Posts

இயேசுவின் குழந்தைப் பருவம் பற்றி நாம் அறிவது என்ன?

Image
1. இயேசு பிறந்த நாற்பதாம் நாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டார். 2. நாசேரேத்தில் வளர்ந்து வந்தார். 3. தம் தாய் தந்தையருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார். 4. தம் பன்னிரண்டாம் வயதில் போதகர் நடுவில் கற்பித்தார். 5. ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்‌

இயேசுவின் தந்தை யார்?

Image
கடவுளே இயேசுவின் தந்தை. புனித யோசேப்பு அவருடைய வளர்ப்புத் தந்தை மட்டுமே 

இயேசு கன்னி மரியாவிடம் எப்படிப் பிறந்தார்?

Image
தூய ஆவியாரின் வல்லமையால் வியத்தகு முறையில் கருவாகி, இயேசு மனிதராகப் பிறந்தார் 

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் | Iratham Jeyam Iratham Jeyam Kalvaari Yesuvin Iratham Jeyam

Image
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் கல்வாரி இயேசவின் இரத்தம் ஜெயம் காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் சமாதானம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம் பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் 4. நமக்காய் பரிந்துபேசும் இரத்தம் ஜெயம் நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் 5. பிரிவனை நீக்கிடும் இரத்தம் ஜெயம் பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம் ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் 6. குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் குறைகளை போக்கிடும் இரத்தம் ஜெயம் விலையேறப் பெற்ற இரத்தம் ஜெயம் விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்

இயேசுவின் தாய் யார்

Image
இயேசுவின் தாய் எப்போதும் கன்னியான தூய மரியா 

இயேசு எந்த ஊரில் பிறந்தார்?

Image
இயேசு பெத்தலகேம் என்னும் ஊரில் பிறந்தார்.

இயேசு எந்த நாட்டில் பிறந்தார்?

Image
இயேசு பாலஸ்தீன் என்னும் இஸ்ரயேல் நாட்டில் பிறந்தார்.

இயேசு கிறிஸ்து என்னும் பெயருக்குப் பொருள் என்ன?

Image
இயேசு   என்பதற்கு மீட்பர் என்றும், கிறிஸ்து என்பதற்கு அருள்பொழிவு பெற்றவர் என்றும் பொருள் ஆகும்.

கடவுள் வாக்களித்த மீட்பர் யார்?

Image
கடவுள் வாக்களித்த மீட்பர் இயேசு கிறிஸ்து 

பாவ நிலையிலேயே கடவுள் மனிதரை விட்டுவிட்டாரா?

Image
இல்லை. மனிதரைப் பாவ நிலையிலிருந்து விடுவிக்க ஒரு மீட்பரை அனுப்புவதாகப் கடவுள் வாக்களித்தார்.