Posts

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன், Aatkonda Theyvam Thiruppaatham Amarnthu Aaruthal Ataikinten Amaithi Perukinten

Image
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே, Thaettidum TheyvamaeThidam Tharupavarae Oottuth Thannnneerae

Image
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும், Aiyaa Um Thirunaamam Akilamellaam Parava Vaendum

Image
ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணுமே செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிஷேசம் சொல்லணுமே

கடவுளிடம் நாம் செய்யும் ஜெபம் சில வேளைகளில் கேட்கப்படுவதில்லையே ஏன்?

Image
கடவுள் நம்மைவிட ஞானம் மிக்கவர். யார் யாருக்கு என்ன தேவை எப்போது தேவை என்பதை அவர் அறிவார். அவர் எப்போழுதும் நமக்கு நன்மையே செய்வார். சிலவேளைகளில் கடவுளின் திட்டம் மனித ஞானத்திற்கு எட்டுவதில்லை. ஆகவே கடவுள் நம் ஜெபத்தை கேட்காதவர் போல் நமக்குத் தெரிகிறது. சிலவேளைகளில் சுயநலத்தோடு ஜெபம் செய்கிறோம். அரசர் சாலமோன் கடவுளிடம் ஞானத்தைக் கேட்டார். பொருட்செல்வமோ அல்லது படையோ, மேலும் அதிகாரத்தையோ அல்லது மேலும் அரசுகளையோ கேட்காததால் கடவுள் அனைத்தையும் அவருக்குக் கொடுத்தார். அல்லது கடவுளின் திட்டத்திற்கு மாறுபட்டு நம் எண்ணங்கள் அமைவதால் நம் ஜெபம் கேட்கப்படுவதில்லை. சில சமயங்களில் நம் ஜெபம் நேரடியாகக் கேட்கப்படாமல் வேறுவிதமாக நிறைவேற்றப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் நம் ஜெபங்களைக் கேட்டருள்வார் என்ற ஆழ்ந்த விசுவாசமும் கடவுளின் அன்பும் பராமரிப்பும் நம் வாழ்வில் நிலைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையும் அனைத்திலும் கடவுளின் சித்தம் நிறைவேற்றப்படவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

எந்த நிலையில் ஜெபம் செய்யவேண்டும்? முழந்தாள்படியிட்டு? கைகூப்பி?

Image
விவிலியத்தில் மக்கள் ஜெபம் செய்யும் போது பல்வேறு நிலைகளில் ஜெபிக்கின்றதைக் காண்கிறோம். நின்றுகொண்டு, கைகளை உயர்தி, கவிழ்ந்து, உட்கார்ந்து, முழந்தாள்படியிட்டு ஜெபித்திருக்கிறார்கள். எந்நிலையிலும் ஜெபிக்கலாம் என்றாலும் முடிகின்ற சூழ்நிலைகளில் முழந்தாள் படியிட்டு கைகூப்பி ஜெபிப்பது கடவுளுக்கு முன் நமது தாழ்ச்சியையும் பணிவையும் எடுத்துக்காட்டும் வண்ணமாக அமைகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையாக, பயபக்தியோடு ஜெபிப்பது உகந்தது.

கடவுள் நம் தேவைகளையும் அறிந்திருப்பவர். பின்னர் நாம் ஏன் நம் தேவைகளுக்ககாக ஜெபிக்க வேண்டும்? ஏன்

Image
நாம் ஜெபம் செய்யும் போது தாழ்ச்சியான உள்ளத்தையும் கடவுள் முன் நம்முடைய இயலாமையையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறு செய்வது கொடுத்துக்கொண்டே இருக்கின்ற கடவுளின் கொடைகளை நாம் பெறுவதற்கு நம்மைத் தகுதியாக்கிக் கொள்ளும் கருவியாக ஜெபம் அமைகின்றது. ஆகவே நாம் தொடாந்து ஜெபம் செய்ய வேண்டும்.

கடவுளாகிய இயேசு ஏன் ஜெபம் செய்தார்?

