Posts

Showing posts with the label அடிப்படை ஜெபங்கள்

செபமாலை மறைபொருள்கள்

மகிழ்ச்சி மறைபொருள்கள் (திங்கட்கிழமை ,சனிக்கிழமை) 1. கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது.  2. மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது.  3. இயேசுவின் பிறப்பு.  4. இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது.  5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது.  ஒளியின் மறைபொருள்கள் (வியாழக்கிழமை) 1. இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது.  2. கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது.  3. இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது.  4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது.  5. இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது .  துயர மறைபொருள்கள் (செவ்வாய்க்கிழமை , வெள்ளிக்கிழமை) 1. இயேசு இரத்த வியர்வை சிந்தியது.  2. இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது.  3. இயேசு முள்முடி தரித்தது.  4. இயேசு சிலுவை சுமந்து சென்றது.  5. இயேசு சிலுவையில் அறையப்பட்டது.  மகிமை மறைபொருள்கள் (ஞாயிற்றுக்கிழமை , புதன்கிழமை) 1. இயேசு உயிர்த்தெழுந்தது.  2. இயேசுவின் விண்ணேற்றம் 3. தூய ஆவியாரின் வருகை....

புனித சூசையப்பருக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - ST JOSEPH PRAYER

Image
மகிமை நிறைந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! இறையன்னையின் புனித கணவரே, இயேசு கிறிஸ்துவை வளர்த்த தந்தையே, உம்மை நம்பினவர்களுக்குத் தப்பாத அடைக்கலமே, நன்மரணத்துக்கு மாதிரிகையே, உம்முடைய தாசராயிருக்கிற நாங்கள் எங்களை முழுதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.  மூவொரு இறைவனுடைய சமூகத்திலே, உம் திவ்விய மைந்தனான இயேசு, உம் புனித துணைவி, அனைத்து விண்ணுலகவாசிகள் ஆகியோர் முன்னிலையில் மிகுந்த வணக்கத்துடன் உம்மை எங்களுக்குத் தந்தையாகவும், அடைக்கலமாகவும் தெரிந்து கொள்ளுகிறோம்.  உமக்கு எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம். உமது மகிமையைக் கொண்டாடி உமக்குரிய வணக்கத்தை அறிக்கையிட்டு ஒரு நாளாவது உமக்குத் துதியையும் வேண்டுதலையும் செலுத்தாமல் இருக்கப் போகிறதில்லை.  நீரும் இடைவிடாமல் எங்களை நினைத்து எங்களுடைய இடையூறுகளை விலக்கி எங்களை அறநெறியிலே வழுவாமல் நடத்தியருளும். இயேசு, இறையன்னை ஆகியோரின் திருக்கைகளில் இறக்க பேறுபெற்ற நீர், நாங்கள் திருவருளோடு இறந்து விண்ணுலகப் பேற்றை அடைந்து, உம்முடனே என்றென்றைக்கும் வாழச் செய்தருளும். - ஆமென். புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு : ...

