Posts

Showing posts with the label மாதா பாடல்

அழகோவியமே எங்கள் அன்னை மரியே | Azlagoviyamey yenkal annai mariaye Lyrics

Image
அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே 1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம் உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே 2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே கண்ணின் மணியைப் போல என்னைக் காத்திடும் தெய்வத் தாயே மண்ணின் மைந்தர்கள் நாங்கள் உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம் இன்னும் ஒருமுறை என் தாயே இனி இந்த உலகினில் பிறந்தால் ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்

என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு, Enna Azhagu Un Arul Azhagu

Image
என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)* ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே… (2) ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு…)* அம்மா 2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சினில் விளைந்திடுமே கணிந்திடுமே (2) வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு…)* அம்மா

அம்மா உந்தன் அன்பினிலே அருள்வாய் எமக்கு அடைக்கலமே, Amma Unthan Annbiniley Arulvaii yenaku Adaikalamey

Image
அம்மா உந்தன் அன்பினிலே  அருள்வாய் எமக்கு அடைக்கலமே  இறைவன் படைத்த எழிலே  ஏசுவை தந்த முகிலே  தூய்மை பொழியும் நிலவே  துணையே வாழ்வில் நீயே -- (அம்மா உந்தன்)  புவியோர் எங்கள் புகழே  புனிதம் பொங்கும் அருளே  உன்மகன் புதிய உறவே  எம்மையும் பதிய செய்வாய் -- (அம்மா உந்தன்)

ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி எரியுதம்மா உன்ன சுத்தி பாட வந்தேன் உம்மை பற்றி பிறந்ததம்மா நல்ல புத்தி- Amma Vantitom Vantitom Nerungi Vanthitom

Image
ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி எரியுதம்மா உன்ன சுத்தி பாட வந்தேன் உம்மை பற்றி பிறந்ததம்மா நல்ல புத்தி மெழுகு ஒளியில் பார்த்தேனம்மா உம் முகத்த ஏழை சிறுவனுக்கு கொடுத்திடும்மா நல்ல வரத்த - (2) அந்தோணியார் கோவிலில் தொடங்கிட்டோம் - பயணத்த முழுசா செலுத்திட்டோம் அம்மா மேல - கவனத்த எங்கள் ஆச நிறைவேத்த தொடங்கிட்டோம் - பயணத்த   அழக பாத்தோமே அடயாரின் சீருபத்த அங்க கூடு ம் ஜெனங்க ஜெபத்த சொல்லுது  அந்த சந்தோஷத்தில அலையும் துள்ளுது அந்த நீல கடலில் நீந்தி செல்லும் மீனும் கூட உயர்த்தி சொல்லுது  மரியே நீ வாழ்கவென்றது அந்த மீனும் கொடி மரத்த ஜெபித்து நின்றது                     ‌‌‌                                       -ஏத்தி  அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,                 ...

மங்கள நிலவே மாமரி அன்னையே, Mangala nilavae Maamari Annaiyae

Image
மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே தாயே வாழ்க வாழ்கவே இறை வழி நின்று விரைந்தெம்மைக் காக்கும் சுகம் தரும் சுந்தரியே தாயே சுகம் தரும் சுந்தரியே மங்கள நிலவே மாமரி அன்னையே வாழ்க வாழ்கவே -(2) வேளாண் நகர் போற்றும் காவியமே வேளையில் துணை நிற்கும் காவலியே வரங்கள் பொழியும் வான் மழையே வரும் முன் காத்திட வருபவளே இறை உளம் விளங்கிட உனைத் தந்தாய் மகனையேத் தந்திட எமை மீட்டாய் வழிகளைத் காட்டியே முன் சென்றாய் அவர் வழி நடப்பதே முறை என்றாய்

அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா அருளைப் பொழிவதும் நீதானம்மா |Amma Amma Anbin Vadivamey

Image
அம்மா அம்மா அன்பின் வடிவம் நீதானம்மா அருளைப் பொழிவதும் நீதானம்மா ஆறுதல் அளிப்பதும் நீதானம்மா 1. மணிமுடி அணிந்த மாதவளே இந்த மாநிலம் காத்திடும் தூயவளே (2) உண்மையை ஊட்டிடும் பேரழகே எந்தன் உள்ளத்தில் நிறைந்திடும் நறுமலரே 2. துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா (2) அன்பினில் என்றுமே அரவணைத்தென்னை அருளினில் வளர்த்திட வேண்டுமம்மா