Image
இயேசு கடவுளும் மனிதனுமானவர்.  இந்த உலகில் இயேசு முழு மனிதனாக அவதரித்தார். அவர் கடவுளாயிருந்தாலும் இந்த உலகின் மனிதரைப் போல் மனிதராக வாழ்ந்தார். அவர் இறை தந்தையைச் சார்ந்து வாழ்ந்தார். எல்லாவற்றிலும் இறை தந்தையின் சித்தத்தையே நிறைவேற்றுகின்றார். இறை தந்தையை முழுமையாக அன்பு செய்து அவரில் வாழ்வதே வாழ்வாகக் கொண்டிருந்தார். ஆகவே அவரோடு உரையாடுவதில் அதிக நேரத்தை கழிக்கின்றதை நாம் நற்செய்திகளில் காண்கின்றோம்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலை வழிபாடு செய்கிறார்களா?

Image
இல்லை. சிலைவழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலைக்கு சக்தி இருக்கிறது என்று நம்பி அந்த சிலையை தெய்வமாக வழிபடுவது. கத்தோலிக்க ஆலயங்களில் நிறுபப்பட்டிருக்கும் சுரூபங்கங்கள் (சொரூபம் - மாதிரி) இயேசுவை அல்லது அந்தந்த புனிதர்களை நம் நினைவில் கொண்டுவர, தியானிக்க, அடையாளமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த சுரூபங்களுக்கு சக்தி இருப்பதாகவோ அல்லது அவைகளையே கடவுளாகவோ நாம் வழிபடுதில்லை. புனிதர்களை நாம் நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். புனிதர்கள் கடவுள் அல்ல. புனிதர்களுக்கு, அன்னை கன்னிமரியாள் உட்பட அனைவருக்கும் நாம் வணக்கம் மட்டுமே செலுத்துகிறோம். புனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்தபோது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்கை வாழ்ந்து மரித்தவர்கள்(உம் - அன்னை தெரசா). புனிதர்கள் இறைவனோடு விண்ணகத்தில் இருப்பதால் புனிதர்களிடம் நாம் நமக்காக இறைவனிடம் பரிந்துபேச அழைப்பு விடுவிக்கின்றோம்.

யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? கடவுளிடமா? இயேசுவிடமா? தூய ஆவியிடமா? புனிதர்களிடமா?

Image
நாம் கடவுளிடமோ அல்லது யேசுவிடமோ அல்லது தூய ஆவியிடமோ ஜெபம் செய்யலாம்.இந்த மூவரிடமும் எழுப்பப்படும் ஜெபங்கள் விவிலியத்தில் அனேக இடங்களில் காணப்படுகின்றன. கடவுள் ஒருவர்தான். இயேசுவிடம் ஜெபம் செய்யும் போது இறைத் தந்தையிடமும் நாம் ஜெபம் செய்கிறோம். நாம் ஜெபம் செய்யும் வார்த்தைகளையும் கடந்து கடவுள் நம் உள்ளத்தையும் எண்ணங்களையும் அறியக்கூடியவர். புனிதர்கள் கடவுள் அல்ல. அவர்கள் கடவுளின் விருப்பத்தின்படி இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள். தங்களின் தூய வாழ்வால் விண்ணகத்தை சுதந்தரித்துக் கொண்டவர்கள். அவர்கள் இறைவனின் அருகில் அமர்ந்திருக்கிறார்கள், நமக்காக கடவுளிடம் பரிந்து பேசுகிறார்கள், நாம் செய்யும் வேண்டுதல்களை கடவுளிடம் மன்றாடி நமக்குப் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நமது விசுவாசம்.

எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?

Image
கடவுளின் அருகில் நாம் நெருங்கிவர ஜெபம் நமக்குத் துணைசெய்கிறது. கடவுளிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கு நன்றிசொல்லும் போதும், அவர் புகழ் பாடும் போதும், நமது பாவங்களுக்காக மனம் வருந்தும் போதும், நமது பலகீனத்தில் அவரது உதவியை நாடும் போதும், அவர் சித்தத்தை நிறைவேற்றும் போதும், கடவுள் நம்மோடு பேசுகிறார். கடவுள் நமது சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றி நாம் என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதைச் செய்யத் தூண்டுகிறார். நாம் ஜெபம் செய்வதன் மூலம் கடவுளின் சித்தத்தை நிறைவேற்ற அதிக வாய்ப்பை நமக்குக் கொடுக்கின்றார். இதன் மூலம் நாம் கடவுளில் இணைந்து வாழும் பேற்றைப் பெறுகிறோம். முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெராசாவும் மற்ற புனிதர்களும் இப் பேற்றைப் பெற்றவர்களே.