நோயில் புனித செபஸ்தியாரிடம் வேண்டுதல் - saint sebastian prayer

Image
போர் வீரராகி உரோமை அரசினால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தரவும், மறைசாட்சி முடி பெறவும் பேறு பெற்றவரான புனித செபஸ்தியாரே, என் பேரில் இரக்கமாயிரும். பாவியின் சாவை விரும்பாமல் அவன் மனம் திரும்பி நலம்பெற விரும்பும் இறைவன், பாவிகள் மனந்திரும்பவும், நல்லவர்கள்மேலும் புனிதப்படவும், வைசூரி, பேதி, பெருவாரிக்காய்ச்சல் முதலிய நோய்களை அனுப்புகிறார் என்பதையறிவேன். இந்த நோயில் உமது உதவியை கேட்டு மன்றாடுகிறேன். உரோமாபுரியில் உம்முடைய பெயரால் பீடம் எழுப்பிய பின்னரே நச்சுக் காய்ச்சல் நீங்கினதென்று நான் அறிந்திருக்கிறேன்.         தியோக்கிளேசியன் அரசனுக்கு அஞ்சாமல் வலிய மறைச்சாட்சியான புனித செபஸ்தியாரே! இந்த இன்னல் மிக்க நோயில் என்னைக் கைவிடாதேயும். என்னைப் புனிதப்படுத்த வந்த இந்த நோயை நான் பொறுமையோடே சுமக்க விரும்புகிறேன். நானோ வெகு பலவீனன். காற்றால் அடிக்கப்பட்ட சருகு போலிருக்கிறேன். கடலில் கிடைக்கும் துரும்பு போல் தத்தளிக்கிறேன். இறைவனுடைய சினத்தைத் தாங்க நான் வல்லவனல்லவே, நான் பருகவேண்டுமென்று இறைவன் மனதாயிருக்கிற இந்த துன்பக் கிண்ணத்தை நான் வீரம் பொருந்த...

இயேசுநாதருடைய திரு இருதயத்துக்கு தன்னை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் - Personal Prayer Sacred heart jesus

Image
இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு எளியேன் (பெயர்) என்னையே கையளித்து ஒப்புக்கொடுக்கிறேன். என்னில் உள்ளதும் எனக்கு உள்ளதுமான அனைத்தும் அத்திரு இதயத்தை அன்ப செய்து புகழ்ந்து வணங்கும் படியாக, என்னை, என் உயிரை, என் செயல்களை, எனக்கு நேரிடும் இன்ப துன்பங்களையெல்லாம் அந்த திரு இ ரு தயத்துக்குப் பாதகாணிக்கையாக்குகிறேன். திவ்விய இ ரு தயத்துக்கே நான் முழுவதும் சொந்தமாய் இருப்பேன். அதற்கு வருத்தம் தரக்கூடிய அனைத்தையும் முழுமனத்தோடு வெறுத்துத் தள்ளுவேன். திரு இ ரு தயத்தின் மீது எனக்குள்ள அன்பை எண்பிக்க இயன்றதெல்லாம் செய்வேன். இதுவே என் உறுதி மாறாத தீர்மானம்.           இனிய திரு இருதயமே! நீரே என் அன்புக்கெல்லாம் முற்றும் உரியவர். நீரே என் உயிரில் ஒரே காவல், என் மீட்பில் தளராத நம்பிக்கை நீரே, நீரே என் பலவீனத்தைப் போக்கும் மருந்து, என் குற்றங் குறைகளைப் பரிகரிப்பவர் நீரே. என் உயிர்பிரியும் வேளையில் எனக்கு நிலையான அடைக்கலம் நீரே. ஓ.தயாளம் நிறைந்த இயேசுவின் திரு இ ரு தயமே! உம் பரம தந்தையின் சமூகத்தில் நீரே எனக்காக மன்றாடி, அவருடைய நீதியின் கோபாக்கினை என்மேல் விழாதபடித்...

குழந்தை இயேசுவுக்கு செபம் - Infant Jesus Prayer

Image
 எங்கள் மீட்புக்காகப் பரம தந்தையிடமிருந்து இறங்கி தூய ஆவியினால் கருவாகி, கன்னியின் உதிரத்தை அருவருக்காமல் வாக்கே மனுவுருவாகிய மிகவும் இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும் பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள் உம் அன்னை வழியாக எலிசபெத்தம்மாளைச் சந்தித்து உம் முன்னோடியான அருளப்பரைத் தூய ஆவியினால் நிரப்பி அவருடைய தாயின் உதரத்திலே அவரை அர்ச்சித்தருளிய இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். ஒன்பது மாதம் கன்னித் தாயின் உதிரத்தில் அடைபட்டு புனித கன்னி மரியாவினாலும் புனித சூசையப்பராலும் மிகுந்த ஆர்வத்தோடு வளர்க்கப்பட்டு உலக மீட்புக்காக தந்தையாகிய இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிரும். - அருள். பெத்தலகேம் நகரில் கன்னிமரியாவிடமிருந்து பிறந்து துணிகளால் போர்த்தப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டு வானத் தூதர்களால் அறிவிக்கப்பட்டு, இடையர்களால் சந்திக்கப்பட்ட இனிய பாலனான இயேசுவே, எங்கள் பேரில் இரக்கமாயிர...