மரியன்னை மன்றாட்டு மாலை

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும் விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா எங்கள் மேல் இரக்கமாயிரும் உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா தூய ஆவியாகிய இறைவா தூய்மை நிறை மூவொரு இறைவா புனித மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் இறைவனின் புனித அன்னையே கன்னியருள் சிறந்த கன்னியே கிறிஸ்துவின் அன்னையே இறையருளின் அன்னையே தூய்மைமிகு அன்னையே கன்னிமை குன்றா அன்னையே அன்புக்குரிய அன்னையே வியப்புக்குரிய அன்னையே நல்ல ஆலோசனை அன்னையே மீட்பரின் அன்னையே திருச்சபையின் அன்னையே அறிவுமிகு அன்னையே போற்றுதற்குரிய அன்னையே வல்லமையுள்ள அன்னையே தயையுள்ள அன்னையே நம்பிக்கைக்குரிய அன்னையே நீதியின் கண்ணாடியே ஞானத்திற்கு உறைவிடமே எங்கள் மகிழ்ச்சியின் ஊற்றே ஞானப் பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே பக்தி நிறை பாத்திரமே மறைபொருளின் நறுமலரே தாவீது அரசரின் கோபுரமே தந்த மயமான கோபுரமே பொன் மயமான ஆலயமே உடன்படிக்கையின் பேழையே விண்ணகத்தின் வாயிலே விடியற்காலையின் விண்மீனே நோயுற்றோரின் ஆரோக்கியமே பாவிகளுக்கு அடை...

விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு Vinnyeluthu Sellum itha Jebapaatu

Image
விண்ணெழுந்து செல்லும் இந்த ஜெபப்பாட்டு அன்னைமரி உள்ளம் தட்டும் மன்றாட்டு ஜெபமாலை சொல்லுவோம் அருள்மாலை சூடுவோம் 1. விண்ணகத்தந்தையின் அன்புப் பரிசாம் அன்னை மரியாள் மண்ணவர் தாயின் பெரும் பரிசாம் அருள்மணியாம் சொல்லொண்ணாத் துயரம் நீங்கவே சொந்தங்கள் யாவும் சூழவே 2. நெஞ்சினில் கனக்கும் பாவச்சுமைகள் இறக்கிவைப்பாள் மின்னியே மிரட்டும் பகையதனை விரட்டி நிற்பாள் அன்னையால் எதுவும் ஆகுமே அற்புதங்கள் கோடி நிகழுமே  

ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே | Jenmapaavam illamalaye Urpuvitha

Image
ஜென்மப்பாவம் இல்லாமலே உற்பவித்த இராக்கினியே நாங்கள் எல்லாம் உன் பதத்தை நாடிவந்தோம் நாயகியே மரியே மரியே ஆதரிப்பாய் தோத்திரமே 1. பேய் மயக்கும் பாவவழி நின்று எம்மைக் காத்திடுவாய் தூய வெண்லீ லிமலர்போல் தோன்றினாயே பூமிதனில் 2. மணிமுடி தாங்கி நிற்கும் மகிமையின் அரசியே வானவரும் மானிடரும் வாழ்த்தி உம்மைப் போற்றுகின்றோம்

சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் | மாதா சுப்பிரபாதம் | Sawmi Kirubai Yairum

