Posts

Showing posts from May, 2024

மக்களினத்தார் யாவரும் ஆண்டவரின் மக்கள்

Image
1. ஆண்டவர் கூறுவது இதுவே: நீதியே நிலைநாட்டுங்கள்,  நேர்மையைக் கடைப்பிடிய்ங்கள்;  நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது;  நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும். 2. இவ்வாறு செய்யும் மனிதர் பேறு பெற்றவர்;  ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைப்பிடித்து;  எந்தத் தீமையும் செய்யாது தம் கையைக் காத்துக் கொண்டு, இவற்றில் உறுதியாய் இருக்கும் மானிடர் பேறுபெற்றவர். 3. ஆண்டவரோடு தம்மை இணைத்துக் கொண்ட பிற இனத்தவர், தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி என்று சொல்லாதிருக்கட்டும். எசாயா 56 1 முதல் 3 முடிய

அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான்

Image
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் ஆராதனை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்குத் தான் - 2 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இதுவரை உதவி செய்தீர் எபிநேசர் எபிநேசர் 2. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே பரலோக ராஜாவே பரிசுத்தர் பரிசுத்தர் 3. எல்ஷடாய் எல்ஷடாய் எல்லாம் வல்லவரே எல்லாம் வல்லவரே எல்ஷடாய் எல்ஷடாய் 4. எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே என்னை காண்பவரே எல்ரோயி எல்ரோயி 5. யேகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர் யேகோவா யீரே 6. அதிசய தெய்வமே ஆலோசனை கர்த்தரே ஆலோசனை கர்த்தரே அதிசய தெய்வமே 7. யேகோவா ஷம்மா எங்களோடு இருப்பவரே எங்களோடு இருப்பவரே யேகோவா ஷம்மா 8. யேகோவா ஷாலோம் சாமாதானம் தருகிறீர் சாமாதானம் தருகிறீர் யேகோவா ஷாலோம் 9. யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் எந்நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே 10. யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வம் சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன்என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன்

Image
1. அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம் அமைதலாய் காத்திருப்பேன் என் இயலாமை மௌனம் அறிவிக்க அவரைப் போலாவேன் 2. வடதிசை வாழும் என் குடும்பம் உடன் என் நினைவில் கலந்துவிடும் தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட வல்லமை தேவன் வெளிப்படுவார் 3. இலட்சியத்தோடு அர்த்தமுள்ள பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர் அனைவரின் உள்ளமும் சங்கமமாகும் ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார் 4. தனக்கென வாழ நினைவிலும் மறந்து மற்றவர் மீது நாட்டம் கொண்டால் சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம் சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்

Image
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே 3. நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே 4. நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே 5. மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா 6. விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே

அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார்.

Image
அதிகாலை இயேசு வந்து கதவண்டை தினம் நின்று தட்டித் தமக்குத் திறந்து இடம் தரக் கேட்கிறார். 2. உம்மை நாங்கள் களிப்பாக வாழ்த்தி: நேசரே, அன்பாக எங்களண்டை சேர்வீராக என்று வேண்டிக்கொள்ளுவோம். 3. தினம் எங்களை நடத்தி, சத்துருக்களைத் துரத்தி, எங்கள் மனதை எழுப்பி, நல்ல மேய்ப்பராயிரும். 4. தாழ்ச்சி நாங்கள் அடையாமல், நம்பிக்கையில் தளராமல் நிற்க எங்களுக்கோயாமல் நல்ல மேய்ச்சல் அருளும். 5. ஆமேன், கேட்டது கிடைக்கும் இயேசு இன்றும் என்றென்றைக்கும் நம்மைக் காப்பார் அவர் கைக்கும் எல்லாம் ஒப்புவிக்கிறோம்.

அதி-மங்கல காரணனே துதி-தங்கிய பூரணனே

Image
அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர் வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த வண்மையே தாரணனே! 1. மதி-மங்கின எங்களுக்கும், திதி-சிங்கினர் தங்களுக்கும் உனின் மாட்சியும் திவ்விய காட்சியும் தோன்றிடவையாய் துங்கவனே - அதி-மங்கல 2. முடி-மன்னர்கள் மேடையும், மிகு-உன்னத வீடதையும் நீங்கி மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ, வந்தனையோ தரையில்? - அதி-மங்கல 3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும், உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப் பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும் பெற்ற நற்கோலம் இதோ? - அதி-மங்கல