அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே|| பூண்டி மாதா பாடல்||Azlaguruvey Venillave Thooya Meegamey|| Poondi matha song
அழகுருவே வெண்ணிலவே தூய மேகமே
தேனமுதே ஓவியமே தூய வதனமே
அறுசுவை விருந்தே காயத்தின் மருந்தே
தெள்ளிய நீரே பூண்டி அன்னையே
சொல்லிய சொல்லும் போதாது
என் செய்வேன் மனமே (2)
பொல்லாரின் வலையிலே நாங்கள் சிக்கும்போது
சொல்லாத சோகத்தில் நாங்கள் வருந்தும் போது (2)
கூப்பிடாமலே காத்திடும் தாயே
சொல்லிடாமலே வந்திடும் உறவே
அழிவதில்லை உந்தன் பந்தமே
குறைவதில்லை உந்தன் பாசமே
தொலையாத இன்பமாய் என்னைப் பற்றிக்கொண்டாய்
நிலையாமை இல்லையே உன்னைப் பற்றிக்கொண்டால்
மாய வாழ்விலே வாழும் மாந்தரை
தூய வாழ்விற்கு ஈர்க்கும் தெய்வமே
அருளே அழகே எந்தன் சொந்தமே
மதியே மலரே எந்தன் பந்தமே
Comments