Image
சுவாமி கிருபையாயிரும் கிறிஸ்துவே கிருபையாயிரும் சுவாமி தயவாயிரும் கிறிஸ்துவே பிரார்த்தனை கேட்டருளும் கிறிஸ்துவே நன்றாகக் கேட்டருளும் பரத்தைப் படைத்த பிதா சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் உலகத்தை மீட்ட சுதன் சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் பரிசுத்த ஆவி சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் தமத்திரித்துவ ஏக சர்வேசுரா எங்களை தயைபண்ணி இரட்சியும் அர்ச்சயசிஷ்ட மரியாயே சர்வேசுரன் அர்ச்சய மாதாவே கன்னியரில் நல்ல கன்னிகையே கிறிஸ்துவினுடைய மாதாவே தேவப் பிரசாதத்தின் மாதாவே மகாப் பரிசுத்த மாதாவே அத்தியந்த விரத்தி மாதாவே பழுதற்ற கன்னி மாதாவே கன்னி சுத்தங் கெடாத மாதாவே அன்புக்குப் பாத்திர மாதாவே ஆச்சரியமான மாதாவே நல்லாலோசனை மாதாவே சிருஷ்டிகருடைய மாதாவே இரட்சகருடைய மாதாவே மகாப் புத்தியுள்ள கன்னிகையே வணக்கத்துக்குரிய கன்னிகையே ஸ்துதிக்க யோக்கியமான கன்னிகையே சக்தியுடைத்தான கன்னிகையே தயை மிகவுள்ள கன்னிகையே விசுவாசியான கன்னிகையே தருமத்தினுடைய கண்ணாடியே ஞானத்திற்கு இருப்பிடமே எங்கள் சந்தோஷத்தின் காரணமே ஞானம் நிறைந்த பாத்திரமே மகிமைக்குரிய பாத்திரமே அத்தியந்த பக்தியுள்ள பாத்திரமே தேவ ரகச...

அருணனை மடியாய் அம்புலி அடியாய் | Arunanai madiyaai Ambulii Adiyaai

Image
அருணனை மடியாய் அம்புலி அடியாய் ஆறிரு மீனினம் முடியாய் அணிந்த சிங்காரி அலகை சங்காரி அந்திரம் வான்புவி தாங்கும் 1. அனைத்துயர் ஜீவன் அருகுண தேவன் அம்புவி வந்தவி னோதன் அன்னை நீயாகும் அமலம்நீ யாகும் அடியவர் தாயும்நீ யாகும் 2. இருளினில் கிடந்த எமது முன்னோர்கள் இகபரி நின்சுதன் மார்க்கம் இசைந்ததும் உன்னால் இருப்பதும் உன்னால் இறப்பதும் உன் செயல் அன்றோ 3. இதைவிட வேறு இயம்பிடக் கூறு இம்மையும் மறுமையும் நீயே இணையற்ற அன்னை இடருற்ற என்னை இன்னமும் பாராமுகம் ஏனோ 4. கருணையும் எங்கே கவனமும் எங்கே கருதும் நின் மைந்தர் நானன்றோ கடிப்பகை மகிழும் காசினி இகழும் கௌரவம் யாவுமே பிறழும் 5. கதிவழி மறந்தே கண்ணியம் இழந்தே கானக விலங்கு போல் அலைந்தே கண்டதும் கேட்டதும் செய்ததும் பாவம் கடந்ததை மறந்தருளம்மா 6. திருவருள் புரியும் பொன்விழாச் சமயம் தீயவன் என் முகம் பாரும் திருந்துவேன் உண்மை சிறிதொரு புதுமை செய்யவும் குறைந்து போகாதே 7. திரைகடலோடி திரவியம் தேடி சிறப்புயர் செழியர் பொன்னாடு திருமந்திர நகரே திகழும் பொற்சுடரே திவ்ய தஸ்நேவிஸ் மாதாவே

கோவிலும் நீயே குருக்களும் நீயே | kovilum neeyae Gurukalum Neeyae

Image
கோவிலும் நீயே குருக்களும் நீயே கோபுர தெரிசனம் நீயே கோகுலம் தாவீது கோமளம் நீயே கோதையர் தெய்வமும் நீயே 1. கோடையும் கொண்டல் வாடையும் தென்றல் குணமதன் சக்தியும் நீயே கோதில்லாச் சித்தர் இறைவியும் நீயே குருபரன் அன்னையும் நீயே 2. காவியம் நீயே கண்மணி நீயே கடிப்பகை பயங்கரி நீயே கன்னியர் ஒழுக்கம் நடையுடை அடக்கம் கற்பலங் காரியும் நீயே 3. கரையிலும் நீயே கடலிலும் நீயே கவினுயர் தண்டலும் நீயே கலையிலும் நீயே நிலையிலும் நீயே கற்பக விருட்சமும் நீயே 4. பூவிலும் நீயே நாவிலும் நீயே புதுமைகள் அனைத்தும் நீயே பூர்வசு கந்த ஆனந்த ஞான புனிதம னோஹரம் நீயே 5. பூரணம் நீயே ஆரணம் நீயே பூசையில் வசனமும் நீயே பூதலம் ஆதி சாபவி மோசன புண்ணிய தீர்த்தமும் நீயே 6. பாவிலும் நீயே பாலிலும் நீயே படைப்புகள் முழுவதும் நீயே பரமமே இன்பப் பாதையும் நீயே பரிதிமீன் மதிசுடர் நீயே 7. பழகுமெய் யன்பர் பந்தியில் நீயே பாவிகள் தஞ்சமும் நீயே பார்புகழ் மந்தர நகரம் எழுந்த பனிமயத் தாய்மரி யாயே

ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள் | Jeeviyam Silla Nall Selvangal

Image
ஜீவியம் சில நாள் செல்வங்கள் சில நாள் சிந்தனை கற்பனை சிலநாள் சிறப்புகள் சில நாள் செம்தொழில் சில நாள் ஜீவிய முடிவுநாள் ஒருநாள் 1. சிதறும்இவ் வாழ்வில் அடியவன் உந்தன் திருமகன் ஈரைந்து விதியில் சிறிதள வேனும் தவறிவி டாமல் திடம்எனக் கருளும் மாதாவே 2. ஆவிநாள் வரையும் அடியனென் கெதியாய் அன்றுகல் வாரியில் உனது அற்புதப் புதல்வன் அன்புடன் அளித்த அனந்தச காயமா தாவே 3. ஆண்டுநா னூறு அடியவர் அருகில் அடைக்கல மாகவே அமர்ந்து அலகையை உதைத்து அடியரை அணைத்து ஆதரித் தாண்டருள் சுகமே 4. நாவிலும் நினைவு நெஞ்சிலும் உனது நலந்திகழ் புனிதபொன் நாமம் நாள்தவ றாத வாசக மாக நன்றுமி ளிர்ந்திட வேண்டும் 5. நல்லது கெட்டது இன்னதென் றுணரும் நடுநிலை அரசியல் வேண்டும் நஞ்செனும் பஞ்சம் பசிப்பிணி அகன்று நாடுசி றந்திட வேண்டும் 6. தேவியுன் கருணைத் திருவிழி திறந்துன் சேயர்கள் முகமலர் பாரும் தேஜஸ்இ ழந்து வறுமையில் மெலிந்து சீரழிந்த லைவதைப் பாரும் 7. தேவுல கரசி ஏழைகள் இவர்பால் சித்தம் நீ இரங்கிட வேண்டும் தேனுயர் மந்த்ர நகரில் எழுந்த திவ்யதஸ் நேவிஸ் மாதாவே

அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே | Arulnirai mariyayey Andavar ummudaney

Image
அருள்நிறை மரியாயே ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர் பெற்றவள் நீரே உம் திருவயிற்றின் கனியவர் இயேசுவும் ஆசீர் பெற்றவரே வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க 1. புனித மரியாயே இறைவனின் தாயே பாவி எமக்காக இப்பொழுதும் எப்பொழுதும் எங்கள் மரணநேரத்திலும் வேண்டிக்கொள்ளும் ஆமென் வாழ்க தாயே வாழ்க வாழ்க மரியே வாழ்க

சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே நின் மக்கள் எங்களுக்காய் | Sadha Saghaya Madha Sathiya Devathayae

Image
சதா சகாய மாதா சத்திய தெய்வத்தாயே நின் மக்கள் எங்களுக்காய் மன்றாட வேண்டுமம்மா 1. துன்பத்தில் வாடும் மக்கள் ஆயிரம் ஆயிரமாய் கண்ணீர் கணவாய் நின்று உம்மை யாம் கெஞ்சுகிறோம் 2. இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார் இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா

அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே|| பூண்டி மாதா பாடல்||Azlaguruvey Venillave Thooya Meegamey|| Poondi matha song

Image
அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே தேனமுதே ஓவியமே தூய வதனமே அறுசுவை விருந்தே காயத்தின் மருந்தே தெள்ளிய நீரே பூண்டி அன்னையே சொல்லிய சொல்லும் போதாது என் செய்வேன் மனமே (2) பொல்லாரின் வலையிலே நாங்கள் சிக்கும்போது சொல்லாத சோகத்தில் நாங்கள் வருந்தும் போது (2) கூப்பிடாமலே காத்திடும் தாயே சொல்லிடாமலே வந்திடும் உறவே அழிவதில்லை உந்தன் பந்தமே குறைவதில்லை உந்தன் பாசமே தொலையாத இன்பமாய் என்னைப் பற்றிக்கொண்டாய் நிலையாமை இல்லையே உன்னைப் பற்றிக்கொண்டால் மாய வாழ்விலே வாழும் மாந்தரை தூய வாழ்விற்கு ஈர்க்கும் தெய்வமே அருளே அழகே எந்தன் சொந்தமே மதியே மலரே எந்தன் பந்தமே

இடைவிடா சகாய மாதா இணையில்லா தேவ மாதா || Idaividatha Saghaya matha Inai illa

Image
இடைவிடா சகாய மாதா இணையில்லா தேவ மாதா பவவினை தீர்ப்பாள் பதமுனை சேர்ப்பாள் நிதம் துணை சேர்ப்பாயே 1. ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாள்-அன்னை தீராத துயர் தன்னை தீர்த்திடுவாள் மாறாத கொடுமை நீங்காத வறுமை தானாக என்றுமே மாற்றிடுவாள் -2 2. கள்ளம் கபடின்றி கடுகளவும் பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையே வெள்ளம் போல அவள் கருணை பாய்ந்திட தேனூறும் வான் வாழ்வு கண்டிடுவாய்- 2

ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை || Aavey Geeth Paadiaye un puzgalai

Image
ஆவே கீதம் பாடியே உன் புகழைப் பாடுவேன் உன் அன்பின் பெருமை அகிலம் விளங்கும் மாண்பை போற்றுவேன் ஆவே-3 1. பாவிகளின் ஆதரவே பாருலகோர்க்கு ஒளியே அன்பின் தாய் நீயே என் குரல் கேளம்மா 2. தாய் எனவே யாம் அழைப்போம் தாய் அன்பில் வாழுவோம்  மாய உலகினிலே காத்திடுவாயம்மா

ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே ||Ayiram Malarsollaigal yenthan

Image
ஆயிரம் மலர்சோலைகள் எந்தன் அன்னை அருகினிலே அருள் பொங்கும் ஆழகினிலே- என்றும் ஆனந்தம் அலைபாயுதே உந்தன் கருணை விழிகளிலே-2 1. நாளெல்லாம் நலம் காப்பவள் எங்கள் அன்னை நீயல்லவா-2 பூவெல்லாம் நிதம் புனிதமாய் வந்து பூக்கும் உன்னடியே-2 பூங்கனம் தனை நீட்டியே பேருலகை காக்கும் அன்னை நீயே அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே 2. மலர்முகம் தனை காட்டியே மனம் மகிழ்ச் செய்பவளே- 2 மலர்ந்திடும் வண்ண மலர்களில் தினம் பூத்து சிரிப்பவளே- 2 ஆனந்தம் பரமானந்தம் உனை காணும் விழிதனில் கருணை நிறைந்திட  அன்னை அருட்கரமே அன்பை தூவும் அதிசயமே அன்னை அருட்பதமே மனம் சரணம் சரணமங்கே

நாளாம் நாளாம் புனித நாளாம்மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்

Image
நாளாம் நாளாம் புனித நாளாம் மாதாவாம் மேரியின் பிறந்த நாளாம்  (2) அன்பான தெய்வத் தாயாரின் நாளாம்  (2) அருளான கன்னித் தாயாரின் நாளாம் ஏகாந்தமானதோர் நாளாம் இனிதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம் தேவனும் தாமுமே பேசிட்ட நாளாம்  (2) தூயர்கள் தாமுமே தேடிட்ட நாளாம் ஆனந்தம் பொங்குமோர் நாளாம் அமுதான நாளாம்  (2)  -நாளாம் நாளாம் தெய்வீக அன்போ கன்னியின் வழியாய்  (2) தாவீதின் குடியில் பிறந்திட்ட நாளாம் மண்புவி காணாதோர் நாளாம் தெய்வீக நாளாம்  (2) -நாளாம் நாளாம்