நற்கருணையின் வரலாறு
நற்கருணையின் வரலாறு
நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்தவ சமுதாயத்தின் செயலாக இருந்த நிலைமாறி குருக்களின் கொண்டாட்டமாக மாறியது இறையியல் வரலாற்றில் ஏற்பட்ட பெரிய திருப்பம். சமயக் கலவரக் காலங்களில் ஆயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது தியாகமும் திருச்சபையின் ஒற்றுமையுமே முன்னோங்கி நின்றன. ஆனால் கால வெள்ளத்தில் நற்கருணை குருக்களின் தனிச் சொத்தாகக் கருதப்பட்டதே ஏன்? என்ற கேள்வி இங்கு எழும்புகிறது.
2.1 குடும்பத் திருச்சபை பேராலயத் திருச்சபையாக.....
எருசலேமிலிருந்து உரோமையை நோக்கிய நற்செய்திப் பயணம் உரோமை அரசை கிறிஸ்தவ மயமாக்குதலில் முடிந்தது. நற்செய்தியை அறிவித்து மனித சமுதாயத்தை இறையரசின் விழுமியங்களுக்கு ஏற்ப உருவாக்க வேண்டிய திருச்சபை உரோமை அரசின் சலுகைகளில் மயங்கி அரசாங்க சமயமாகி தன்னுடைய இலட்சியப் பாதையிலிருந்து பல வகைகளில் திசை திரும்பியதை வரலாறு நமக்குச் சொல்லும்.
திருச்சபை வலுவான அமைப்பாகி உலகமெங்கும் நற்செய்தியை அறிவிக்க மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதுதான். அத்தனை ஆண்டுகளாக குகைகளிலும், வீடுகளிலும் தங்களை மறைத்து கொண்டிருந்த திருச்சபை கூரைமேல் இருந்து நற்செய்தி அறிவிக்க சில தளங்கள் கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய நிலைதான். அதேசமயம் அரச நிலைப்பாடுகளை ஆதரிக்க, அரச ஒற்றுமைக்கு வழிவகுக்க, அரச தோரணைகளை அங்கீகரிக்க கிறிஸ்தவம் பயன்படுத்தப்பட்டதோ என்ற ஐயம் வரலாற்றில் எழுகின்றது.
கிறிஸ்தவ சமுதாயத்தின் தலைவர்கள் நற்கருணையின் தலைவர்களாக இருந்த நிலையில் அர்த்தமுள்ள சமுதாயக் கொண்டாட்டமாக திகழ்ந்தது இந்த சமயச் சடங்கு. திருச்சபையைச் சந்திக்க வரும் போதகர்கள் கூட நற்கருணைத் தலைவர்களாக இருந்திருக்கின்றனர். கிறிஸ்தவ சமயம் அரசு சமயமாக ஆன பொழுது கிறிஸ்தவ சமுதாயத் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகளாக மாறினர். மக்கள் மத்தியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டனர். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய ஆலயங்கள் நற்கருணைக் கொண்டாட்டத்திற்குத் தேவைப்பட்டன. சடங்கு முறைகளும் அரசவை தோரணங்களோடு நடைபெறத்துவங்கின.
நற்கருணை கொண்டாட்டத்தின் தலைவர் ஆயர். அவருக்குத் துணையாக இருப்பவர்கள் குருக்கள். ஆயருக்கும் மக்களுக்கும் இணைப்பாளராக இருப்பவர்கள் திருத்தொண்டர் என்ற படிநிலை அமைப்பு முறைகள் நற்கருணைக் கொண்டாட்டத்தில் உருவாகின. இந்த அமைப்பு நிலையை உறுதிப்படுத்த பழைய ஏற்பாட்டுக் குருத்துவம் துணை செய்தது. தலைமைக்குருக்கள், ஆலயக் குருக்கள், லேவியர்கள் என்ற முறையின் மறுபதிப்பாக இந்த படிநிலை ஏற்பட்டது.
குருக்கள் என்ற நிலை உருவாகிய நேரத்தில் நற்கருணைப்பலி என்ற கருத்தியல் இயல்பாகவே வலுப்பெற்றதைக் காண முடிகிறது. அப்பமும், இரசமும் ஆண்டவன் இயேசுவின் . உடலாகவும் இரத்தமாகவும் மாறி பங்கெடுக்கும் மக்களுக்கு ஆன்மீக உயர்வைத் தருகின்றது என்பதுதான் நற்கருணையின் முழுப்பொருள். இதில் இரண்டாவது பகுதிக்கு அழுத்தம் தராமல் எப்படி அப்பமும் இரசமும் ஆண்டவரின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகிறது என்பதற்கு அதிக அழுத்தம் தரவே அந்தக் காலத்து இறையியலார் முனைந்து நின்றனர்.
2.2 ஏழு முதல் பன்னிரெண்டு நூற்றாண்டுகள் வரை:
கி.பி 7ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவை தனது ஆட்சியின் கீழ் நிலைநிறுத்திய சார்லஸ் பேரரசர் தன்னுடைய ஆட்சியின் எல்லாப் பகுதிகளையும் ஒரே மாதிரியான நற்கருணைக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பினார். ஊரோமைக்கு ஆள் அனுப்பி ஆட்சி செய்த திருத்தந்தையிடம் சரியான வழிபாடு முறையைப் பெறச் செய்தார். அந்த காலகட்டத்தில் உரோமை நகரத்தில் திருத்தந்தை நடத்திய வழிபாட்டு முறை பண்பட்ட பல அமைப்புக்களைக் கொண்டிருந்தது. செபங்கள் இலத்தீன் மொழிக்கே உரிய இலக்கிய நயங்களோடு விளங்கின. ஊரோமை முறையில் சில பண்பாட்டு மாறுதல்கள் செய்து தனது அரசின் பட்டி தொட்டிகள் எல்லாம் அதே நற்கருணைச் சடங்கை நடைமுறைப்படுத்தினார் அரசர்.
