Posts

நோயாளிகள் சொல்லத்தகும் செபம்

ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன். மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில் மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன். ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும். அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும். என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்க...

நல்ல மரணத்துக்கு ஆயத்தம்

Image
நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.

கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்

Image
ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் ! ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும். என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.

நோய்ப்பட்ட கால்நடைகளுக்கான செபம்

Image
ஆண்டவரே ! மிகுந்த தாழ்ச்சியோடே வணங்கி உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். கடின நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிற இந்த மிருகம் உம்முடைய ஆசீரினால் சுகம் அடைந்து, இனி யாதொரு நோய் படாதபடி எல்லாத் தொந்தரைகளும் விலகிப்போகச் செய்யும். நீரே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிரும். இரக்கம் மிகுந்த இறைவா, தேவரீர் தாமே இத்தகைய வாயில்லா ஜீவன்களை மனிதரின் நன்மைக்காக அளித்திருப்பதால், எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கு இல்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பஞ்சகாலத்தில் செபம்

Image
  எலிசேயு இறைவாக்கினரின் காலத்தில் சமாரியாவிலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள தந்தையே ! எங்கள் பாவங்களின் நிமித்தம் தண்டனையாக வெகு துன்பப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும் படி இரக்கம் செய்தருளும். உமது பரம ஆசீரினாலே பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் தாராளமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாய் இருக்கத்தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக செபம்

வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக! முதல் : இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும். துனை : எங்கள் குரலொலி உம் திருமுன் வருவதாக! செபிப்போமாக ஆண்டவரே ! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் புகழ்ச்சி உண்டாகும் படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே|| பூண்டி மாதா பாடல்||Azlaguruvey Venillave Thooya Meegamey|| Poondi matha song

Image
அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே தேனமுதே ஓவியமே தூய வதனமே அறுசுவை விருந்தே காயத்தின் மருந்தே தெள்ளிய நீரே பூண்டி அன்னையே சொல்லிய சொல்லும் போதாது என் செய்வேன் மனமே (2) பொல்லாரின் வலையிலே நாங்கள் சிக்கும்போது சொல்லாத சோகத்தில் நாங்கள் வருந்தும் போது (2) கூப்பிடாமலே காத்திடும் தாயே சொல்லிடாமலே வந்திடும் உறவே அழிவதில்லை உந்தன் பந்தமே குறைவதில்லை உந்தன் பாசமே தொலையாத இன்பமாய் என்னைப் பற்றிக்கொண்டாய் நிலையாமை இல்லையே உன்னைப் பற்றிக்கொண்டால் மாய வாழ்விலே வாழும் மாந்தரை தூய வாழ்விற்கு ஈர்க்கும் தெய்வமே அருளே அழகே எந்தன் சொந்தமே மதியே மலரே எந்தன் பந்தமே