Posts

Showing posts from September, 2023

இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

Image
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார். 2. நாசேரேத்தில் வளர்ந்து வந்தார். 3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். 4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார். 5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்‌

இயேசுவின் தந்தை யார்?

Image
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே 

இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?

Image
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார் 

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் | Iratham Jeyam Iratham Jeyam Kalvaari Yesuvin Iratham Jeyam

Image
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம் நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் 5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம் பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் 6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

இயேசுவின் தாய் யார்

Image
இயேசுவின் தாய் எப்போதும் கன்னியான தூய மரியா 

இயேசு எந்த ஊரில் பிறந்தார்?

Image
இயேசு பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?

Image
இயேசு பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?

Image
இயேசு   என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.

கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?

Image
கடவுள் வாக்களித்த மீட்பர் இயேசு கிறிஸ்து 

பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?

Image
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகப் கடவுள் வாக்களித்தார்.

முதல் பெற்றோரின் பாவத்தினால் மனிதர் பெற்ற தண்டனை யாது?

Image
1. கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையை இழந்தனர். 2. கடவுள் கொடுத்த அருள் நிலையை இழந்தனர் 3. பாவ நாட்டம், துன்பம், சாவு முதலிய இன்னல்களுக்கும் நரகத் தண்டனைக்கும் உள்ளாயினர்.

மனிதர் பெரு மகிழ்வில் பங்குகொள்ளும் நிலையை எவ்வாறு இழந்தனர்?

Image
அலகையை நம்பி, கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்ததால் மனிதர் அருள் நிலையை இழந்தனர்.

அகவிருந்தாக என் இறைவா வா, Aaga Virunthaaga Yen Iraiva Va

Image
அகவிருந்தாக என் இறைவா வா - மனம் மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2) 1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2) உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை உமதுடலென நீ மாற வைத்தாய் 2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால் எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2) உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம் 3. நேரிய மனத்தவர் குறை தணிப்பாய் - எமை நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் நலமிகு உணவால் நிறைத்திடுவாய் - இனி உலகினை உனிலே வாழ வைப்பாய்  

பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதருக்கு அளித்த கொடை என்ன?

Image
மனிதரைத் தம்முடைய பிள்ளைகள் என்னும் நிலைக்கு உயர்த்தி, தம்மை அப்பா என அழைக்கும் உரிமையை அளித்தார். இதுவே கடவுள் மனிதருக்கு அளித்த கொடையாகும். இதை அருள் நிலை என்றும் அழைக்கிறோம்.

கடவுள் மனிதரை எதற்காகப் படைத்தார்?

Image
தம்மை அறிந்து, அன்பு செய்து, தமக்குப் பணி புரிந்து, தம்முடைய பெரு மகிழ்வில் பங்குகொள்ளக் கடவுள் மனிதரைப் படைத்தார்.

கடவுள் மனிதரை எவ்வாறு படைத்தார்?

Image
கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார்.

கடவுள் உலகை எதற்காகப் படைத்தார்

Image
கடவுள் தம்முடைய அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் வெளிப்படுத்த உலகைப் படைத்தார். மனிதருக்குப் பயன்படும் வகையில் அதனை அமைத்தார்.

அலகையைப் பற்றி நாம் அறிவது என்ன?

Image
கடவுளை ஏற்க மறுத்து நரகத்திற்குச் சென்றவர்களே அலகை ஆவர்.

வானதூதர் என்பவர் யார்?

Image
கடவுளை ஏற்று, அவருக்குப் பணி செய்து, அவரது பெரு மகிழ்வில் பங்குபெறுபவர்களே வானதூதர் ஆவர்.

கடவுளின் மிகச் சிறந்த படைப்புகள் எவை?

Image
உடல் இல்லாத வானதூதரும், உடலும் ஆன்மாவும் கொண்ட மனிதரும் ஆவர்.

அனைத்தையும் படைத்தவர் யார்?

Image
அனைத்தையும் படைத்தவர் யார்?         கடவுள்.

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன், Aatkonda Theyvam Thiruppaatham Amarnthu Aaruthal Ataikinten Amaithi Perukinten

Image
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் 1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே – தினம் 2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே – தினம் 3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே – என்னை விட்டு 4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே 5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே 6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே, Thaettidum TheyvamaeThidam Tharupavarae Oottuth Thannnneerae

Image
பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே கறைகள் தீர்ப்பவரே 1. தேற்றிடும் தெய்வமே திடம் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே – எங்கள் 2. பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம் 3. அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே – எங்கள் 4. விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர் – தினம் 5. அயல் மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம் 6. சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும், Aiyaa Um Thirunaamam Akilamellaam Parava Vaendum

Image
ஐயா உம் திருநாமம் அகிலமெல்லாம் பரவ வேண்டும் ஆறுதல் உம் வசனம் அனைவரும் கேட்க வேண்டும் 1. கலங்கிடும் மாந்தர் கல்வாரி அன்பை கண்டு மகிழ வேண்டும் கழுவப்பட்டு வாழ வேண்டும் 2. இருளில் வாழும் மாந்தர் பேரொளியைக் கண்டு இரட்சிப்பு அடைய வேண்டும் இயேசு என்று சொல்ல வேண்டும் 3. சாத்தானை வென்று சாபத்தினின்று விடுதலை பெற வேண்டும் வெற்றி பெற்று வாழ வேண்டும் 4. குருடரெல்லாம் பார்க்கணும் முடவரெல்லாம் நடக்கணுமே செவிடரெல்லாம் கேட்கணுமே சுவிஷேசம் சொல்லணுமே