அரசரின் ஆணையில் நற்கருணைச் சடங்கு நாடு முழுவதும் சீரான முறையில் நடந்தது. மக்கள் பார்வையாளராக ஆக்கப்பட்டனர். கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக குருக்கள் திருப்பலி நிறைவேற்றுகின்ற நிலை ஏற்பட்டது. இந்தக் காலத்தில்தான் நற்கருணை பக்தி முயற்சிகள் தோன்றின. மாபெரும் அரசனாகிய இறைவன் மக்களைக் கடந்து செல்கிறார். அவருக்கு மரியாதை செய்யும் கடனே நற்கருணை என்ற புதிய ஆன்மீகங்கள் மக்களுக்குப் போதிக்கப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில்தான் இறையியலாரின் சிந்தனைகள் நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் எத்தகையது என்ற கேள்விக்கு திசை திரும்பியது. ஆதித்திருச்சபையில் இருந்த நற்கருணையின் சவால்களான பகிர்வு, சமத்துவம், மனித மாண்பு போன்ற விழுமியங்கள் காலத்தால் மறக்கப்பட்டன, ஏன் மழுங்கடிக்கவும் பட்டன. ஆதித்திருச்சபையின் ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டத்திலும் சமுதாயத்தில் சக்தியற்ற பாமர மக்கள் இயேசுவின் உடலாக இனம் காணப்பட்டனர். அந்த நிலை அடியோடு மறைந்துவிட்டது. இந்த காலக்கட்டத்தில் சமுதாயத்தில் வசதி படைத்தவர்களும் அதிகாரம் உள்ளவர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நலிந்த மக்கள் பயத்தோடு அஞ்சிநடுங்கிக் கொண்டு ஆண்டவன்முன் வந்து சென்றனர். நற்கருணைக்கு வரமுடியாத நோயாளிகள் ஆரம்ப காலங்களில் சிறப்பாக நினைவு கூரப்பட்டனர். அப்பம் பிட்குதல் என்ற சடங்கே நோயாளிகளுக்கு எடுத்துச் செல்ல என்ற கருத்தின் அடிப்படையில்தான் வந்தது. பங்கெடுத்த மக்கள் தங்கள் வீட்டில் உள்ள நோயாளிகளுக்கு நற்கருணை எடுத்துச் சென்றனர். அந்தப் பழக்கமும் காலப்போக்கில் குறைந்தது. கூடிவந்து நற்கருணையில் பங்கெடுக்கும் சமுதாயம் கிறிஸ்துவின் உடலாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிறிஸ்துவின் உடல் இரத்தம் என்ற நம்பிக்கைகள் ஆரம்ப காலத்தில் வலுப்பெற்றன. ஆனால் இந்தக் காலத்திலோ நற்கருணையில் எப்படி இயேசு வருகிறார் என்ற கேள்வி வந்து மக்கள் வாழ்வோடு உள்ள தொடர்பை குறைத்துவிட்டது.
நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் வெறும் அடையாளப் பிரசன்னமே என்று ஒருசிலர் போதித்து வந்தனர். அதனால் உண்மை பிரசன்னம் என்பதை எண்பிப்பதிலேயே இறையியலாரின் சிந்தனைகள் செலவிடப்பட்டன. அந்த பிரசன்னம் ஏற்படுத்தும் விளைவுகள் எத்தகையவை? என்ன மாற்றத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்கிறது என்ற கேள்விகள் எழும்பவில்லை.
அருமையான அமைப்புமுறை; வரையறுக்கப்பட்ட சடங்குகள்; அதை நிறைவேற்ற புனிதமான குருக்கள்; அதில் பக்தி பரவசத்தோடு பங்கு கொள்ளும் பொதுநிலையினர் இவைதான் நற்கருணையின் எழிலார்ந்த அமைப்பு என ஆனது. இயேசுவின் பலி நடைபெறுகிறது; இயேசு அப்பத்திலும் இரசத்திலும் வந்து அமர்கிறார்; நம்பிக்கையோடு நோக்கினால் நாம் வாழ்வு பெறுவோம் என்ற ஆன்மீகத்தை அச்சாரமாகக் கொண்டு இந்தக் காலத்து நற்கருணைக் கொண்டாட்டங்கள் செயல்பட்டன.
2.3 பாஸ்காஸ் X ராட்சாம் :
ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நற்கருணை இறையியலைத் தொகுக்கும் பணியில் சில துறவிகள் நியமிக்கப்பட்டனர். அதில் முக்கியமானவர் பாஸ்காஸ் கிபி.831 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஆண்டவரின் உடலும் இரத்தமும்' என்ற நூலில் அப்பமும் இரசமும் உண்மையிலேயே 'வரலாற்றில் கன்னி மரியிடம் பிறந்த இயேசுக்கிறிஸ்துவின் உடலாக மாறுகின்றன' என்ற உண்மையை தெரிவித்தார். இந்த உண்மை ஆன்மீக அனுபூதி நிலையிலிருந்து அணுகப்படவேண்டிய உண்மை என்று அவரே அறிக்கையிட்டார்.
ஆனால் நடைமுறையில் பக்தி வயப்பட்ட சாதாரண கிறிஸ்தவர்களுக்கு இது விபரீத விளைவுகளை உண்டாக்கியது. அப்பத்தில் இயேசுவின் சதை தெரிகிறது என்றும் இரசத்தில் இயேசுவின் இரத்தம் கொட்டுகிறது என்றும் பலவிதமான கற்பனைக் காட்சிகள், பக்திமுயற்சிகள் ஆகியவற்றில் இறங்கினர். நற்கருணையில் இயேசு மறுபடியும் மனித உருவெடுக்கிறார் என்ற மனநிலைக்கு மனிதர்களைக் கொண்டு செல்ல உதவியது இந்தச் சித்தாந்தம். -
ராட்சாம்' என்ற மற்றொரு துறவி இந்த உண்மைப்பிரசன்னத்தை' ஏற்றுக் கொள்ளவில்லை. அடையாளப் பிரசன்னம் என்ற கருத்தியலை * வலுவாக்கினார். கிறிஸ்து திருச்சபையில் எவ்வாறு பிரசன்னமாய் இருக்கிறாரோ அவ்வாறே நற்கருணையில் பிரசன்னமாய் இருக்கிறார் என்றார். அகுஸ்தினார், அம்புரோசியார் ஆகியோரின் பிம்பம், உரு, ஒத்திருத்தல், அடையாளம் ஆகிய கருத்துக்களை எடுத்து தன்னுடைய நிலைப்பாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டார்.
அதிகாரத்தை நிலைநாட்டும் முனைப்பில் அதிக அக்கறை காட்டிய அன்றைய திருச்சபை இந்தத் துறவியின் எண்ணங்களை அலசிப் பார்க்க மறந்தது. இரண்டு விளக்கங்களிலும் பாஸ்காஸ் தந்த விளக்கமே சரியானது என்று கூறி அப்ப இரசத்தில் ஆண்டவர் இயேசு உண்மையாகவே பிரசன்னமாய் இருக்கிறார் என்று அறிவித்தது.
