Posts

Showing posts with the label அடிப்படை ஜெபம்

திவ்ய நற்கருணை ஆராதனை

Image
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது.

திருச்சிலுவை அடையாள செபம்

Image
அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்.

மூவொரு கடவுள் புகழ் (திரித்துவப்புகழ்)

Image
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. -ஆமென் புதிய மொழிபெயர்ப்பு: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சிமை உண்டாகுக. தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.

திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை

Image
ஆண்டவரே இரக்கமாயிரும் கிறிஸ்துவே இரக்கமாயிரும் ஆண்டவரே இரக்கமாயிரும்        கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும் விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறiவா, - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறiவா ரூனெயளர் எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. தூய ஆவியாகிய இறiவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறiவா - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி. அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே, எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். விண்ணுலகிற்குத...

குழந்தை இயேசுவுக்கு செபம்

Image
1. எங்கள் மீட்புக்காகப் பரம தந்தையிடமிருந்து இறங்கி தூய ஆவியினால் கருவாகி, கன்னியின் உதிரத்தை அருவருக்காமல் வாக்கே மனுவுருவாகிய மிகவும் இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்  பா லனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள் 2. உம் அன்னை வழியாக எலிசபெத்தம்மாளைச் சந்தித்து உம் முன்னோடியான அருளப்பரைத் தூய ஆவியினால் நிரப்பி அவருடைய தாயின் உதரத்திலே அவரை அர்ச்சித்தருளிய இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். 3. ஒன்பது மாதம் கன்னித் தாயின் உதிரத்தில் அடைபட்டு புனித கன்னி மரியாவினாலும் புனித சூசையப்பராலும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்க்கப்பட்டு உலக மீட்புக்காக தந்தையாகிய இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். 4. பெத்தலகேம் நகரில் கன்னிமரியாவிடமிருந்து பிறந்து துணிகளால் போர்த்தப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டு வானத் தூதர்களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரி...

ஒப்புரவு அருள் அடையாள செபம்:

Image
எல்லாம் வல்ல இறைவனிடமும், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவிடமும், அதிதூதரான தூய மைக்கேலிடமும், திருமுழுக்கு யோவானிடமும்,  திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலிடமும், புனிதர் அனைவரிடமும், தந்தையே உங்களிடமும், நான் பாவி என்று ஏற்றுக் கொள்கிறேன். எனெனில் என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே. ஆகையால், எப்பொழுதும் கன்னியான தூய மரியாவையும், அதிதூதரான தூய மைக்கேலையும், திருமுழுக்கு யோவானையும், திருத்தூதர்களான தூய பேதுரு, தூய பவுலையும், புனிதர் அனைவரையும், தந்தையே உங்களையும், நம் தேவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன். ஆமென்.

சுருக்கமான மனத் துயர் செபம்:

Image
என் இறைவனாகியத் தந்தையே! நன்மைகள் நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும் நீரே. என் பாவங்களால் நான் உமது அன்பைப் புறக்கணித்ததற்காகவும், நன்மைகள் செய்யத் தவறியதற்காகவும், மனம் வருந்துகிறேன். உமது அருள் உதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆமென்.

மனத் துயர் செபம்

Image
எல்லாம் வல்ல இறைவா! நீர் அளவில்லாத அனைத்து நன்மைகளும் நிறைந்தவராக இருப்பதால் எல்லாவற்றிற்கும் மேலாக நான் உம்மை முழு மனதோடு அன்பு செய்கிறேன். இப்படிப்பட்ட உமக்கு எதிராகப் பாவங்களைச் செய்ததால் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். எனக்கு இந்த மனத்துயரின்றி வேறு மனத்துயரில்லை. எனக்கு இந்தத் துக்கமின்றி வேறு துக்கமில்லை. இனி ஒருபோதும் இப்படிப்பட்ட பாவங்களைச் செய்வதில்லையென்று உறுதி செய்கிறேன். மேலும், எனக்கு வலுவில்லாததால் இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிந்தின திரு இரத்தத்தால் என் பாவங்களை எல்லாம் கழுவி, மன்னித்து, உமது இரக்கத்தையும், விண்ணக நிலைவாழ்வையும் தந்தருளுவீர் என்று முழுமனதோடு நம்புகிறேன். திரு அவை நம்பிக்கையோடு கற்றுத் தரும் உண்மைகளை எல்லாம் நீரே கற்றுத் தந்தது என நான் உறுதியாக நம்புகிறேன். ஆமென்.

நம்பிக்கை அறிக்கை (பெரியது):

Image
(ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் சொல்ல வேண்டிய செபம் ) ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். ("மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்) தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி,எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன்...

ஆசிரியரின் செபம்

Image
ஆண்டவராகிய இயேசுவே ! குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை எனக்கு அளித்திருக்கிறீர். என் சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, பாடத் தயாரிப்பிலும் பாடப் போதனையிலும் நான் பெருமுயற்சி எடுக்க எனக்கு உதவியாயிரும். அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென்.

ஊர்தி ஓட்டுநரின் செபம்

Image
அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும். இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும். எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும். நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.