அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVplTUDS8UCYCsKvEoxH3JzK2l-ujYgEPcE0haGST4iEkA-1VLSNHI9WS6JO1X4UQPkt6O49OteThQyqKjrvDZdRHqG7M_pASnCWc89_0axQ7oW_GdeTG6jLnAI2_8EuNbUDLKGWHYAISw/s1600/1671466162089159-0.png)
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு குன்று அசையலாம் குகைகள் பெயராலம் உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே அஞ்சாதே....