ஒன்பது, பத்து நூற்றாண்டுகளில் இந்தக் கருத்து வளர்ந்து நடைமுறையில் இருந்த நற்கருணை பக்திமுயற்சிகள் அத்தனையையும் * நியாயப்படுத்தியது. பதினோராம் நூற்றாண்டில் அப்ப இரச மாற்றம் என்ற பிரச்சனையை மறுபடியும் எழுப்பியவர் பெரென்கெர் (1000-88) இவர் அப்பமும் இரசமம் ஆண்டவரின் உடலாக மாறுகிறது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய தத்துவ விளக்கங்களோடு ராட்சாம் சொன்ன அடையாளப்பிரசன்னத்தை உறுதிப்படுத்த விரும்பினார். அப்ப இரசத்தின் இயேசுவின் பிரசன்னம் உடனிருக்கிறது என்ற கருத்தைத் தான் வெளிப்படுத்தினார் பெரென்கெர். திருச்சபையின் தலைமை இவரை மிகவும் கரிசனையோடு நடத்தியதேயொழிய இவர் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1059ஆம் ஆண்டு இரண்டாம் நிக்கோலாஸ் என்ற திருத்தந்தை கீழ்க்கண்ட உறுதிமொழி எடுக்க அவரைப் பணித்தார்.
பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அப்பமும் இரசமும் அர்ச்சிப்பிற்குப்பின் அருள் அடையாளங்களாக மட்டுமல்ல, உண்மையிலேயே ஆண்டவர் இயேசுக்கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன. காணுகின்ற விதமாக குருவின் கைகளால் கையாளப்பட்டு, பிட்கப்பட்டு, நம்புவோரின் பற்களால் நசுக்கப்பட்டு உண்ணப்படுகின்றது”. இதுபோன்ற உறுதிமொழியை 1079யில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியிடமும் செய்ய நிர்ப்பந்தம் செய்யப்பட்டார் பெரென்கர். எனவே பாஸ்காஸ் தந்த விளக்கங்கள் திருச்சபையின் ஆணித்தரமான போதனைகள் ஆகின.
2.4 மத்திய கால நற்கருணை:
இந்திய நாட்டில் பக்தி மார்க்கம் ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் வென்று மக்கள் மனத்தில் இடம் பெற்றது போல 12 முதல் 16 நூற்றாண்டுகளில் நற்கருணை பக்தி மார்க்கங்கள் ஏராளமாக உருவாகத் துவங்கின. இறையியலாரின் சிந்தைனைகளும் வாக்குவாதங்களும் மக்களுக்கு பெரிய பொருட்டாகத் தெரியவில்லை. நற்கருணையில் இயேசு இருக்கிறார். அவருக்கு நம்மையே சரணாகதியாக்க வேண்டும் என்ற மார்க்கங்கள் தான் மக்கள் மத்தியில் தழைத்தன. இயேசு என்ற இறை மனிதரைக் கண்டு கொள்ளும் சிறந்த இடமாக நற்கருணை விளங்கியது. பிரான்சிஸ் அசீசி போன்ற பெரிய சமயப் போதகர்கள் நற்கருணை பக்தியை மக்கள் மத்தியில் நிலை பெறச் செய்தனர்.
நற்கருணை பேழை வந்த கதையே அலாதியானது. ஆதித்திருச்சபையில் நற்கருணையை நோயாளிகளுக்கு எடுத்துச்செல்லும் பழக்கம் இருந்தது. பங்கேற்கும் திருச்சபை உறுப்பினர்கள் தங்கள் வீடுகளில் உள்ள நோயாளிகளுக்கு நற்கருணை எடுத்துச் சென்றனர். நற்கருணை ஆன்ம உணவாக கருதப்பட்ட நேரத்தில் ஞாயிறுக் கொண்டாட்டத்திற்கு வரும் பக்தர்கள் அந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் உண்பதற்காக நற்கருணையை எடுத்துச் சென்று வீடுகளில் பத்திரப்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு தவறான மரியாதையற்ற உபயோகங்கள் காரணமாக ஆலயத்தியேயே நற்கருணை பத்திரப்படுத்தப்பட்டது. நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு வரமுடியாதவர்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் அது பயன்படுத்தப்பட்டது. நீற்கருணை பக்திமுயற்சிகள் வந்த இந்தக் காலக்கட்டத்தில் நற்கருணை ஆராதனைக்கு வழியாக நற்கருணை பேழைகள் அமைந்தன. எந்தவொரு ஆலயத்திற்குச் சென்றாலும் அங்கே நற்கருணைப் பேழை மையம் பெற்றது.
இயேசு காத்திருக்கிறார் அவரை சென்று சந்திக்க வேண்டும் நம் பாவங்களுக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார், சென்று சந்தித்து பரிகாரம் செய்யவேண்டும் என்ற கருத்தியல் பரவியது.
*நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் என்பது வரலாற்றுப் பிரசன்னம், ஆன்மீக பிரசன்னம், முழு மனித பிரசன்னம், இறை பிரசன்னம் ஆகியவை இணைந்த முழுமையான உடனிருப்பாக உணரப்பட்டது. கூறு போட்டு பிரித்துப் பார்க்காமல் இயேசுவை ஒட்டு மொத்தமாக நற்கருணையில் பார்க்கும் நிலைக்கு இறையியலை இழுத்துச் சென்றவர் புனித விக்டர் நகரைச் சார்ந்த ஹீயுக் (Huge of St. Victor) என்பவர்.
இந்த மத்திய காலத்தில்தான் நற்கருணையை உட்கொள்ள இருக்க வேண்டிய தகுதிகள் பற்றிய சிந்தனைகள் எழுந்தன. தகுதி இல்லாமல் நற்கருணை உட்கொள்பவர்கள் ஆண்டவரின் உடலை அவமதிக்கின்றனர் என்ற கருத்து பரவியது. பாவம் என்பதற்கே அர்த்தங்கள் மாறிய காலகட்டம் அது. உடல் தீயது ஆன்மாவே புனிதமானது. எனவே உடலில் சிறைப்பட்டு இருக்கும் ஆன்மாவை வெளிக் கொணர உடல் சார்ந்த அத்தனை உணர்வுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆன்மீகம் பரவியது. சமுதாயத்தில் ஒருவர் செய்யும் பாவம் மற்றவரைப் பாதிக்கின்றது என்ற கருத்துக்கள் முன் வைக்கப்படவில்லை. எனவே நல்ல பாவசங்கீர்த்தனம். செய்து ஆன்மாவை கறைபடாமல் காத்துக் கொள்வதே நற்கருணைக்கு சரியான தயாரிப்பாக கருதப்பட்டது.
