புதிய வானம் புதிய பூமி காணுவோம் புலருகின்ற புதிய ஆண்டில் | Puthiya Vaanam Puthiya Boomi Kaanuvom Pularukinta Puthiya Aandil

புதிய வானம் புதிய பூமி காணுவோம்
புலருகின்ற புதிய ஆண்டில்
புதிய மனிதராய் ஆகுவோம்
வாருங்கள் அருள் தேடுங்கள்
வாழ்வினில் புகழ் சேருங்கள்

வாழ்க்கைப் பயணம் தொடங்கும் நேரம்
வள்ளல் இயேசு உள்ளம் பெறுவோம்
வாழ்வின் நிறைவாம் அன்பின் கொடைகள் 
வாழ்வில் கண்டு வளமை சேர்ப்போம்
இறைவன் வழியில் நடக்கும் போது
பயமே எனக்கில்லை - அவர்
துணையில் நானும் வாழும் போது
அச்சம் எனக்கில்லை

மனித மாண்பைக் கொணரத் துடிக்கும்
மனிதர் நடுவில் வாழ்வில் பிறக்கும்
மகிழ்வால் வாழ்வை நனைக்கும் பணியில்
மனங்கள் யாவும் ஒன்றி வாழும்
மனித உறவை வளர்க்கும் பணியில்
மாற்றம் இனி இல்லை - அவர்
மனதை அடையும் இலட்சிய நோக்கில்
மாற்றம் இனி இல்லை 

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு