Posts

Showing posts with the label திருமணப் பாடல்

ஒளியே ஒளியின் ஒளியாம் இறை ஒளியை ஏற்றுவோம், Olliaye Olliyin Olliyan Irai

Image
ஒளியே ஒளியின் ஒளியாம் இறை-ஒளியை ஏற்றுவோம் – எங்கும் ஏற்றுவோம் (2) வீடு எங்கும் – எங்கள் வீதி எங்கும் நாடு எங்கும் – இந்த உலகமெங்கும் இறையின் அருளால், அருளின் ஒளியை ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்.. ஒளியே.. ஒளியின், ஒளியாம் இறை-ஒளியை ஏற்றுவோம்… எங்கும் ஏற்றுவோம் 1. பார்வை வேண்டி, ஒளியைத் தேடும் கண்கள் கோடி இங்கே… போர்வை மூடி, உண்மை மறைத்து வாழும் மனங்கள் இங்கே… ஒளி- உண்மை நன்மையாம் ஒளி- நீதி நேர்மையாம் (2) தணலாய் எரியும் இறையின் ஒளியை ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்.. (ஒளி) 2. ஒளியில் வாழும், இறைவன் உறவை மண்ணில் வளரச் செய்வோம்… ஞானகீதம், எங்கும் முழங்க சேர்ந்து பாடிடுவோம் ஒளி- உணவும் உயிருமாம் ஒளி- வாழ்வும் வழியுமாம் (2) கதிராய் வீசும் அணையா ஒளியை ஏற்றுவோம்… ஏற்றுவோம்… ஏற்றுவோம்… (ஒளி)

மங்களம் பாடியே வாழ்த்திடுவோம் மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம், Mangalam Paadi Vazlthiduvom

Image
மங்களம் பாடியே வாழ்த்திடுவோம் மணமக்கள் மாண்புற வேண்டிடுவோம் 1. அன்பும் தியாகமும் பொறுப்புணர்வும் ஆழ்ந்த அமைதியும் குலவிடவே அன்னை மரியும் வளனும்போல மண்ணில் விண்ணைக் கண்டடைவீர் – 2 2. இயேசுவின் மரபினர் என்றிடவே இறையன்புச் சுடரை ஏற்றிடுவீர் மலைபோல் திகழும் விளக்கம்போல மண்ணில் மாந்தர் ஒளியாவீர் – 2

மணமக்கள் தரும் நல் மங்கலப் பொருளை மகிழ்வுடனே ஏற்பீர் இறைவா, Manna Makkal Tharum Nal Mangalap Poorulai

Image
மணமக்கள் தரும் நல் மங்கலப் பொருளை மகிழ்வுடனே ஏற்பீர் இறைவா மகிழ்வுடனே ஏற்பீர் 1. உந்தன் படைப்பில் உள்ளன எடுத்து தங்கள் எளிய மனங்களை இணைத்து – 2 இந்நாளை இறைவா உந்தன் பொருளாய் – 2 நம்மையே தருகின்றோம் தம்மையே தருகின்றார் 2. உடலும் உயிரும் ஒன்றாய் இணைத்தவர் உன்னத பலிக்காய் அப்பமும் இரசமும் – 2 உம் திருவடிக்கே உவப்புடன் இன்று – 2 காணிக்கை அளிக்கின்றோம் காணிக்கை அளிக்கின்றார் 3. காணிக்கை போன்று காக்கும் நற்கருணை கனிவுற இவரை சேர்த்த உம் பெருமை – 2 விண்ணக தேவன் உமக்கே இறைவா – 2 பொன் மனம் தருகின்றோம் பொன் மனம் தருகின்றார்

மணமக்கள் வாழ்க மனையறம் செழிக்க குணமுடன் இருவர் குடும்பத்தை நடத்த, Mannamakal Vazlga Mannaiyaram Chelika Goonamudan

Image
மணமக்கள் வாழ்க மனையறம் செழிக்க குணமுடன் இருவர் குடும்பத்தை நடத்த – 3 1. ஊரும் உறவும் நல்வாழ்த்துக்கள் கூற உண்மையும் தூய்மையும் உள்ளத்தில் சேர – 2 பேரும் புகழோடும் புது வாழ்வு தொடர – 2 கற்புக்கனலாக இருவரும் வாழ்க – 2 மணமக்கள் வாழ்க 2. தேவன் அருளால் முழந்தாளில் நின்று தினமும் துதி செய்த ஜெப சிந்தையோடு மலரும் உன்வாழ்வு வளர் செல்வத்தோடு மன்னன் யேசுவின் பேரருளோடு – 2 மணமக்கள் வாழ்க

வல்ல தேவன் ஆசி கூற வாரும் இந்நேரத்தில் உந்தன் சமூகம் தந்து தயவாய், Valla Devan Aasi Koora Vaarum Innerathil

Image
வல்லதேவன் ஆசி கூற வாரும் இந்நேரத்தில் உந்தன் சமூகம் தந்து தயவாய் சேரும் இம்மன்றலிலே 1. ஏதேன் விசுவாசத்தை அர்த்தத்தோடாக்கினீர் ஆதாமுக்கேவாளை ஆதரவாக்கினீர் இல்லற வாழ்விலே அன்பின் ஊற்றாய் ஓங்கிட ஆசி சொல்வீர் 2. தம்பதிகள் புது வாழ்வினுள் சேருங்கால் காரணராகக் கரங்காட்ட முன் செல்வீர் பூலோக செல்வங்கள் இவர்க்கு புத்திர பாக்கியமும் பூரணமாகவே ஈந்தவர்க்கென்றும் நீர் புகலிடம் ஆகிடுவீர்

வீணையும் நாதமும் சங்கமம் ஆனது தேவனின் அருளாலே திருமணம் நிகழ்ந்தது, Veenaium Naadhamum Sangamam Aanathu

Image
வீணையும்  நாதமும் சங்கமம் ஆனது தேவனின் அருளாலே திருமணம் நிகழ்ந்தது  1. இயேசுவின் நாமத்திலே பேரருள் கிடைத்தது இறைவன் சன்னதியில் இல்லறம் பிறந்தது  (2) பூவும் நறுமணமும் புதுக்கோலம் வரைந்தது (2) தேனும் தீங்கனியும் திவ்வியமாய் கலந்தது  2. பண்பும் பாசமும் அன்புடன் இணைந்தது பரிசுத்த ஆவியால் இருமணம் இணைந்தது (2) பூவும் நறுமணமும் புதுக்கோலம் வரைந்தது (2) இறைவன் சன்னிதியில் இல்லறம் பிறந்தது