நற்கருணையை உட்கொள்ளுதல் இரண்டு வகையாகக் கருதப்பட்டது. ஒன்று நேரடியாக உட்கொள்ளுதல் இதற்கு ஆழ்ந்த தயாரிப்புக்கள் தேவை. மற்றொன்று ஆன்மீக முறையில் உட்கொள்ளுதல். இதில் நற்கருணையைப் பார்த்தாலே போதும். பார்த்து உட்கொள்ளும் பண்பாக இது கருதப்பட்டது. தகுதியற்றவர்கள் என்று உணரும் வேளையில் நற்கருணையைப் பார்த்து உள்வாங்கினால்போதும் என்ற எண்ணங்கள் பரவின.
இந்தக் காலகட்டத்தில் திருச்சபை நற்கருணையின் மேல் ஒட்டுமொத்தமான உரிமை கொண்டாடியது. திருச்சபையின் அதிகாரத்தால்தான் நற்கருணை நடைபெறுகிறது என்ற பெருமிதத்தோடு திருச்சபை நடந்து கொண்டது. திருச்சபையிலிருந்து யாரையாவது புறம்பாக்க வேண்டுமெனில் அவர்களுக்கு நற்கருணை மறுக்கப்பட்டது. ஒருவிதத்தில் திருச்சபையின் அதிகாரத்தை நிலைநாட்டும் மற்றொரு கருவியாக நற்கருணை அமைந்தது.
2.5 பள்ளி இறையியலார் சிந்தனை முறையும் நற்கருணையும் :
நற்கருணையில் அப்பமும் இரசமும் எந்தவிதத்தில் இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன என்ற கேள்விக்கு சரியான பதில் தர இறையியலார் பயன்படுத்திய தத்துவச் சிந்தனை முறையில் முக்கிய இடத்தை வகிப்பது அரிஸ்டாட்டிலின் தத்துவம். மெய்மையை, கருப்பொருள் வெளித்தோற்றம் என்று பிரித்துக் கணக்கிட்டு அளவியல் வழியில் விளக்க முயலும் இந்தச் சிந்தனை முறையை பள்ளி இறையியலார் சிந்தனைமுறை என்று நாம் அழைக்கிறோம்.
நற்கருணையில் அப்ப இரசத்தின் வெளித்தோற்றம் மாறவில்லை உள்ளார்ந்த கருப்பொருள் மாற்றமடைகிறது என்ற விளக்கம் இந்தச் சிந்தனை முறையிலிருந்துதான் உருவாகியது.
இந்தச் சிந்தனை முறையைக் கையாண்ட ஈடு இணையில்லாத இறையியலார் புனித அக்குவின் தோமையார். அவர் நற்கருணையை ஒரு பலியாகக் கண்டார். கல்வாரியில் நடந்த பலி திரும்பவும் நடைபெறவில்லைதான், ஆனால் அந்தப்பலியின் பலன் ஒவ்வொரு திருப்பலியிலும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படுகின்றது. அன்று இயேசுவின் பலி தியாக நிகழ்வாகி மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டதுபோன்று இன்றும் மனிதர்களை மீட்கிறது என்ற பொருளில் நற்கருணையை விளக்கினார் அக்குவின் தோமையார்.
இதே பாணியில் அவரின் கருப்பொருள் மாற்றம்' என்ற கருத்தியலும் காணப்பட வேண்டும்.. அப்பரசத்தின் கருப்பொருள் மாறுகிறது. கருப்பொருளாக இயேசு விளங்குகிறார். அதே சமயம் வெளி தோற்றமோ அப்ப இரசத்தின் குணங்களோ மாறவில்லை. இந்த மாற்றம் முற்றிலுமான கருப்பொருள் மாற்றம். நம்பிக்கையோடு பார்க்கும் போதுதான் இந்த அதிசயம் புரியும். இயேசு வரலாற்றில் எப்படி பிரசன்னமாய் இருந்தாரோ அப்படி இன்றும் பிரசன்னமாய் இருக்கிறார். அக்குவின் தோமையாரின் அணுகுமுறை அருமையான தொகுப்புச் சிந்தனை, ஆழமான நம்பிக்கை மனநிலை அகியவை இந்தக் கோட்பாட்டிற்கு மகுடம் சேர்த்தன.
இந்தக் கருப்பொருள் மாற்றம் என்ற கோட்பாடே இன்றுவரை நிலவும் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான நிலை. இன்று புரிந்து கொள்ளும் முரை களும் புதிய விளக்கங்களும் ஏராளமாக வந்தபோதிலும் இந்தக் சோட்பாடு தனித்த தன்மையை கொண்டு விளங்குகின்றது.
பள்ளி இறையியலார் சிந்தனைமுறை அன்றைய காலகட்டத்தில் நற்கருணை நம்பிக்கையில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களுக்குப் பதில் தந்தது. பாஸ்காசின் பண்படாத மொழியைப் பண்படுத்தித் தந்தது. பெராஸ்கரின் அடையாளப் பிரசன்னம் என்ற தத்துவ விளக்கத்தை அடியோடு முறியடித்தது. எனினும் இச்சிந்தனை முறை திருச்சபைத் தந்தையர்களின் ஆழந்த "அடையாளம் - பிரசன்னம் - மறைபொருள்'' என்ற விரிந்த சிந்தனையைப் பிரதிபலிக்கவில்லை. சிந்தனைகளைக் குறுக்கி அளவியல் முறையில் சிக்க வைத்து விட்டது. தத்துவம் கணக்காகும் போது அதன் அகன்றவெளிப்பார்வைகள் அடைபட்டு விடுகின்றன.
பொதுநிலையினருக்கான இறையியல் கல்வி
தூய நற்கருணை
யள

2.6 சமயச் சீர்திருத்தமும் நற்கருணையும்:
மக்கள் மத்தியில் இத்தனை செல்வாக்குப் பெற்ற நற்கருணை, சமயச் சீர்திருத்தவாதிகளால் அடியோடு புறக்கணிக்கப்பட்டதற்கு காரணங்கள் என்ன என்பதைக் கொஞ்சம் அலசிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
திருச்சபையில் ஒன்றிப்பின் அடையாளமாக விளங்க வேண்டிய நற்கருணை பிளவுக்கு வழிவகுத்து விட்டதோ ? என்ற ஐயம் எழக் காரணமாக அமைந்தது குருக்களின் அதிகார துப்பிரயோகம். இறந்தவர்களுக்காக, அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட 'பலி செலுத்துகின்றோம் என்ற கருத்தியலின் அடிப்படையில் நற்கருணையை வியாபாரமாக்கத் துவங்கினர் சிலர். பிறருடைய பாவங்களுக்குப் பரிகாரப் பலி என்ற கண்ணோட்டத்தில், தவறுகள் பல நடந்தன. சரியான பயிற்சி இல்லாத பணியாளர்கள் அதிகமாக 'சடங்குத் தன்மையை' வலியுறுத்தத் துவங்கினர். அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் எதிரிகளை அழிப்பதற்கும் நற்கருணை பக்திகள் பயன்படுத்தப்பட்டன. எவ்வாறெனில் நற்கருணைக் கோட்பாட்டை நம்பாதவர்கள் திருச்சபைக்கு புறம்பாக்கப்பட்டனர், அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் பதிதர் என்று பட்டம் சூட்டப்பட்டனர். .
திருச்சபையில் அதிகார அமைப்புகளையே அடியோடு தகர்க்க கங்கணம் கட்டிவந்த எதிர்ப்பாளர்கள் சிதறடிக்க விரும்பிய பல்வேறு கோட்பாடுகளின் ஒன்று நற்கருணை என்ற அருளடையாளம். நற்கருணைப்பலி என்ற கருத்தியல் தவறானது என்பது மறுமலர்ச்சியாளர்களின் முதல் தாக்குதல். நற்கருணைக் கொண்டாட்டம் 'ஒரு செயல்' நாம் இறைவனுக்குச் செலுத்தும் பலி என்ற கருத்தியல் விவிலியத்திற்கு முரனானது என்று முழங்கினார் மார்டின் லூத்தர். இறைவனின் கோபத்தைத் தணிப்பதற்காகவோ, பிறரின் பாவத்தைப் போக்கி நிரந்தர அழிவிலிருந்து தப்பிக்க வைப்பதற்காகவோ பலி நடத்தத் தேவையில்லை என்றார் லூத்தர். நற்கருணை என்பது இறைவனின் கொடை. அதை நன்றியுணர்வுடன் பெறுகின்ற நிலையே நற்கருணைக் கொண்டாட்டம் என்ற விளக்கத்தை உறுதிப்படுத்தினார். நற்கருணை பலியல்ல விருந்து பங்கெடுப்பவர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விளக்கத்தை ஆழப்படுத்தியவர் லூத்தர். மனிதன் ஏற்புடையவராக மாறுவது நம்பிக்கையால், செயல்களால் அல்ல என்று முழக்கமிட்டார். நற்கருணையில் நாம் செய்வது “நினைவு கூர்தல்" மட்டுமே. எல்லா காலத்திற்கும் பொதுவாக நடந்துவிட்ட இயேசுவின் பலியை நினைத்து இறைவனுக்கு நன்றிகூறும் நிகழ்ச்சியே நற்கருணை என்ற புதிய விளக்கத்தைத் தந்தார்.
லூத்தர் நற்கருணையில் உண்மையாகவே இயேசுவின் பிரசன்னம் இருக்கிறது என்று ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அது எப்படி என்பதற்கான விளக்கங்களை மறுக்கிறார். குறிப்பாக, கருப்பொருள் மாற்றம் என்ற விளக்கம் மத்திய காலத்துக் கண்டுப்பிடிப்பு. இதற்கான ஆதாரங்கள் விவிலியத்தில் இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். நற்கருணையில் இயேசுவின் பிரசன்னம் ஒரு நம்பிக்கை சார்ந்த மெய்மை என்பதுதான் அவரின் கருத்து.
மறுமலர்ச்சியாளர்களில் மற்றொரு நபரான ஸ்விங்லி, நற்கருணையில் உள்ள இயேசுவின் பிரசன்னத்தை அடியோடு மறுத்தார்... இயேசு விண்ணில் இருக்கிறார், அவர் மண்ணகத்தில் பிரசன்னமாய் இருக்க முடியாது. அப்பமும் இரசமும் விண்ணில் உள்ள இயேசுவின் பிரசன்னத்தைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களே என்பார். ஸ்விங்லி.
அவருடைய நண்பரான கால் வீனின் கருத்துக்கள் சற்று வித்தியாசமானவை. அப்பமும் இரசமும் வெறும் அடையாளங்கள் மட்டுமல்ல, அருள் தருகின்ற காரணிகள். இவை இயேசுவின் பிரசன்னத்தை மிக விரைவாகப் உணரச்செய்யும் பண்பினைக் கொண்டிருக்கின்றன என்பார் கால்வீன்.
சீர்திருத்தவாதிகள் விரும்பிய மற்றொரு நடைமுறை “நற்கருணைப் பேழை". நற்கருணைப் பேழையில் இயேசுவின் பிரசன்னம் நிரந்தரமாக இருக்க முடியாது என்பது அவர்களின் அடிப்படையாக வாதம். நற்கருணை கொண்டாடும் சமயத்தில்தான் இயேசுவின் பிரசன்னம் உணரப்படுகிறது என்பது இவர்களின் அடிப்படையான வாதம். இதில் எல்லா மறுமலர்ச்சியாளர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருக்கின்றனர். நற்கருணை ஆராதனைகளையும் நற்கருணைப் பவனிகளையும் விவிலியச் செய்திக்கு எதிரானதாகப் பார்த்தனர். நற்செய்தி ஒன்றே போதும்! நம்பிக்கையால் மட்டுமே ஏற்புடையவராக முடியும் என்று குரல் கொடுக்கும் நேரங்களில் நற்கருணை என்ற அருளடையாளமே நாக பணிக்கு முரணானது என்ற எண்ணத்தில் மறுமலர்ச்சியாளர்கள் செயல்பட்டனர்.
2.7 திரிதந்தீன் சங்கத்தின் நிலைப்பாடு:
சில குருக்கள் நற்கருணை என்ற அருளடையாளத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக நற்கருணை கோட்பாடே தவறானது என்ற முடிவுக்கு வருவதும் அதற்கு ஆதாரமாக இறையியலை உருவாக்கிக் கொள்வதும் தவறுதானே.
எது தவறு என்று நோய்நாடி, நோய்முதல் நாடி அது நீக்கும் வாய் நாடுதல் ஒன்றுதானே பொருத்தமானதாக இருக்கும்! எனவே திரிதந்தீன் சங்கம் தனக்கே உரிய காலப்பின்னணியில் நற்கருணையை அணுக வேண்டிய நிலைக்கு வந்தது. 1
சீர்திருத்தவாதிகள் உண்மையைத் திரித்துக் கூறுகிறார்கள் என்று வெகுண்டு எழுந்தது திருச்சங்கம். அவர்களின் கூற்றுக்களை ஆய்ந்து பார்க்கத் துவங்கியது. குருக்கள் செய்யும் முறை கேடுகளைக் களைய வேண்டும், குழம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு நற்கருணையில் திடமான நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்; சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் தவறு எனக் காட்டவேண்டும் என்பது 1545 ஆம் ஆண்டு நடந்த திரிதந்தீன் சங்கத்தின் நற்கருணை பற்றிய கரிசனங்கள்.
நற்கருணை பற்றி ஐந்து கொள்கைத் திரட்டுக்களை இந்தச் சங்கம் உருவாக்கியது.
1. மிகப் புனித நற்கருணை பற்றிய கொள்கைத்திரட்டு (11-10-1551)
2. நற்கருணை உட்கொள்ளுதல் பற்றிய கொள்கைத்திரட்டு (16-06-1562)
3. நற்கருணைப் பலி பூசை பற்றிய கொள்கைத் திரட்டு (17-09-1562
4. திருப்பலி கொண்டாட்டதில் முறைகேடுகள் பற்றிய கொள்கைத்திரட்டு (17-09-1562)
5. திருக்கிண்ணத்தில் பருகுவது தொடர்பான கொள்கைத்திரட்டு (18-09-1562)
விவிலியத்திற்கு நேரடியாகச் சென்று விவிலிய ஆசிரியரின். உட்கருக் ஆய்வதும் அதைத் திருச்சபையின் நடைமுறைக்கு பொருத்திப் பார்க்க கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் நிர்ணயிப்பதும் இந்த சங்கத்தின் அணுகு முறையாக அமைந்தது.
திருதெந்தீன் சங்கம் இயேசுவின் நற்கருணைப் பிரசன்னம் உண்மையானது என்று சொல்லி அது அடையாளப் பிரசன்னம் மட்டுமே எனும் மறுமலர்ச்சியாளர்களின் கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது உடல்சார்ந்த மெய்மையல்ல, ஆன்மீகம் சார்ந்த மெய்மை என்பதை விவிலிய ஆதாரங்களிலிருந்து விளக்க முயன்றது.
நற்கருணை ஒரு பலி என்ற கருத்தை இன்னும் ஆழமாக அறிக்கையிடுகிறது இந்தத் திருச்சங்கம். இயேசுவின் கல்வாரிப்பலியின் பலன்களை நடைமுறைக்குக் கொண்டுவரும் அற்புதமான அருளடையாளம் நற்கருணை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் இந்தச் திருச்சங்கம் பாவப்பரிகாரப்பலி என்ற கருத்தியலுக்கு அழுத்தம் தருகிறது. இயேசுவின் பலி பாவங்களைப் போக்குகிறது என்ற காரணத்தால் இறந்தவர்களுக்காக மன்றாடுவது அர்த்தமுள்ளதே என்று இந்தச் சங்கம் அறிக்கையிடுகிறது.
அப்பமும் இரசமும் ஆண்டவரின் உடலாகவும் இரத்தமாகவும் எவ்வாறு மாறுகின்றன என்ற கேள்விக்கு கருப்பொருள் மாற்றம்' என்ற அக்குவின் தோமையாரின் விளக்கத்தையே தருகின்றது திருச்சங்கம். தவறான வாழ்க்கை நடத்தும் குருக்களை மையப்படுத்தாமல் திருச்சபை குருவுக்கு அதிகாரம் வழங்குகிறது என்ற கருத்தை மையப்படுத்தி தன் நிலையைத் தக்க வைத்துக் கொள்கிறது இந்தச் சங்கம்.
அப்பத்தை மட்டும் உண்டால் போதாது இரத்தத்தையும் அனைவரும் பருக வேண்டும் என்ற மறுமலர்ச்சியாளர்களின் அறைகூவலை நிராகரித்து அப்பத்தை மட்டும் உண்டால் போதும் என்ற நடைமுறை ஒழுங்கைத்தந்தது இந்தச் சங்கம்.
இந்தச் சங்கத்தின் போக்கே மறுமலர்ச்சியாளர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற காரணம்தான். திருச்சபையின் சத்தியங்களை சரியான முறையில் விளக்கி, மக்கள் மனதில் நிலைப்படுத்துவதன் மூலம் மறுமலர்ச்சியார்களை முறியடிக்கலாம் என்று நம்பியது இத்திருச்சங்கம்.
நற்கருணை பற்றிய இந்தக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த நற்கருணைத் திருநாட்கள், ஆராதனைகள், பவனிகள், மாநாடுகள் என்று பல்வேறு உத்திகளைக் கையாண்டது இந்தத் திருச்சங்கம். அதே சமயம் விவிலியத்தின் மூலங்களுக்குச் சென்று சமுதாயம், பகிர்வு, வாழ்க்கையில் நலிந்தோர் மேல் கரிசனம் ஆகியவற்றை வளர்க்கும் அடையாளமாக நற்கருணையை உருவாக்க, உருமாற்ற இந்த சங்கம் தவறிவிட்டது.
இந்தக் காலத்திலிருந்து அதன் செயல் பாடுகளை அலசிப்பார்க்கும் போது இப்படி நம்மால் திறனாய்வு செய்ய முடிகிறது. இந்த சங்கம் அந்தக் காலக்கட்டத்தில் உடனடியாக தவறுகளைச் சரிசெய்து நிலையான ஒரு கொள்கையை, சரியான சடங்கு முறையை நிலை நாட்டியதே அதன் வெற்றி என்று சொல்லலாம். காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விடாமல் கிறிஸ்தவ மக்களுக்கு தெளிவான பாதை காட்டியது இந்தத் திருச்சங்கம்.
2.8 இரண்டாம் வத்திக்கான் சங்கம் வரை :
திருதந்தின் சங்கம் தந்த கட்டுக் கோப்பு பல நூற்றாண்டுகளாக திருச்சபையில் ஒற்றுமையையும் ஒழுங்கையும் உருவாக்கியது, பிரிவினை சகோதரர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில்தான் இறையியல் விளக்கங்கள் இருந்தனயொழிய மறைபொருளின் ஆழத்திற்கு மக்களை இழுத்துச் செல்லவில்லை. நற்கருணை பக்தியில் மக்கள் பெரிதும் ஈடுபடுத்தப்பட்டனர். வாழ்க்கையைத் தொடாமல் விண்ணக கற்பனையில் திளைக்க வைக்கும் மறு உலக சூழலை இந்த நற்கருணை உண்டாக்கியது. சொந்த பாவங்களுக்கு மட்டுமல்ல மனுக்குலத்தின் பாவங்கள் அனைத்திற்கும் பரிகாரம் செய்கின்ற நிகழ்ச்சியாக நற்கருணை அமைந்தது. .
நற்கருணையில் திருச்சபை பாதுகாப்பு தேடியது என்ற மெய்மை இங்கு கோடிட்டுக் காட்டப்படவேண்டிய ஒன்று. மக்கள் திருச்சபையின் அமைப்புகளை, அதிகாரத்தைக் கேள்விக் குறியாக்கவில்லை. குருக்களின் பணி பெரிதும் பாதுகாப்பான வழிபாட்டுப் பணியாக குறுகிய நேரத்தில் சமுதாயம் பண உதவி செய்தது. ஆலயங்கள் பல கட்டப்பட்டன. ஆராதனை சபைகள் உண்டாக்கப்பட்டன. திருச்சபைக்கு எதிராகப் பேசியவர்கள் எல்லாம் திருச்சபைக்குப் புறம்பானவர்களாகக் கருதப்பட்டனர். பதிதர் அஞ்ஞானிகள் போன்றோருக்காக ஜெபித்து தனது அமைப்புமுறைகளை இறுக வைத்துக் கொண்டது திருச்சபை.
ஒருசில இறையியலார் நற்கருணைப் பலிக்கு புதிய விளக்கங்கள் தரத்துவங்கினர். அடித்தள இறையியலிலிருந்து அணுவும் பிறழாமல் புதிய விளக்கங்களைக் கட்டியெழுப்பினர். 1925ஆம் ஆண்டில் ஆன்ஸ்கார்வோனியர் பலியை இயற்கைப் பலி, அருளடையாளப்பலி என்று பிரித் தார். அருளடையாளப்பலி இயற்கைப்பலியான இயேசுவின் மரணத்தைவிட வித்தியாசமான நிலையில் உள்ளது. அதே சமயம் அருளடையாளங்கள் அவை சுட்டிக்காட்டும் அருளை வழங்கும் காரணிகளாக உள்ளன என்று விளக்கம் தந்தார். படைத்தவருக்கும் படைப்புக்கும் இடைநிலையில் உள்ள அருளடையாளம், படைப்புக்களையும் படைத்தவரையும் இணைக்கும் தன்மை வாய்ந்தது என்றார்.
இருபதாம் நூற்றாண்டில் புதிய விளக்கங்கள் உருவாகத்துவங்கின. அருளடையாள இறையியலால் பல புதிய கோணங்கள் வளர்ந்தன. கிறிஸ்து தந்தையின் ஒட்டுமொத்தமான அருளடையாளமாக உள்ளார்; எந்த அளவு கிறிஸ்துவை திருச்சபை பிரதிப்பலிக்கிறதோ அந்த அளவிற்கு அருளடையாளமாக விளங்குகிறது; திருச்சபையின் ஒவ்வொரு அருளடையாளமும் கிறிஸ்துவைப் பிரதிபலிக்க திருச்சபையை அழைத்துச் செல்கிறது; அவற்றில் தலைசிறந்த அருளடையாளம் நற்கருணை என்ற அருளடையாளச் சிந்தனைகள் வளர்ந்தது இருபதாம் நூற்றாண்டில்தான்.
இத்தகைய சிந்தனைகளுக்கு அடிப்படையாக இருந்தது பொதுநிலையினரின் ஆர்வமும் 20ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவழிபாட்டு இயக்கங்களும்தான். இந்த இயக்கங்களின் மாறுபட்ட சிந்தனைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம்.
1. திருச்சபைத் தந்தையர்களின் எழுத்துக்களைக் கற்று அவர்களின் ஆன்மீக அனுபவங்களை உள்வாங்குகின்ற பல்வேறு ஆய்வுகள்.
2. அறிவியல் கேள்விகயையும் நம்பிக்கை கேள்விகளையும் வித்தியாசப்படுத்திக் காணும் முதிர்ந்த அறிவுநிலை. அப்பரசத்திற்கு கருப்பொருள் உண்டா ? அதன் மாற்றம் பற்றிப் பேசலாமா? என்ற கேள்விகளை அறிவியல் பூர்வமாக மட்டும் அணுகாமல் அறிவியலுக்கு முரண்பாடு இல்லாத அறிவியலைக் கடந்த மெய்மை நிலையிலிருந்து அணுகும் திறம்.
3. தத்துவ இயலில் ஏற்பட்ட மாற்றம். பள்ளி இறையியலார் சிந்தனையிலிருந்து இருப்புநிலை சார்ந்த, மனித உறவுகள் சார்ந்த புதிய தத்துவ இயல்களுக்கு சென்ற நிலை அருளடையாளங்கள் பற்றிய புரிதல்களிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
அப்ப இரசத்தில் ஏற்படுகின்ற மாற்றத்தைவிட நற்கருணையின் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற மாற்றத்தைப் பற்றி இறையியலாரைத் திசைதிருப்பின. இந்த மூன்று வகை மாறுதல்கள் 1955 ஆம் ஆண்டு F.J.லீன்கார்ட் என்ற பிரிவினைச் சபையைச் சார்ந்த இறையியலார் இறுதிப் பொருள் மாற்றம் (Transfinalization) என்ற கருத்துருவத்தை நற்கருணை இயலில் கொணர்ந்தார். இறைவார்த்தை அப்பத்தையும் இரசத்தையும் இறைபிரசன்னத்தின் அடையாளமாக மாற்றுகிறது. இறுதிப்பொருளை மாற்றியமைக்கிறது என்று பொருள் கொண்டார். அதைத் தொடர்ந்து 'அர்த்த ங்கள் மாற்றம்' (Transignification) 'செயல்பாடு மாற்றம்' (Transfuncturalzation) என்ற கருத்தியல்கள் கத்தோலிக்க சபையின் இறையியலார் மத்தியிலும் உருவாகத் துவங்கின.
வத்திக்கான் சங்கத்தின் இந்த புதிய பார்வைகள் பல கோணங்களில் ஆய்வு செய்யப்பட்டன. கிறிஸ்துவின் உண்மை பிரசன்னத்தை அப்ப இரசத்தில் மட்டும் பார்க்காமல் வழிபாட்டின் பல்வேறு நிலைகளில் இறைவார்த்தையில், கூடி வருகின்ற சமுதாயத்தில், குருவின் பிரசன்னத்தில் பார்க்கின்ற சிந்தனை முறை இந்த புதிய சிந்தனை முறைகளின் வெளிப்பாடு. அதே சமயம் நம்பிக்கையின் மறைபொருள்' என்ற திருமடலில் கருப்பொருள் மாற்றம்' தான் அப்ப இரச வடிவில் இருக்கும் ஆண்டவரின் பிரசன்னத்தை விளக்கும் அதிகாரப்பூர்வமான கோட்பாடு என்று ஆறாம் பவுல் அறிவித்தார். புதிய விளக்கங்களை அவர் சந்தேகக் கண்ணோடு பார்க்கவில்லை. அதே சமயம் திருச்சபையின் பாரம்பரியத்தில் வளர்ந்த இந்த நம்பிக்கைக்கு சிறப்பான விளக்கங்கள் கிடைக்கும்வரை கருப்பொருள் மாற்றத்தையே அடிப்படையாக அறிவிக்கிறார் திருத்தந்தை.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு அதன் பின்னணியில் புதிய விளக்கங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடையாளம் என்ற வார்த்தையின் பல்வேறு கோணங்கள் இன்று மொழியாலரால். மானிடவியலாரால், சமூகவியலாரால, உளவியலாரால் விளக்கப்படுகின்றது. அந்த ஆய்வுகளையெல்லாம் இறையியல் உள்வாங்கிக் கொண்டு அவற்றின் வெளிச்சத்தில் நற்கருணை நம்பிக்கையின் ஆழ்ந்த மறைபொருளை புரிந்து கொள்ள முடிகிறது.
இன்றைய மானிடரின் ஏக்கங்கள், துன்பங்கள் போராட்ட ஆகியவற்றை நற்கருணை எவ்வாறு சந்திக்கிறது? என்ன செய்தி தருகிறது? எப்படிப்பட்ட வாழ்வின் முடிவுகளுக்கு அழைத்துச் செல்கிற என்ற சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மரிய லூயிஸ் ஹோவே என்ற பிரான்ஸ் நாட்டு இறையியல் அறிது பள்ளி இறையியலார் சிந்தனை முறையில் வளர்ந்த இறையியல் இருப்புநிலை பற்றிப் பேசுகின்ற போது தேக்கமான சிந்தனை முறை என்று புறக்கணிக்கிறார். உறவு நிலையின் விளைவுகளை காரணகாரிய அளவியல் முறையில் கணக்கிடமுடியாது என்று கூறும் இறையியலார் உறவுசார்ந்த அடையாள மனநிலையோடு நற்கருணை அணுக வேண்டும். பிரசன்னம் என்பது வளர்ந்து வரும் உறவுப் பிரசன்னத்தைக் குறிக்கிறது. செயல்பாட்டிற்கு அழைத்துச் செல்லும் ஒரு பிரசன்னமே நற்கருணைப் பிரசன்னம் என்று இயம்புகிறார்.
2.9 பல்சபைகளின் உரையாடல் பின்னணியில்:
நற்கருணை பற்றிய கருத்தியல்கள் பதினாறாம் நூற்றாண்டில் திருச்சபையைக் கூறு போட்டன. இன்று உரையாடல் என்ற பெயரில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் புதிய பார்வைகள் சபைகளுக்கிடையே தோன்றியுள்ளன. 1963ஆம் ஆண்டு நடந்த நம்பிக்கை மற்றும் சீரமைப்பு பற்றிய நான்காவது சர்வதேசத் திருச்சபை மாநாடு இதற்கான கொள்கைகளை வகுத்தது. 1982 ஆம் ஆண்டு லீமா நகரில் நடந்த மாநாட்டில் சில பொதுவான கொள்கைத்திரட்டு வந்தது.. "நற்கருணை இயேசுவின் பாடுகளையும் உயிர்ப்பையும், நினைவு கூரும் நிகழ்வு ... சீரிய முறையில் கடவுளின் வல்லசெயல்களையும் வாக்குறுதியையும் நினைவுகூரும் அடையாளச் செயல்” என்று அனைத்து சபைகளும் ஏற்றுக் கொண்டன.
நற்கருணையில் ஏற்படும் மாற்றம் பற்றிய கருத்துக்களில் சில உடன்பாடுகள் ஏற்பட்டன. அப்பமும் இரசமும், உண்மையிலேயே இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கின்றன. இந்த பிரசன்னம் நம்புகிறவர்களைப் பொருத்தல்ல, இயேசுவின் இறுதி உணவு வார்த்தைகளைப் பொறுத்தே அமைகிறது என்று சபைகள் தெளிவாகக் கூறுகின்றன.
இந்தக் கருத்துக்களை அதிகாரப்பூர்வமான திருச்சபையின் கோட்பாட்டு ஆணையம் திறந்த மனதோடு பார்த்தாலும் பலி, நற்கருணைப் பொருள் மாற்றம் ஆகியவற்றின் சரியான விளக்கங்கள் தரப்படவில்லையென்று நிராகரிக்கிறது.
இன்னும் பல முயற்சிகள் சபைகளுக்கு உள்ளே நடந்து கொண்டிருக்கின்றன. இருந்த போதிலும் கத்தோலிக்கத் திருச்சபை ''உண்மை பிரசன்னம்” 'பலி' என்ற தனது கருத்தியல்களை விட்டுக்கொடுக்கவில்லை. பிற சபைகளின் நற்கருணைக் கொண்டாட்டங்கள் திருப்பலி விருந்துக்கு சமமானது என்று அது, ஏற்றுக் கொள்ளவில்லை. திருச்சபையின் இந்த உறுதிக்கு காரணம் அதிகாரப்போக்கோ, அல்லது நாங்கள்தான் நம்பிக்கைக்கு காவல்காரர்கள் என்ற மமதையோ இல்லை. ஏற்பட்ட அனுபவங்களால், உண்மையில் ஊன்றிய தனது நிலைப்பாட்டை ஆதாரமாக்கிக் கொண்டு அதன்மேல் கோட்பாடுகளைக் கட்டியெழுப்பும் ஆர்வமே! |
இதுவரை நற்கருணை இறையியலின் வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்டினேன். கிறிஸ்துவின் உடலாக கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்குவதில் முன்னிடம் பெற்ற நற்கருணை இறையியல் பிளவுகளுக்கிடையே, பல்வேறு திசைமாற்றங்களைக் கண்டு பின் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஊற்றாகவும் உச்சகட்டமாகவும் உருவெடுத்த கோலங்களைப் பார்த்தோம். இவற்றிலிருந்து இன்றைய நற்கருணை இறையியலை அகழ்ந்தெடுப்பது அடுத்த பகுதியின் நோக்கம்.
Comments