Posts

Showing posts with the label குருத்தோலை ஞாயிறு பாடல்

ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம், Aairam Varudangalai Yem Andavarey Ummai Yethirpaathom

Image
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர் ஓசான்னா தாவீதின் புதல்வா ஓசான்னா ஓசான்னா ஓசான்னா 1. மாமரி வயிற்றினில் பிறந்தவரே மாமுனி சூசை கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தினில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா 2. தாவீது அரசரின் புத்திரரே ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம் தேவனே தேவனே வருவீரே - ஓசான்னா 3. அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா அருள் தபோதனரால் புகழப்பட்டீர்  ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம் ஆதிப் பிதாவிடம் பதவி பெற்றீர் 4. கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர் கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதைக் கந்த ரசமாக்கிப் பெயரடைந்தீர் 5. புவனியிற் புரிந்தீர் புண்ணியங்கள் - எம் புத்தியிற் புகுத்தினீர் அருள்மொழிகள் பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா பவனியோடு வாரீர் படைத்தவரே 6. மரித்தவர் பலருமே உயிர்பெற்றார் - ஒரு மனமுடை விதவை மகன் அடைந்தார் மரிமதலேன் சோதரன் பெற்றார் - எம் மனுக்குலம் இரட்சிக்க வந்த...

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே, Oosanna Paduvom Yesuvin

Image
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே , உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்ன பாலர் பாடினார் அன்று போல இன்றும் நாமும் ஒன்றாய் துதி பாடுவோம் சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார் இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார் பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும் பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார் . பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார், ஜாலர் வீ ணை யோடு பாடித் தாளைமுத்தி செய்குவோம். குருத்தோலை ஞாயிற்றில் நம் குரு பாதம் பணிவோம் கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

தாவீதின் மகனுக்கு ஓசான்னா, Thaaveethu Maganuku Oosana

Image
தாவீதின் மகனுக்கு ஓசான்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே இஸ்ராயேலின் பேரரசே உன்னதங்களிலே ஓசான்னா - 2