Posts

Showing posts with the label தியான பாடல்

அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே, Anbu Yenbathu Vallamai Aakam Allithidum Attalaley

Image
அன்பு என்பது வல்லமை ஆக்கம் அளித்திடும் ஆற்றலே அர்த்தம் ஆக்கிடும் வாழ்விலே அன்பு என்றும் வாழுமே நின்று நிலைக்கும் எதுவுமே அன்பு உருவம் கொடுத்ததே தன்னை வழங்கும் இதயமே அன்பில் நனைந்தே கனிந்ததே ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே வாழும் தெய்வம் நம்மிலே நம்மிலே நம்மிலே உயிர்கள் அனைத்தின் இயக்கமாய் இயங்கும் உலகின் ஏக்கமாய் ஏங்கும் மனங்களின் இதயமாய் அனைத்தின் நிறைவும் அன்புதான் ஆள விடுங்கள் அன்பையே அன்பையே அன்பையே வாழும் தெய்வமே நம்மிலே  நம்மிலே நம்மிலே 

அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும், Anbinal Patriyerium Ullam Vendum

Image
அன்பினால் பற்றியெரியும் உள்ளம் வேண்டும் அன்பினால் குறைகளையும் ஏற்க வேண்டும் அனுதினமும் அரவணைக்கும் எந்தன் தெய்வமே அடியெடுத்து வைக்கின்றோம் உந்தன் பாதமே எமக்காக உயிர் நீத்த இயேசு தெய்வமே உம்முகமே காணாமல் உம்குரலே கேளாமல் வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ உம்மிரக்கத்தில் யாம் வாழ வேண்டும் உம்மிதயத்தில் யாம் துயில வேண்டும் உமதன்பினால் யாம் வளர வேண்டும் வல்லமையால் வழிநடத்தும் வல்ல தேவனை வாயார வாழ்த்தாமல் உளமாரப் பாடாமல் வாழ்கின்ற வாழ்வினால் பயன் என்னவோ உம்மிரக்கத்தில் யாம் சுவாசிக்கின்றோம் உம்மிதயத்தில் யாம் வாழ்வு காண்கின்றோம் உமதன்பினால் யாம் நிறைவு பெறுகிறோம்

அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே, Annaithilum Uyar Neeri Anbey Anbey Anbey

Image
அனைத்திலும் உயர் நெறி அன்பே அன்பே அன்பே அதனை அனைவரும் ஏற்றிப் போற்றுவோம் ஏற்று வாழுவோம் மண்ணோர் மொழிகள் பேசிடினும் விண்ணோர் மொழிகள் பேசிடினும் அன்பு நமக்கு இல்லையெனில் ஒலிக்கும் வெண்கல நிலையாவோம் அறிவு அனைத்தும் இருந்தாலும் மறைநூல் யாவும் தெரிந்தாலும் அன்பு நமக்கு இல்லையெனில் நம்மில் ஒன்றும் பயனில்லை மலையைப் பெயர்க்கும் அளவுக்கு மாண்புறு விசுவாசம் இருந்தாலும் மனதில் அன்பு இல்லையெனில் மண்ணில் நமக்கு என்ன பயன் உடைமை யெல்லாம் கொடுத்தாலும் உடலைத் தியாகம் செய்தாலும் அன்பு நமக்கு இல்லையெனில் நம்மால் நமக்கு என்ன பயன்

அழகான உலகம் ஒன்றை கண்டேன் இறைவா, Azlagana Ullagam Ontrai Kannden Iraiva

Image
அழகான உலகம் ஒன்றை நான் கண்டேன் இறைவா அது அன்பும் பகிர்வும் ஒர் நிலை தலைவா அன்பே வாழ்வாகிட பகைமை அழியக் கண்டேன் உறவில் உண்மை இணைந்திடவே மனங்கள் மகிழக் கண்டேன் அதுவே உனதாட்சி என உணர்ந்தேன் வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே  அன்பும் உறவும் பெருகி மனித இனமும் வாழவே பகிர்வு வளர்ந்திடவே வறுமை ஒழியக் கண்டேன் நீதியும் நேர்மையும் தளிர்த்திடவே  மனிதம் மலரக் கண்டேன் அதுவே உனதாட்சி என உணர்ந்தேன் வருக வருக உனதாட்சி எங்கும் வருகவே பகிர்வு நீதி பரவி மனித இனமும் வாழவே

அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் | Azlagana Ulagam Asaithadum Uyirgal

Image
அழகான உலகம் அசைந்தாடும் உயிர்கள் அன்பில் விளைந்த கனிகள் அகலான இதயம் சுடரான வாழ்வு  தெய்வம் உந்தன் இல்லம் என் வாழ்வைப் பரிசளித்து வாழ்த்துச் சொன்னாய் வாழும் தெய்வம் நீயே செயற்கரிய செயல் புரியும் ஊக்கம் தந்தாய் தொடரும் இந்தப் பயணம் என் தாயாக நீ இருப்பாய் - தந்தை அன்பாலே அரவணைப்பாய் - நல் நண்பனாக வந்து துன்பத்தில் தோள் கொடுத்து இன்பப் பாடல் இசைப்பாய் பாதைக்கு விளக்காவாய் இந்தப் புவி வாழச் சிந்தும் மழையாக வந்து வளமை ஊட்டுகின்றாய் மண்ணில் உயிர் வாழ நல்ல பயிராக நின்று நிறைவை என்னில் தந்தாய் நான் சிட்டாகச் சிறகடிப்பேன் - உந்தன்  எழில் கண்டு கவி புனைவேன் - முழு மனிதனாக வந்து உறவுப் பாடம் தந்த இறைவன் ஆட்சி அமைப்பேன் சமந்தி மலரச் செய்வேன்

அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் | Arravanaikum Anbu Deivamey Yesuvey Adiyeduthu

Image
அரவணைக்கும் அன்பு தெய்வமே - இயேசுவே அடியெடுத்து நான் செல்லும் பாதைகள் எல்லாம் என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டும் சோகங்கள் பல கோடி சூழ்ந்திடும் வேளையில் - உன் சிறகினில் எனை மூடி அடைக்கலம் தர வேண்டும் உந்தன் புது உறவிலே கவலை எல்லாம் மறந்து  உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன் வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்  வல்லமைக் கரம் என்னில் இருந்திட வேண்டும் உந்தன்நல் துணையிலே பாதையினைத் தெரிந்து எந்நாளும் நிலைவாழ்வுப் பயணம் தொடர்வேன்.

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே | Amaithiyin thuthanai Yennaiyae Maatumey

Image
அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே - 2 அன்பனே இறைவனே என்னிலே வாருமே அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே 1. பகைமை உள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் - 2 வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் 2. தளர்ச்சி ஓங்கும் பொழுது மனதிடம் தழைக்கவும் - 2 இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும் 3. ஆறுதல் அன்பை அளித்து புரிதலை வளர்க்கவும் - 2 கொடுப்பதில் நிறைவைக் கண்டு மன்னித்து வாழவும் தன்னலம் ஒழித்துப் புதிய உலகம் படைக்கவும்

இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை, Iraivan Yennai Kaakintar Inneoru Kooraium Yennakillai

Image
இறைவனே என்னைக் காக்கின்றார் இனியொரு குறையும் எனக்கில்லை நிறைவழி நோக்கி நடத்திடுவார் நிம்மதியோடு நான் வாழ்வேன் (2) 1. பகலின் வெம்மையில் பயமில்லை இருளின் நிலவிலும் தீமையில்லை (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் உன் கால் இடற விடுவதில்லை உன்னதர் என்றும் அயர்வதில்லை 2 2. இன்றும் என்றும் காப்பவராம் பயணத்தில் துணையும் அவர் கரமாம் (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் தீமையைக் கண்டு நான் அஞ்சேன் நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2 3. உன்னதம் அமைதியில் மலரட்டுமே உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே (2) நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார் நன்மைகள் எங்கும் நிலவட்டுமே இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2

