✠மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள், Seven Founders of the Servite Order
*✠ மரியாளின் ஊழியர்கள் சபையின் ஏழு நிறுவனர்கள் ✠* *(Seven Founders of the Servite Order)* வகை: அர்ப்பண வாழ்க்கை நிறுவனம் (Mendicant Order (Institute of Consecrated Life) மரியான் பக்தி சமுதாயம் (Marian Devotional Society) உருவாக்கம்: ஆகஸ்ட் 15, 1233 உலகின் வசதி வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு நகரிலுள்ள ஏழு முக்கிய பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து, தங்கள் வீடுகளையும், உத்தியோகங்களையும் விட்டுவிட்டு, நேரடியாக கடவுளுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கைக்காக தனிமையில் வாழப் போகிறார்கள் என்று நினைக்க இயலுகிறதா? ஆனால், கி.பி. 13ம் நூற்றாண்டின் மத்தியில், இத்தாலி நாட்டின் மேற்கு-மத்திய பிராந்தியமான “டுஸ்கனியின்” (Tuscany) வளர்ந்த, வளமான, பணக்கார தலைநகரான “ஃபுளோரன்ஸ்” (Florence) நகரில் இதுதான் நடந்தது. அரசியல் சச்சரவுகளாலும், "கத்தாரியின்" (Catharism) மதங்களுக்கு எதிரான கொள்கைகளாலும் சின்னாபின்னமாகியிருந்த அக்காலத்தில் அறநெறிகள் குறைவாகவும், சமயங்களும் ஆன்மீக உணர்வுகளும் அர்த்தமற்றதாகவும் தோன்றியது. கி.பி. 1240ம் ஆண்டு, ஃபுளோரன்ஸ் நகரின் பிரபுக்கள் குடும்பங்களைச் சேர்ந்த ...