுதே - வருவீர் நண்பரே -2 உண்மை விடுதலை அடைந்திடவே-2 விண்ணில் உள்ள ... ... 2. கண்ணில் கருணையும் மண்ணில் அமைதியும் இதயம் அவர் தரவே விண்ணின் தேவனவர் நம்மில் நிறைந்துவிட்டால் புலரும் புதுவிடியல் - வருவீர் நண்பரே - 2 உண்மை விடுதலை அடைந்திடவே-2 விண்ணில் உள்ள ... ...  

இன்று பிறந்த நாள் வாழ்த்துகள்இன்று மலர்ந்த நாள் மண்ணிலே

Image
இன்று பிறந்த நாள் வாழ்த்துகள் இன்று மலர்ந்த நாள் மண்ணிலே அன்பின் குழந்தை இயேசுவே உந்தன் மழலை மொழி கேட்கவே எந்தன் மனமும் தினம் ஏங்குதே இன்று பிறந்த நாள் வாழ்த்துகள் 1. ஒரு விண்தெய்வம் நம்மோடு மண்மீதிலே மழலையாய் மலர்ந்ததே அந்த விண்வார்த்தை நம் வாழ்வில் இந்நாளிலே விடியலாய்ப் புலர்ந்ததே இனி வேற்றுமை மறையட்டும் எங்கும் வேதனை தீரட்டும் வையம் மகிழும் வான்படை போற்றும் வான தேவன் வரவில் - நல்ல இதயம் நிறையும் உதயம் மலரும் தேவமைந்தன் உறவில் - இன்று 2. ஒரு விண்தெய்வம் இந்நாளில் நம் இல்லத்தில் புதையலாய்த் தவழ்ந்ததே அந்த விடிவெள்ளி நம் வாழ்வில் ஒளியேற்றவே புதுமையாய் ஒளிர்ந்ததே இனி ஒற்றுமை பெருகட்டும் போர் கலகங்கள் ஓயட்டும் வையம் மகிழும் வான்படை போற்றும் வான தேவன் வரவில் - நல்ல இதயம் நிறையும் உதயம் மலரும் தேவமைந்தன் உறவில் - இன்று

இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார்சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே

Image
இயேசு பிறந்துவிட்டார் மெசியாவும் வந்துவிட்டார் சேர்ந்து பாடுங்க தன்னானன்னானே தூதர் சொல்லிவிட்டார் அமைதியும் தந்துவிட்டார் சேர்ந்து ஆடுங்க தன்னானன்னானே (2) 1. மார்கழி மாசத்திலே கொட்டிடும் பனியினிலே ஏழையின் குடிசையிலே பிறந்தவனே (2) தேவதூதன் சொன்ன செய்தியிது பாவம் போக்க வந்த தெய்வமிது எல்லோரும் இங்கே ஒன்றாகக்கூடி பாலனின் பிறப்பில் அக்களிப்போம் 2. காட்டினிலே திருவிழா வீட்டில் இங்கு பெருவிழா இறைமகன் தொழுவத்திலே பிறந்ததால் (2) விண்மீன் காட்டி தந்த வழியுமிது மண்ணின் இருளைப் போக்கும் ஒளியுமிது ஆடுவோம் நாமும் ஆடிப்பாடி நாடுவோம் அவரின் அருளைத் தேடி

இயேசு பிறந்தார் என் உள்ளமெனும் கோயிலில் அவர் பிறந்தார்

Image
இயேசு பிறந்தார் - 2 என் உள்ளமெனும் கோயிலில் அவர் பிறந்தார் (2) ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம் -2 அன்பின் மன்னவா எம்மில் வாழவா அன்பின் பீடமாய் எம்மை ஆளவா (2) 1. மேன்மையானவர் அவர் பிறந்துள்ளார் மாட்டுக்கொட்டிலில் பிறந்துள்ளார் (2) பாவம் போக்குவார் அன்பு காட்டுவார் என்றும் நம்முடனே சொந்தம் கொள்ளுவார் 2. எளிமையாகவே அவர் பிறந்துள்ளார் வாழ்வின் ஊற்றாய் பிறந்துள்ளார் (2) பாவம் போக்குவார் ...

இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருதுகாலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

Image
இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார் இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2) இறைவாக்கினர்கள் சொன்னபடி பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம் போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார் மாடுகள் அடையும் தொழுவத்திலே -2 மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே Happy Christmas – 2 Happy Happy Christmas புவியில் நன்மனம் கொண்டவர்கள் நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே அமைதியின் வேந்தன் அவனியிலே -2 அழகிய குழந்தையாய் உதித்தாரே

இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார்இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம்

Image
இந்த மண்ணில் வந்து மன்னன் இயேசு பிறந்தார் இங்கு நாமும் கூடி பாட்டுப்பாடி மகிழ்வோம் (2) இறைவாக்கினர்கள் சொன்னபடி பிறந்த நம் இயேசுவைப் போற்றிடுவோம் போற்றிடுவோம் நாம் போற்றிடுவோம் மார்கழி இரவின் குளிரினிலே மாமரி மகனாய் வந்துதித்தார் மாடுகள் அடையும் தொழுவத்திலே -2 மனிதருள் மாணிக்கம் பிறந்தாரே Happy Christmas – 2 Happy Happy Christmas புவியில் நன்மனம் கொண்டவர்கள் நெஞ்சினில் நிம்மதி கண்டிடவே அமைதியின் வேந்தன் அவனியிலே -2 அழகிய குழந்தையாய் உதித்தாரே

இடையர்கள் தந்த காணிக்கை போலஇருப்பதை நானும் எடுத்து வந்தேன்

Image
இடையர்கள் தந்த காணிக்கை போல இருப்பதை நானும் எடுத்து வந்தேன் கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம் கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2) இயேசு பாலனே ஏற்றிடுமே நேச ராஜனே ஏற்றிடுமே (2) 1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க அடிமையின் தன்மையை எடுத்தவனே உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு... 2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து நிம்மதி தந்திட வந்தவனே வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...

ஆலய மணிகளே ஒலித்திடுங்கள்ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள்

Image
ஆலய மணிகளே ஒலித்திடுங்கள் ஆண்டவர் பிறப்பை அறிவியுங்கள் ஆலய கதவுகள் திறந்திடுங்கள் மீட்பர் வந்திட வழிவிடுங்கள் 1. உலக மக்களே வந்திடுங்கள் உண்மை இறைவனை வணங்கிடுங்கள் மலர்கள் பலவும் கொணர்ந்திடுங்கள் மன்னன் பாதமே தூவிடுங்கள் 2. இன்னிசை கருவிகள் மீட்டிடுங்கள் இறைவனின் பிறப்பை முழங்கிடுங்கள் பண்ணிசைப் பாடி மகிழ்ந்திடுங்கள் பாலன் இயேசுவை வாழ்த்திடுங்கள் (எங்கள்)