என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது, Yen Jeevan Paaduthu Unn Varavai Naaduthu

Image
என் ஜீவன் பாடுது உன் வரவை நாடுது அன்பே அருட்செல்வமே 1. காலம் கடந்தாலும் கோலம் அழிந்தாலும் உன் வாக்கு மாறாது இறைவா புதுமை பிறந்தது பாவம் அழிந்தது புனிதம் சேர்ந்திட வா 2. இராகம் ஓய்ந்தாலும் தாளம் மாய்ந்தாலும் என் பாடல் மாறாது இறைவா நாளும் மலர்ந்தது தீபம் எரிந்தது வாழ்வை வளமாக்க வா

தெய்வீக இராகம் தேன் சிந்தும் இராகம், Deiveega Raagam Thean Sindum Raagam

Image
தெய்வீக இராகம் தேன் சிந்தும் இராகம் தேவா உன் நினைவாக உருவான இராகம் என் பாடல்தானே உன் கோவில் நாளும் அரங்கேறும் வேளை ஆனந்தமே உயிரே வருக உறவைத் தருக உயிரே உனக்காக உருவான பாடல் உறவே உனக்காக நான் பாடும் பாடல் 1. உன் நாமம் சொல்லாத நாவில்லையே எந்நாளும் நினைக்காத நெஞ்சில்லையே உன் நாமம் தானே நெஞ்சாரப் பாட சுகமான இராகம் நான் பாடும் பாடல் 2. உன்னாட்சி உயராத இடமில்லையே உன்னாட்சி மலராத மனமில்லையே உன் அன்பைத் தானே நாள்தோறும் பாட மேலான இராகம் நான் பாடும் பாடல்

இறைவா உன் திருமுன் ஒரு குழந்தை போல், Iraiva Un Thirumun Ooru Kulanthaipola

Image
இறைவா உன் திருமுன் ஒரு குழந்தைபோல் தாவி மேவி வருகின்றேன் என் நிலை நான் சொல்கின்றேன் உன் குழந்தை நானல்லவா என்னை நோக்கி ஓடி வந்து என்னைக் காப்பாயோ (2) 1. அன்பைத் தேடும் போது என் தந்தை நீயல்லவா அமுதம் நாடும் போது என் அன்னை நீயல்லவா (2) ஒரு குறையும் இன்றிக் காத்தாய் நல் அன்பை ஊட்டி வளர்த்தாய் உன்னை ஒதுக்கியே வாழ்ந்து நானும் இனி என்ன கைமாறு செய்வேன் -2 2. மங்கும் வாழ்வை அகற்றி ஒளி தருபவர் நீதானையா மனதில் அமைதி பொங்க வழி அருள்பவன் நீதானையா (2) உன்னை என்றும் எண்ணி வாழ்ந்து ஒருநாளும் பிரியாமல் வளர்ந்து உந்தன் மடியிலே தவழ்ந்து நானும் இனி அப்பா தந்தாய் என்று அழைப்பேன் -2

மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல மன்னன் யேசு என்னில் வரும் நேரம், Mannil Kalanthidum MazlaiThuli Pola yesu

Image
மண்ணில் கலந்திடும் மழைத்துளி போல மன்னன் யேசு என்னில் வரும் நேரம் கண்ணில் இமைகள் இணைந்திருப்பது போல் அன்பின் யேசு இணைகின்ற நேரம் மனதினை திறந்து மகிழ்வுடனே நான் பாடுவேன் மனத்துயர் எல்லாம் சொல்லி சொல்லி சொல்லி நான் பாடுவேன் இறைவா இறைவா என்னில் இணைந்திடவா என் இதயம் இதயம் உன்னில் உறைந்திடவா 1. எழுதாத ஓவியம் நானன்றோ எழுந்து நீயும் தீட்டிடவா – 2 பழுதான வீணை நானன்றோ அன்பு இசை மீட்டிடவா – 2 அழுகின்ற மெழுகாக துடிக்கின்றேன் நிதம் அழியாத வாழ்வாக வருவாயே – இறைவா இறைவா 2. பாழான கிணறும் நானன்றோ பாய்ந்தோடும் ஊற்றாய் வா – 2 உதவாத பரிசும் நானன்றோ வழமை என்னில் நிதம் தருவாய் – 2 தொழுகின்ற கைகளை காண்பேனோ உன்னில் வழுவாமல் வாழ்ந்திட வருவாயே – இறைவா இறைவா

மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ, Mallalai Idhayam Nadi Varuvom Yenna

Image
மழலை இதயம் நாடி வருவோம் என விழைவீரோ இசைக் குழலின் ஒலியில் மயங்குவோரே பேச வருவீரோ மானைப்போல் தவித்து நிற்கும் இதயம் பாரீரோ தேனைப் போல அருள் சுரந்து தேற்ற வாரீரோ 1. குழந்தை போல பேச எனக்கு இதயமில்லையே மழலைச் சொல்லும் நாட்களாக மறந்து போனதே (2) இளமைப் பொலிவில் இதயம் தானும் இறுகிப் போனதோ வளமை சேர்க்கும் உனை மறந்து மயங்கிப் போனேனே 2. பாவி என்னைப் பார்த்துப் பார்த்து பரிதவிக்கின்றீர் மேவி மேவி அழைத்து அழைத்து அன்பு செய்கின்றீர் (2) தவழ்ந்து தவழ்ந்து தேடி தேவா உன்னை அடைந்துள்ளேன் மகிழ்ந்து என்னை ஏற்றுப் பாவ பொறுத்தலளிப்பீரோ

பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே, Ponn Malai neram Poothenral kartil

Image
பொன்மாலை நேரம் பூந்தென்றல் காற்றில் என் ஜீவராகம் கரைந்தோடுதே என் இயேசு உன்னில் உறவாடும் நேரம் என் துன்ப மேகம் கலைந்தோடுதே உன் வாழ்வு ஒன்றே என் தேடலாகும் உன் அன்பு ஒன்றே என் பாடலாகும் 1. நீயில்லாத நாளெல்லாம் நிலவில்லாத வானம்தான் உன் நினைவில்லாத வாழ்வெல்லாம் மழையில்லாத மேகம்தான் காலம் தோறும் கண்ணின் மணிபோல் காக்கும் தெய்வமே சுமைசுமந்து சோர்ந்த வாழ்வை தேற்றும் இறைவனே என் இயேசுவே உன் அபயம் நீ தரவேண்டுமே என் தெய்வமே அருகில் நீ வரவேண்டுமே காற்றில் ஆடும் தீபம் என்னை சிறகில் மூடுமே 2. ஒரு கணம் என் அருகினில் நீ அமரும்போது ஒருயுகம் உனை தினம் நான் புகழ்கையில் எனக்குள் தோன்றும் புதுயுகம் (2) முள்ளில் பூக்கும் ரோஜா என்னைப் அள்ளிப் பறிப்பதேன் சொல்ல முடியா அன்பில் என்னைச் சூடி மகிழ்ந்ததேன் என் இயேசுவே என் அன்புக்கு வானம் எல்லை என் தெய்வமே உன் அன்புக்கு எல்லை இல்லை அன்பின் இதழில் இன்ப இதயம் உன் அன்பைப் பாடுதே

உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம், Ummai Vazlthuvom Ummai Poortuvom

Image
உம்மை வாழ்த்துவோம் உம்மைப் போற்றுவோம் உம்மை ஏத்துவோம் இறைவா -2 (2) 1. இறைவனின் சந்நிதியில்      இறைவனின் இல்லத்தில் - 2     இறைவனின் செயல்களுக்காய்               இறைவனின் மாட்சிமைக்காய் 2   எக்காளத் தொனியுடனே - நாம்            இறைவனைப் போற்றுவோம் - 2      மத்தளத்துடனே யாம் - நம்       இறைவனை ஏத்துவோம் -2 3    யாழோடும் வீணையோடும்          ‌‌புல்லாங்குழலோடும் -2       நாம் இறைவனைப் போற்றுவோம்

உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன், Ummai Nambii Vanthen Yenthan Vazlvai Eenaika Vanthe

Image
உம்மை வாழ்த்தி வணங்க வந்தேன் எந்தன் வாழ்வை இணைக்க வந்தேன் கானல் நீரினைக் கண்டிக்க கலைமான் கனைத்திடும் நிலைபோல் தவித்து நின்றேன் கனிவாய் ஏற்றிடும் பேரருள் முதல்வா உம் ஒளியுமிழ் பதமதில் சரணடைந்தேன் உலகின் கவலைகள் உள்ளத்தின் அலைகள் உம்மிடம் வந்தால் நீங்கிடுமே  நிலையில்லா இவ்வுலகினிலே - மாயை நீங்கிட உன்னிடம் சரணடைந்தேன் 

தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி| Deivam Unnai Thedi Nenjil Raagam Koodii

Image
தெய்வம் உன்னைத் தேடி நெஞ்சில் இராகம் கோடி நீயே என் வாழ்வின் தெய்வம் நீயின்றி வேறேது சொந்தம் தங்கும் எந்தன் உள்ளம் பொங்கும் அன்பின் வெள்ளம் 1. வானில் உலவும் நிலவும் இங்கு தேய்ந்து போகலாம் தேனில் கலந்த மலரும் இங்கு காய்ந்து வீழலாம் உயிரில் கலந்த உணவும் இங்கு உடைந்து போகலாம் விழியில் விழுந்த நினைவும் இங்கு வழிகள் மாறலாம் காலம் தேயலாம் உன் கருணை மாறுமோ வாசம் போகலாம் உன் பாசம் தீருமோ இயேசுவே 2. சாய்ந்து கொள்ளத் தோள்கள் தினம் தந்த தெய்வமே சோர்ந்து போகும் கால்கள் பலம் தந்த செல்வமே முள்ளில் விழுந்து தொழுதேன் நீ உறவில் தேடினாய் அள்ளி அன்னையாய் எடுத்தாய் உன் சிறகில் மூடினாய் நதிகள் காயலாம் உன் நட்பு காயுமோ நண்பர் பிரியலாம் உன் அன்பு மாறுமோ இயேசுவே

இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே- Yesuvey Un Pathathil Amarthidavey Aaasai Nan Vazlarthen

Image
இயேசு உன் பாதத்தில் அமர்ந்திடவே ஆசை நான் வளர்த்தேன் அருள்வாயே (2) -4 1. காலமும் உனையே காண்பதற்கே காரிருள் நீக்கி அருள்வாயே (2) -4 2. இயேசு உன் பொன்மொழி கேட்டிடவே இதயத்தில் அமைதி அருள்வாயே (2) -4

இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே - Yesuvin Irudhaiyamey Yenkum Yerinthidum Arulmayamey

Image
இயேசுவின் இருதயமே எங்கும் எரிந்திடும் அருள்மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் இங்கு அனைவர்க்கும் வாழ்வு உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கு உருவம் உண்டு -2 அவர் உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு 3. இரவினில் தீபமுண்டு இந்த இல்லத்தில் ஒளியுமுண்டு - 2 எங்கள் இருதய அன்பர் விழித்திருந்தால் எந்த இரவிலும் காவலுண்டு - 2

Ennai Marava Yesu Naatha - என்னை மறவா இயேசு நாதா

Image
என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமதே 2. பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என்மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை 3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில் உன்னதா எந்தன் புகலிடமே 4. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் அக்கினியின் மதிலாக அன்பரே என்னைக் காத்திடுமே 5. என்னை முற்றும் ஒப்புவித்தேன் ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் எப்படியும் உம் வருகையிலே ஏழை என்னைச் சேர்த்திடும்.