அலையென ஆலயம் நுழைந்திடுவோம் ஆண்டவர் அருள்மொழி கேட்டிடுவோம்
அலையென ஆலயம் நுழைந்திடுவோம் ஆண்டவர் அருள்மொழி கேட்டிடுவோம் எழுவோம் இறைகுலமாய் இங்கு உறவில் இணைய இறையடி செல்வோம் அவர் அன்பினைச் சுவைப்போம் உயிர்தரும் வார்த்தையின் ஒளியினிலே உன்னத இயேசுவின் வழி நடப்போம் பிரிவினை துறந்து நாம் ஒன்றிணைவோம் குடும்பமாய் இறைவனில் மகிழ்ந்திடுவோம் தன்னையே பலிதந்த இயேசுவுக்கு நம்மையே இணைத்து அளித்திடுவோம் மனிதனை மனிதனாய் மதித்திடுவோம் புதுவாழ்வு புது உலகம் கண்டிடுவோம்.