Posts

Showing posts with the label காணிக்கை பாடல்

தருவேன் காணிக்கை என்னை முழுமையாகவே , tharuven kaanikaiennai muzhumaiyaagave

Image
தருவேன் காணிக்கை  என்னை முழுமையாகவே - மனம்  இங்கு மலராய் மலர்ந்து உன்னில் உயிராய் கலந்து  தருவேன் உன்னன்பில் இணைந்து  குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குமே  இறைவா வருவாய்  என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தேன்  உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுப்பேன்  இரசத்துடன் நீர்த்துளிபோல் எனை சேர்த்து உம் இரத்தமாக்கும்  அப்பத்தில் எழுவாய்  மாற்றிடும் நல் திருவுணவாய்  என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன் 

நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே, naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame

Image
நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே  நாங்கள் தருகின்ற காணிக்கை  நிலையற்ற உலகம் நிலையென நினைத்து நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம்  கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில்  காணிக்கையாக்கவே - இன்று  உம்மை நாடினோம்  வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி  பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம்  அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை  காணிக்கையாக்கவே - இன்று  உம்மை நாடினோம் 

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல், anbe kadavul endraal anbukku eedaedhu sol

Image
அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்  அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்  மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா  விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா  இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா  மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா  அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா  மலை பெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா  உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா  என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா  நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்  நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா 

அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் - Anbum Natpum Yenkullatho Angey Iraivan Irukintar

Image
அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கின்றார் 1. கிறிஸ்துவின் அன்பு நமையெல்லாம் ஒன்றாய் கூட்டிச் சேர்த்ததுவே அவரில் அக்களித்திடுவோம் யாம் அவரில் மகிழ்ச்சி கொள்வோமே ஜீவிய தேவனுக் கஞ்சிடுவோம் அவருக்கன்பு செய்திடுவோம் நேரிய உள்ளத் துடனே யாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம் 2. எனவே ஒன்றாய் நாமெல்லாம் வந்து கூடும் போதினிலே மனதில் வேற்றுமை கொள்ளாமல் விழிப்பாய் இருந்து கொள்வோமே தீய சச்சரவுகள் ஒழிந்திடுக பிணக்குகள் எல்லாம் போய் ஒழிக நமது மத்தியில் நம் இறைவன் கிறிஸ்து நாதர் இருந்திடுக 3. முக்தி அடைந்தோர் கூட்டத்தில் நாமும் ஒன்றாய்ச் சேர்ந்து மனம் மகிழ்ந்து கிறிஸ்து இறைவா நின் மகிமை வதனம் காண்போமே முடிவில்லாமல் என்றென்றும் நித்திய காலம் அனைத்திற்கும் அளவில்லாத மாண்புடைய பேரானந்தம் இதுவேயாம்

காணிக்கை தரும் நேரம் | Kanikkai Tharum Neram

Image
காணிக்கை தரும் நேரம்- நான் என் ம‌ன‌ம் த‌ருகின்றேன்-2 ஏற்ற‌ருளும் தெய்வ‌மே எளிய‌வ‌ன் த‌ருகின்ற‌ காணிக்கையை-2 ப‌டைப்புக்க‌ள் ப‌ல‌வாகினும் ப‌ர‌ம‌ன் உம‌க்கே சொந்த‌ம் -2-அதில் ம‌ல‌ராகும் என் ம‌ன‌ம் உன்னிட‌த்திலே-2 ம‌ண‌ம் காண‌ ஏற்றிடுமே-2 பிற‌ர‌ன்பு ப‌ணிக‌ளெல்லாம் த‌லைவ‌ன் உம‌த‌ன்றோ-2- என்றும் உம‌த‌ன்புப் ப‌லியினில் என் வாழ்வினை-2 ப‌லியாக‌ ஏற்றிடுமே-2

பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்||Ponnum Porulum illai Yennidathil Ontrum illai

Image
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் (2) சொந்தம் பந்தமுமெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன் எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே என்னையாளும் மன்னவனன்றோ 1. நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ என் நிம்மதி இழந்து நின்றேன் வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான் அளவில்லா பாவம் செய்தேன் தனது இன்னுயிரைப் பலியெனத் தந்தவரே உனக்கு நான் எதையளிப்பேன்? - இன்று உனக்கு நான் எனையளித்தேன் 2. வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும் ஒழிந்திட உழைத்திடுவேன் அமைதியும் நீதியும் அன்பும் அறமும் நிலைத்திட பணி செய்வேன் உன்னத தேவனே உமதருட்கருவியாய் உலகினில் வாழ்ந்திடுவேன் - என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்

காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே|| Kannikai Thanthom Kartharvey

Image
காணிக்கை தந்தோம் கர்த்தாவே ஏற்றுக்கொள் எம்மை இப்போதே கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே காணிக்கை யார் தந்தார் நீர்தானே நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது காலங்கள் மாறும் கோலங்கள் மாறும் ஆகாயம் மாறும் இறைவனின் மகனே ஆனாலும் உம் அன்பு மாறாது ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே கண்ணீரைப்போல காணிக்கை இல்லை கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே காணிக்கை தான் செலுத்த வந்தோம் கருணை கிடைக்கட்டும் தேவன் தந்த ஜீவன் எல்லாம் புனிதம் அடையட்டும் என்னண்டை வாரும் பாவங்கள் தீரும் ஏனென்று கேளும் இறைவனின் மகனே எம்மையே காணிக்கை தந்தோமே

பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக் கொள்ளும்|| Balipeedam vaithen yennai Paavi

Image
பலிபீடத்தில் வைத்தேன் என்னை பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் - 2 நிலையில்லா இந்த பூவுலகில் நித்தம் உன் பாதையிலே - 2 நின் சித்தம் போல் உம் கரத்தால் - 2 நித்தம் வழிநடத்தும் - 2 வாலிப நாட்களில் வாஞ்சையுடன் வந்தேன் உன் திருப்பாதம் - 2 வாருமய்யா வந்து என்னை - 2 வல்லமையால் நிரப்பும் - 2 பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் பரிசுத்தமாய் ஜீவிக்க - 2 பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2 பரிசுத்தமாக்கி விடும் - 2 

எது வேண்டும் உனக்கு இறைவா எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா

Image
எது வேண்டும் உனக்கு இறைவா எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா எது வேண்டும் எது வேண்டும் 1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன் உனக்கது மணமில்லையோ கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன் உனக்கது சுவையில்லையோ எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா எளிய என் இதயம் தந்தேன் அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா 2. பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன் உனக்கது ஈடில்லையே உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன் உனக்கது இணையில்லையே எதை நான் தருவேன் தலைவா நீ விரும்புவதென்னவோ இறைவா சின்ன என் இதயம் தந்தேன் அது சிறப்பாய் இருக்குமோ இறைவா