புனித அந்தோனியாரை நோக்கி ஜெபம் - ST ANTONY PRAYER

Image
எங்கள் பாதுகாவலரான புனித அந்தோனியாரே, இறைவனுக்கு ஏற்ற ஊழியரே, குழந்தை இயேசுவை கையில் ஏந்தப் பேறுபெற்ற துயரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த மறைக் பணியாளரே, தப்பறைகளை உடைத்தெறிந்த மறை வல்லுநரே, இறைவனின் தனி அருளால் பசாசுகளை ஓட்டியவரே, துன்பப்படுவோரின் துயரைப் போக்குபவரே, பாவிகளாகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்!            எங்கள் ஆதரவு நீரல்லவோ? தவறி விழும் எம்மைக் கை தூக்கி, இறைவனிடம் விட்டு செல்பவர் நீரல்லவோ? எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பேரின்பமுமான இறைவனிடம் பரிந்து பேசுபவர் நீரல்லவோ? உம்மை அண்டி வந்த உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும்! அழுவோரின் கண்ணீரை துடைத்தருளும்! நோயாளிகளுக்கு உடல் நலம் பெற்று தந்தருளும்!               நீர் பாராமுகமாய் இருந்தால் நாங்கள் யாரை அண்டிச் செல்வோம்? ஆண்டவரிடம் நீர் எங்களுக்காகப் பரிந்து பேச மறுத்தால் நாங்கள் யாருடைய உதவியை நாடுவோம்? புதுமை வரம்பெற்றிருக்கும் எம் ஞானத் தந்தையே, உம் ஆதரவை நாடி வந்திருக்கும் உம் பிள்ளைகளின் மன்றாட்...

மரியாயின் கீதம்

Image
மரியாயின் கீதம் (எனப்படும்) அர்ச். தேவமாதா சுவாமியைப் புகழ்ந்து வசனித்த பத்து வாக்கியங்கள் (லூக். 1:46-55) என் ஆத்துமமானது ஆண்டவரை மகிமைப் படுத்துகின்றது. என் இரட்சணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் மனமும் ஆனந்தமாய் எழும்பி மகிழ்கின்றது. ஏனெனில் தமது அடிமையானவளுடைய தாழ்மையை கிருபாகடாட்சத்தோடு பார்த்தருளி னார்.  ஆகையால் இதோ இக்காலமுதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். ஏனெனில் வல்லபமிக்கவர் பெருமையுள் ளவைகளை என்னிடத்தில் செய்தருளினார்.  அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. அவருடைய கிருபையும் தலைமுறை தலை முறையாக அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள் மேலிருக்கின்றது. அவர் தம்முடைய கரத்தின் வல்லமையைக் காட்டியருளினார்.  தங்கள் இருதய சிந்தனையில்      கர்வமுள்ளவர்களைச் சிதறடித்தார். வல்லபமுடைத்தானவர்களை ஆசனத்திலே நின்று தள்ளி தாழ்ந்தவர்களை உயர்த்தினார். பசித்திருக்கிறவர்களை நன்மைகளினால் நிரப்பி தனவான்களை வெறுமையாய் அனுப்பி விட்டார். தமது கிருபையை நினைவுகூர்ந்து தம்முடைய தாசனாகிய இஸ்ராயேலை பரிக்கிரகம் (=ஆதரித்தார்.) பண்ணினார். அப்படியே நமது பிதாக்களாக...

