Posts

Showing posts with the label நன்றி பாடல்

மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன்- Meethipukaga Nantri Kooriduven Andavarin Thirupeiyarai

Image
மீட்புக்காக நன்றி கூறிடுவேன் ஆண்டவரின் திருப்பெயரைக் கூப்பிடுவேன் 1. ஆண்டவர் எனக்கு நன்மைகள் செய்தார் நான் என்ன கைம்மாறு செய்வேனோ நான் போற்றிடுவேன் ஆ பாடிடுவேன் ஆ புகழ்ந்திடுவேன் 2. என்மீது அவரது அருளன்பு நிலைத்தது புகழ்ச்சி பலியினைச் செலுத்திடுவேன் 3. அவரே என் வலிமையும் திடமுமாய் இருக்கிறார் அவரே எனக்கு மீட்பானார்

இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் நன்றி சொல்வேனே|| Innall Vari Nadi vanthieer nantri

Image
இந்நாள் வரையில் நடத்தி வந்தீர் நன்றி சொல்வேனே (2) 1. கூப்பிடும் போது ஓடி வந்தீர் குறைவெல்லாம் நீக்கினீரே (2) தோளில் நீர் சுமந்து கொண்டீர் வழுவாமல் காத்து கொண்டீர் 2. கருவில் என்னை சுமந்து கொண்டீர் கண்மணிபோல் காத்து கொண்டீர் (2) போகும்போது கூட வந்தீர் போதித்து நடத்தினீரே 3. பெலவீனத்தில் நடுங்கினேனே கை கோர்த்து தேற்றினீரே (2) பெலன் தந்து தாங்கினீரே பெலவானாய் மாற்றினீரே 4. ஆசைகளை விளம்பினேனே ஆச்சரியத்தால் நிரப்பினீரே (2) அநுகூலமும் துணையுமானீர் அன்பான நேசர் ஆனீர்

என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு

Image
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன் வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன் நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் நன்றி நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் 1. பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன் பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன் பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன் பாதை தனைக் காட்டினார் நன்றி சொல்வேன் உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் 2. எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன் ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன் அழைப்பவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன் உள்ளம் தேடும் அமைதியை உணரச் செய்த இயேசுவை ஊரெங்கும் பாடியே நன்றி சொல்வேன்

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே

Image
நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே - 2 கோடி நன்றி பாட்டுப் பாடுவேன் காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் - 2 உயிர்கள் யாவும் வாழ நல்உலகைப் படைத்ததால் உறவு வாழ்வு வளர நல்உள்ளம் உறைந்ததால் நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால் நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்தால் பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால் பரமன் அன்பில் வாழ அருள்வரங்கள் பொழிந்ததால் - 2 பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னை சேர்த்ததால் ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால் நேசக்கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்  துன்ப துயரைப் பனியைப் போல விலக வைப்பதால்  உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால் உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் - 2