Posts

Showing posts with the label சவேரியார் பாடல்கள்

புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரேஎங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே

Image
புனித சவேரியாரே வாழ்க உம் திருப்பெயரே எங்கள் நாடு நலம்பெறவே உம் திருவுடல் விட்டுச்சென்றீரே (2) ஏ...ஏ... புனித சவேரியாரே ... லாலா வாழ்வோம் உமைப்போலே 1. பல்கலையில் சிறந்தீர் பாரீசையும் துறந்தீர் பாரத நாட்டுக்கு வந்தீர் ஒருகையில் சிலுவை மறுகையில் மணியை ஏந்திச் சொன்னீர் இயேசுவை (2) - ஏ...ஏ... புனித... 2. உலகினில் பிறந்து நாடுகள் ஐந்து பாடுது உலகம் புகழ்ந்து உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து தொடர்வோம் இயேசுவில் இணைந்து (2) - ஏ...ஏ... புனித.

உலகமெலாம் எனக்காதாயம் எனவாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை

Image
உலகமெலாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை (2) அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா இந்தக் கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்? அவரே புனித சவேரியார் 1. பொன்னும் பொருளும் தேடுகிறோம் பட்டம் பதவியும் நாடுகிறோம் (2) எதுவும் நிறைவு தருவதில்லை எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் - 2 2. அறிவும் திறனும் அமைவதில்லை உறவும் நட்பும் தொடர்வதில்லை (2) தேடும் எதுவும் கிடைப்பதில்லை கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை முடிவில்லாதது ஒன்றேதான் அழிவில்லாத ஆன்மாதான் - 2  

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்கபாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே

Image
பாமாலை பாடிடுவோம் சவேரியாரே உங்க பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2) கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே உமக்கு கோயில்கட்டிக் கும்பிடுவோம் சவேரியாரே (2) 1. இயேசுசாமி வாத்தைகளை பேசி வந்த போதகரே இறையரசின் தூதுவரே சவேரியாரே 2 இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே 2 இறைவன் தந்த அருங்கொடையே சவேரியாரே -2 வாழியவே வாழியவே சவேரியாரே எங்க விசுவாச நாயகனே சவேரியாரே (2) 2. தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே நற்செய்தி போதித்த சவேரியாரே 2 நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் - 2 ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே -2 வாழியவே வாழியவே சவேரியாரே எங்க விசுவாச நாயகனே சவேரியாரே (2)

இறைமணம் பரப்பிய மறைத்தூதரேமறைநெறி காத்திட்ட சவேரியாரே

Image
இறைமணம் பரப்பிய மறைத்தூதரே மறைநெறி காத்திட்ட சவேரியாரே 1. வாழ்வெல்லாம் இறைவனைப் புகழ்ந்தவர் நீர் வழியெல்லாம் அவர் கரம் பிடித்தவர் நீர் (2) சோதனை வாழ்வினில் வென்றவர் நீர் சாதனை எங்கும் படைத்தவர் நீர் எங்கள் நல்போதகரே வந்தோம் உம் பாதம் தன்னில் 2. அன்பாய் உன் புகழ்தனைப் பாடிடுவோம் முத்துக்குளித்துறையின் முனிவரே நீர் தத்துவம் பல கற்ற கலைஞனும் நீர் (2) ஆன்ம தாகத்தால் அலைந்தவர் நீர் அணையாத ஜோதியாய் நிலைத்தவர் நீர் - எங்கள் .