Posts

Showing posts from August, 2025

மாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்நூறு துதிகள்

Image
மாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்நூறு துதிகள் 1 பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​ 8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 9 இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளு...

பைபிள் மாந்தர்கள்

Image
🍇🌿🍇🌿🍇🌿🍇🌿 *"யோவாபு"* யோவாபு தாவீது மன்னனின் சகோதரி செரூயாயின் மகன். தாவீது அவனை படைகளுக்கெல்லாம் தலைவனாக வைத்திருந்தார். மிகச்சிறந்த வீரனான இவனுடைய தலைமையின் கீழ் தாவீது தோல்வி என்பதே அறியாத மன்னனாய் இருந்தார். அரசவையில் மிகவும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இருந்தார் யோவாபு. அபிசாயி, அசாகேல் என அவனுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இருவருமே சிறந்த வீரர்கள். அவர்களில் அசாகேலை தாவீதின் படைவீரன் அப்னேர் கொலை செய்தான். அந்தப் பகையை மனதில் சுமந்து திரிந்த யோவாபு, பிறிதொரு காலத்தில் தாவீதின் அறிவுரையையும் மீறி அப்னேரைக் கொன்றான். தாவீதின் மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிராக எழுந்தபோது இளவரசர் என்றும் பாராமல் சாகடித்தான். தாவீது மன்னனின் கட்டளையை மீறி இந்த செயலைச் செய்தான். அதைக் கேள்விப்பட்டு மன்னன் கலங்கிப் புலம்பியபோது மன்னனின் முன் நேரடியாகச் சென்று அவரைக் கடிந்து கொள்ளுமளவுக்கு செல்வாக்கோடு இருந்தான் யோவாபு. தாவீது மன்னன், உரியாவின் மனைவி பத்சேபாவின் மேல் மோகம் கொண்டு மயங்கிய போது உதவிக்கு வந்தவன் யோவாபு தான். நயவஞ்சகமாய் உரியாவை போர்க்களத்தில் சாகடித்தவன் அவன். அப்ப...

*💒✝️ ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் ஜெபம்.!*🧎‍♂️

Image
*💒✝️ ஆன்ம வலிமைக்காக பரிசுத்த ஆவியிடம் ஜெபம்.!*🧎‍♂️ ✝️🌹✝️🌹✝️🌹✝️🌹✝️ 🌹✝️💒 என் ஆன்மாவைத் திருமுழுக்கினால் தூய்மையடையச் செய்த பரிசுத்த ஆவியே! என் இதயத்தை என்றும் உமக்கு ஏற்புடைய இல்லமாக்கியருளும்.🧎‍♂️  🌹✝️💒 உறுதிப் பூசுதலின் வழியாக என் இதயத்தைத் திடப்படுத்திய பரிசுத்த ஆவியே ! உலகம், உடல், அலகை ஆகிய என் ஆன்மாவின் எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.🧎‍♂️ 🌹✝️💒 உலக சிற்றின்பங்கள் என் ஆன்மாவை சிறைப்பிடிக்காமல் என்னைப் பாதுகாத்தருளும்.🧎‍♂️ 🌹✝️💒 செபம், தவம் இவற்றில் நான் அன்றாடம் நிலைத்திருந்து என் ஆன்ம எதிரிகளை வெற்றிகொள்ளும் ஆற்றலை எனக்குத் தாரும்.🧎‍♂️ 🌹✝️💒 என் ஆன்மா இழந்து போன அருளை பாவ மன்னிப்பு என்னும் திருவருட் சாதனத்தின் வழியாகத் திருப்பிக் கொணரும் பரிசுத்த ஆவியே! என் பலவீனமான ஆன்மாவிற்கு வலுவூட்டி, பாவச் சேற்றில் என் ஆன்மா புதைந்து விடாதபடி என் ஆன்மாவைப் பாதுகாத்தருளும்.🧎‍♂️ 🌹✝️💒 சோதனை வேளையில் என் ஆன்மாவின் பகைவரை வென்றிட எனக்கு ஆன்ம பலன் தாரும்.🧎‍♂️ 🌹✝️💒 பரிசுத்த கன்னி மரியாவின் பரிசுத்த உடலிலிருந்து இயேசுவின் திருவுடலை உருவாக்கிய பரிசுத்த ஆவ...

*† இரவு செபம் †*

Image
*† இரவு செபம் †* தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென். ஆண்டவர் உங்களோடு இருப்பாராக. ஜெபிப்போமாக.. அன்பும், பாசமும் நிறைந்த தெய்வமே இறைவா! உம்மை நன்றியோடு போற்றுகிறோம் அப்பா. உழன்ற எலும்புகளுக்கு உயிர் கொடுப்பவர் நீரே. மீண்டும் எமக்கு வாழ்வு கொடுக்கின்றாய். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை புகழ்கின்றோம். உமது வல்லமையும் பாதுகாப்பும், இரக்கமும், அருளும் எங்கள் வாழ்வையும், குடும்பங்களையும் ஆசீர்வதிக்க, ஆளுகை செய்ய உருவாக்க, உருமாற்ற உடனிருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன்மீது அன்பு செலுத்த.. அப்பா எங்கள் மீது நாங்கள் அன்பு கூறுவதுபோல, எங்களுக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூறவும் கற்றுக் கொடுத்தீரே.. எங்கள் வாழ்வை உருவாக்கினீரே.. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் வளர்க்க, தெய்வமாய் எங்களுக்கு துணையாய் இருந்தீரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்! இந்த நாள் முழுவதும் உம்முடைய அருள் கொடைகளால், எங்கள் வாழ்வை நிரப்பினீரே.. ஆசீர்வாதத்தின் பிரசன்னத்தில் எங்களை உருவாக்கினீரே.. உமக்கு நன்றி செலுத்துகிறோம் அப்பா! இந்த இரவுப் பொழுதை ஆசீர...