சம்மனசுக்களின் இராக்கினியான தேவமாதா கற்பித்த ஜெபம்

Image
ஓ!  பிரதாபம் நிறைந்த மோட்ச இராக்கினியே!  சம்மனசுக்களின் அதி உன்னத ஆண்டவளே!  ஆதிகாலமுதல் பசாசின் தலையை நசுக்கும்படியான வல்லமையும் அலுவலும் சர்வேசுரன் உமக்குத் தந்தருளினாரே!  தேவரீர் தயவுசெய்து உமது இராணுவ சேனைகளை இப் பூமியில் அனுப்பி அவர்கள் உமது வல்லமையின் பலத்தாலும் அதிகார ஏவலாலும், பசாசுகளை எங்கும் எதிர்த்துத் தாக்கி, பின்தொடர்ந்து துரத்தி, அவர்களுடைய ஆணவ கர்வத்தை அடக்கி, நரக பாதாளத்துக்குத் திரும்பவும் அவர்களை விரட்டி ஓட்டும்படி கிருபை செய்வீராக. பரிசுத்த சம்மனசுக்களே! அதிதூதர்களே! எங்களைக் காப்பாற்றி ஆதரிப்பீர்களாக. ஆமென்.

சமுத்திரத்தின் நட்சத்திரமே

Image
சமுத்திரத்தின் நட்சத்திரமே, வாழ்க! கடவுளின் கருணையுள்ள தாயே, எப்பொழுதும் கன்னிகையே, மோட்சத்தின் இனிய வாசலே, வாழ்க! கபிரியேல் தூதன் உரைத்த மங்கள வாழ்த்துரையை ஏற்று, ஏவையின் பெயரை மாற்றிய தாயே! சமாதானத்தில் எங்களை நிலை நிறுத்துவீராக. குற்றவாளிகளின் பாவ விலங்கை அறுப்பீராக.  அந்தகர்களுக்கு ஒளியருள்வீராக.  எங்கள் எல்லாத் தீமைகளையும் நீக்கி, நலன் அனைத்திற்காகவும் மன்றாடுவீராக. தாயயன்று உம்மைக் காட்டும்.  எங்களுக்காக உமது மகவாகப் பிறந்த தேவசுதன் உம் மன்றாட்டின் மூலம் எங்கள் வேண்டுதலை ஏற்பாராக. கன்னியருட் சிறந்த கன்னிகையே, அனை வரிலும் மிக சாந்தமுள்ள அன்னையே, எங்கள் பாவங்களிலிருந்து எங்களை விடுவியும்.  சாந்தமும் கற்பும் உள்ளவர்களாக்கும். பழுதற்ற வாழ்வை எங்களுக்குத் தாரும்.  உமது குமாரன் சேசுவை நாங்கள் கண்டு என்றும் மகிழ்ந்திருக்க எங்கள் பாதையைப் பத்திரமாய்க் காத்தருள்வீராக. தேவ பிதாவுக்கும், துதி, உயர் கிறீஸ்துவுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும், திரித்துவரான ஏக கடவுளுக்கும் புகழ்ச்சியும், மகிமையும் உண்டாவதாக.   ஆமென்.

மரியாயின் ஜெபக் கிரீடம்

Image
அர்ச்சியசிஷ்ட சிலுவை மந்திரம் சொல்லவும். ஆசீர்வதிக்கப்பட்ட கன்னிகையே, உம்மை வாழ்த்தித் துதிக்க எனக்கு அருள் புரியும். உமது சத்துருக்களுக்கெதிராக எனக்கு சத்துவமளித்தருளும். பிதாவுக்கும் சுதனுக்கும் (மற்றதும்....) விசுவாசப் பிரமாணம் சொல்லவும் பரம பிதாவுக்கு மகிமையாக:  பரலோக மந்திரம் சொல்லவும். 1. சிருஷ்டிப்பும், இரட்சிப்பும், அர்ச்சிப் பும், அன்பின் நிறைவும் ஆகிய கடவுளின் நித்திய திட்டத்திற்கென மாதா  நித்தியத்திலேயே தெரிந்துகொள்ளப்பட்ட மகிமையை அன்புட னும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப் போம்...  கடவுளுக்காக மாதா அதை நிறைவேற்றும்படி மன்றாடுவோம்... மாதா அதை நிறைவேற்றுவார்கள் என நம்புவோம்... ஒரு அருள் நிறை மந்திரம். (... இவ்வடையாளமிட்ட இடங்களில் சற்று நிறுத்தி மனதால் தியானிக்கவும்.) 2. மாதா அமலோற்பவமாயிருந்து ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மகிமையை அன்புட னும், மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் நினைப் போம்... தன் பிள்ளைகளை ஜென்மப் பாவ தோ­த்திலிருந்து விடுவிக்கும்படி மாதாவிடம் மன்றாடுவோம்... நம்மை அப்படி விடுவிப் பார்கள் என நம்புவோம்... ஒரு அரு. 3. சர்வேசுரனுடைய ...

வல்லமையுள்ள கன்னிகைக்கு ஜெபம்

Image
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! இணை மீட்பரான எம் தாயே! சேசுவின் இரட்சண்ய அலுவலில் மனமுவந்து பங்கு கொண்ட மாதாவே! அவரோடு நாங்களும் இணைந்து எங்கள் அயலாரின் இரட் சண்யத்துக்காக உழைக்க எங்களுக்குக் கற்றுத் தாரும். உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். சகல வரப்பிரசாதங்களின் மத்தியஸ்தியே! உங்கள் கரங்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொள்ளும் வரப்பிரசாதங்களுக்கு நாங்கள் நன்றியறிந் தவர்களாயிருக்கச் செய்தருளும். உம்மைத் தேடிவரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். வல்லமையுள்ள கன்னிகையே! ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே! உம்மைத் தேடி வரும் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். ஆமென்.

மூன்று அருள் நிறை மந்திர பக்தி

Image
அர்ச். தேவமாதாவுக்கு சர்வேசுரன் அளித்த ஞானம், வல்லமை, இரக்கம் என்னும் மூன்று வரங்களைக் குறித்து அநுதினமும் காலையிலும் மாலையிலும், மூன்று அருள் நிறை செபம் சொல்லி, மரியாயே! என் நல்ல தாயாரே!  இன்றைக்குச் சாவான பாவத்திலிருந்து என்னைக் காத்துக் கொள்ளும் என்ற செபத்தை செபிப்பதை விட அதிக இலேசானதும், யாவராலும் எளிதாய் அனுசரிக்கக் கூடியதுமான பக்தி முயற்சி வேறு இல்லை. கடைசி வரை புண்ணியத்தில் நிலை கொள்ளவும் நல்ல மரணம் அடையவும் இப்பக்தி முயற்சி தக்க வழியயன்று தேவதாயார் தாமே அர்ச். மெட்டில்டா அம்மாளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அடைக்கல மாதா நவநாள் ஜெபம்

