தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும் போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? (லூக்கா நற்செய்தி 18:7)
"கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை" என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்டவர் கேட்கச் சொன்னது நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளை. நமது ஆன்மீக வளர்ச்சிக்கான உதவிகளைக் கேட்டால் இயேசு கட்டாயம் கொடுப்பார், கொடுக்க வேண்டிய நேரத்தில். நாம் நமது உடல் சார்ந்த உதவிகளைக் கேட்டாலும் கொடுப்பார், அவை நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்குமானால். நம்மிடம் வேண்டாத குணம் ஒன்று இருக்கிறது, கேட்டது கேட்டவுடன் கிடைக்க வேண்டும். அதிசயப் பிறவி ஒருவன் அம்மாவிடம் கேட்டானாம், '"அம்மா, எனக்கு ஒரு மகன் வேண்டும்." ''அதற்கு நீ கல்யாணம் முடிக்க வேண்டும்.'' "முடித்தால்?" "கட்டாயம் கிடைக்கும்." "அப்போ கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள்" கல்யாணம் முடிந்தது. முதல் இரவில் மனைவியிடம் கேட்டான், ''இப்போ எனக்கு ஒரு மகன் வேண்டும்." "அதற்கு குறைந்து பத்து மாதங்கள் வேண்டும்." "அதெல்லாம் முடியாது. கல்யாணம் முடிந்தா...