Posts

Showing posts with the label துதி பாடல்

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்நன்றியால் உம்மை நான் துதிப்பேன் Entha Kaalathilum Entha Nerathilum

Image
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே சொந்தமும் நீரே – எந்த 2. தாய் தந்தை நீரே தாதையும் நீரே தாபரம் நீரே என் தாரகம் நீரே – எந்த 3. வாழ்விலும் நீரே தாழ்விலும் நீரே வாதையில் நீரே பாதையில் நீரே – எந்த 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே என் ஆபத்தில் நீரே – எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் – எந்த 6. ஞான வைத்தியராம் ஒவ்ஷதம் நீரே ஆத்ம நேசராம் என் நண்பரும் நீரே – எந்த 7. ஞானமும் நீரே கானமும் நீரே தானமும் நீரே என் நாதனும் நீரே – எந்த 8. ஆறுதல் நீரே ஆதாரம் நீரே ஆசையும் நீரே என் ஆனந்தம் நீரே – எந்த 9. மீட்பரும் நீரே மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே என் மகிமையும் நீரே – எந்த 10. தேவனும் நீரே என் ஜீவனும் நீரே ராஜராஜனாம் என் சர்வமும் நீரே – எந்த