Image
1. அடைக்கல மாதாவே! நீர் உண்மைக் கடவுளை அறிந்து ஆராதித்து உயர்வடைந்தீரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள், உண்மைக் கடவுளான பிதா, சுதன், பரிசுத்த ஆவியை நன்கு அறிந்து அவரை மட்டும் ஆர்வத்துடன் ஆராதித்து அவருக்கு உகந்த மக்களாய் வாழ்ந்து வருவதற்கு உதவி புரியுமாறு உம்மை மன்றாடுகிறோம். 9 அருள். பிதா. 2. உலக மீட்பரை அரிய முறையில் ஈன்றெடுத்து உலகுக்கு அளித்த அடைக்கலத் தாயே, இயேசு மீட்பரால் இந்த உலகம், குறிப்பாக எங்கள் தாய் நாடும் பெற்றுள்ள 1 பெற்று வருகின்ற அளவற்ற நன்மைகளுக்காக நாங்கள் நாள்தோறும் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம். எமது சிறிய நன்றியறிதலை நீர் ஏற்று பரமன் திருவடியில் வைக்குமாறு உம்மை மன்றாடுகிறோம். 9 அருள். பிதா. 3. அமல உற்பவத்தாயே நீர் எக்காலமும் இறைவன் அருளால் நிறைந்திருந்து முக்காலமும் கன்னியாக நிலைத்திருந்து புண்ணிய நறுமணம் கமழும் தாயாக விளங்கினீரே, உமது குழந்தைகளாகிய நாங்கள் பாவத்தில் பிறந்து பாவச் சோதனைகளால் அல்லலுற்று வருகின்றோம் என்பதை தாழ்மையுடன் உணர்கிறோம். எங்கள் கணக்கற்ற பாவங்களை உமது திருமகன் இயேசுதாராள மனதுடன் மன்னிக்குமாறு எமக்காக வேண்டிக் கொள்ளும் படி...

பாவிகளின் அடைக்கல ஜெபம்.

Image
பரலோக பூலோக இராக்கினியே! பாவிகளுக்கு அடைக்கலமே! இதோ நான் நாலாபக்கமும் துன்பப்பட்டு, அண்ட ஓர் ஆதரவின்றி, மோட்ச நெறியை விட்டு பாவச் சேற்றில் அமிழ்ந்து நிற்கிறேன். சூது கொண்ட பசாசு ஒருபக்கம் என்னை தொந்தரை செய்கிறது. பெரிய பூலோகம் தன் மாயையால் என்னை அலைக்கழிக்கிறது. விஷமேறிய உடலோ என்னை எந்நேரமும் சஞ்சலப்படுத்துகிறது. நான் உமது திருமகனுக்கு என் பாவத்தால் விரோதியானதால் என் இருதயத்தில் பயங்கரமுண்டாயிற்று. இப்படிப்பட்ட வேலையில் நான் எங்கே ஆதரவடைவேன்? என் பாவக்கொடுமையின் காற்றால்  இழுக்கப்பட்ட  தூசு போலானேன். அரவின் வாய்த் தேரை போலானேன். ஆலைவாய்க் கரும்பு போலானேன். அன்னையில்லாப் பிள்ளை போலானேன். புலியின் கைபட்ட பாலகன் ஆனேன். நான் பாதாளத்தில் ஒளிந்தாலும் அங்கேயும் ஆண்டவர் என் குற்றத்தைக் காண்கிறாரே, பூமியில் எந்த மூலையில் போனாலும் என் பாவம் என்னைத் தொடர்வதால் எனக்குத் திகிலும் கிலேசமும் இன்றி வேறு என்ன உண்டு? இறைவனுடைய நீதிக்குப் பயப்படுகிறேன். நீர் இறைவனுடைய தாயும் மனுக்குலத்திற்கு அரசியுமானதால் உமது அடைக்கலத்தில் ஓடி வந்தேன். என் பாவத்துக்காக அழுது வியாகுலப்பட்ட தாயே! என் ...

அடைக்கல மாதா பிரார்த்தனை.

Image
சுவாமி கிருபையாயிரும். 2 கிறிஸ்துவே கிருபையாயிரும். 2 சுவாமி கிருபையாயிரும். 2 கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும். கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும். பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. அர்ச்சியசிஷ்ட தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா, எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி. புனித மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உருவிலான் உருவாகி உலகில் ஒரு மகனாவதற்கு உதவிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாயாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உமது திருமகனின் திருவருளை நாங்கள் அடைவதற்கு வழியாகிய அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். உலகம்,உடல் , பேய் என்னும் ஆன்ம பகைவரிடமிருந்து எம்மைக் காப்பாற்றும் அடைக்கல மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மெய் மறையை வெறுப்பவர்களின் இடையூறு...