Posts

Showing posts with the label ஈஸ்டர் பாடல்

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் வந்தார்,mannuyirkkaakath thannuyir vidukkavalla paraaparan vanthaar vanthaar

Image
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க வல்ல பராபரன் வந்தார் வந்தார் இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே ஏகபராபரன் வந்தார் வந்தார் வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் மகிமைப் பராபரன் வந்தார் வந்தார் நித்திய பிதாவின் நேய குமாரள் நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார் மெய்யான தேவன் மெய்யான மனுடன் மேசியா ஏசையா வந்தார் வந்தார் தீவினை நாசர் பாவிகள் நேசர் தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார் ஜெய அனுகூலர் திவ்விய பாலர் திரு மனுவேலனே வந்தார் வந்தார்

சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார், sarva vallavar en sonthamaanaarsaavai ventavar en jeevanaanaar

Image
சர்வ வல்லவர் என் சொந்தமானார் சாவை வென்றவர் என் ஜீவனானார் ஆ…இது அதிசயம் தானே ஓ……இது உன்மை தானே கண்டு கொண்டேன் ஒரு புதையல் பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர் இயேசுதான் என் ராஜா சந்தோஷமும் சமாதானமும் என் உள்ள்த்தில் பொங்குதம்மா பாவமெல்லாம் போக்கிவிட்டார் பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் பரலோகத்தில் எனது பெயர் எழுதிவிட்டார் என் இயேசு என் வாழ்வின் நோக்கமெல்லாம் இயேசுவுக்காய் வாழ்வது தான் ஊரெல்லாம் சொல்லிடுவேன் உலகமெங்கும் பறைசாற்றுவ்ன் ஜீவிக்கின்றார் என் இயேசு சீக்கிரமாய் வந்திடுவார் உயிரொடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம்       அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்

இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும், Inba Yesu Rajavai Nan Parthal Poothum

Image
இன்ப இயேசு ராஜாவை நான் பார்த்தால் போதும் மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் -2 நித்தியமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் இயேசுவின் இரத்தத்தாலே மீட்கப்பட்டு வசனமாம் வேலியாலே காக்கப்பட்டு  கறை திரை அற்ற பரிசுத்தரோடு ஏழை நான் பொன் வீதியில் உலாவிடுவேன் -2 தூதர்கள் வீணைகளை மீட்டும் போது நிறைவான ஜெய கோஷம் முழங்கும் போது அல்லேலூயா கீதம் பாடிக் கொண்டு அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன் முட்கிரீடம் சூட்டப்பட்ட தலையைப் பார்ப்பேன் பொற்கிரீடம் சூட்டி நானும் புகழ்ந்திடுவேன் வாரினால் அடிப்பட்ட மூதுகைப் பார்த்து ஒவ்வொரு காயங்களாய் முத்தம் செய்வேன் என்னுள்ளம் நன்றியால் நிறைந்திடுதே எந்தனின் பாக்கிய வீட்டை நினைக்கையிலே அல்லேலூயா ஆமென் அல்லேலூயா வர்ணிக்க எந்தன் நாவு போதாதையா ஆஹா! எக்காளம் என்று முழங்கிடுமோ ஏழை என் ஆவல் என்று தீர்த்திடுமோ அப்பா! என் கண்ணீர் என்று துடைக்கிறாரோ ஆவலாய் ஏங்கிடுதே எனதுள்ளமே

இந்நாளில் இயேசுநாதர்உயிர்த்தார் கம்பீரமாய், Inaalil IyaechunaatharUyirththaar Kampiiramaay

Image
இந்நாளில் இயேசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் – இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 1. போர் சேவர் சமாதி சூழ்ந்து காவிலிருக்க புகழார்ந்தெழுந்தனர் தூதன் வந்து கல்முடி பிரிக்க 2. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட 3. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேத சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன் 4. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம் எல்லோருமே களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்

ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவ தம்பரா பரா, Aamen Allaeluuyaa Aamen AllaeluuyaaMakaththuva Thamparaa Paraa

Image
ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா மகத்துவ தம்பரா பரா – ஆமென் அல்லேலூயா ஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திரா ஆம் அனாதி தந்தார் வந்தார் இறந் துயிர்த்தெழுந்தாரே உன்னதமே 1. வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும் வேதாளத்தை சங்கரித்து முறித்து பத்ராசனக் கிறிஸ்து – மரித்து பாடுபட்டு தரித்து முடித்தார் 2. வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி மீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றி பாவிகளை தேற்றி கொண்டாற்றி பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் 3. சாவின் கூர் ஒடிந்து மடிந்து தடுப்புச் சுவர் இடிந்து-விழுந்து ஜீவனை விடிந்து தேவாலயத் திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது 4. தேவக் கோபந்தீர்ந்து அலகையின் தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது ஆவலுடன் சேர்ந்து பணிந்து கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய், Aanigal Paaintha Karankkalai

Image
ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தே ஆவலாய் இயேசுன்னை அழைக்கிறாரே 1. பார் திருமேனி வாரடியேற்றவர் பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரே பாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காடய் பயமின்றி வந்திடுவாய் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம் நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமே உணர்ந்திதையுடனே உன்னதரண்டை சரண் புகுவாய் இத்தருணம் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னே மரணத்தின் சாயலில் இணைந்திடுவாயே உருவாக்கியே புதுசிருஷ்டியில் வளர கிருபையும் அளித்திடுவார் 4. இயேசுவல்லாது இரட்சிப்புத் தரவோர் இரட்சகர் வேறு இகமதிலுண்டோ அவர் வழி சத்தியம் ஜீவனுமாமே அவரேயுன் நாயகரே

அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும், Adhisaya Anbarin Nesam

Image
அதிசய அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும் துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் 1. வியாழனிரவில் வியாகுலத்தோடே விளம்பின போதகம் மறந்திடலாமோ 2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே வருந்தின சீஷர்க்காய் மருகி நின்றாரே 3. இதுவென் சரீரம் இதுவெந்தன் ரத்தம் எனை நினைத்திடும்படி அருந்துமென்றாரே 4. செடியும் கொடியும்போல் சேர்ந்து தம்மோடே முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே 5. பக்தர்கட்காகப் பரமனை நோக்கி மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக்கொண்டாரே