Posts

புனித யூதா ததேயுவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

Image
 ✝️🌹மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுவே🧎‍♂️  ✝️🌹எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே🧎‍♂️  ✝️🌹புண்ணியங்கள் மின்னித் துலங்கும் தூயவரே🧎‍♂️  ✝️🌹புதுமை வரங்களில் சிறந்தவரே🧎‍♂️  ✝️🌹தம்மை தேடி வந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே🧎‍♂️  ✝️🌹உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம்.🧎‍♂️ ✝️🌹இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்🧎‍♂️  ✝️🌹இதய பூர்வமான நன்றி நவில்கிறோம்.🧎‍♂️ ✝️🌹எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்🧎‍♂️  ✝️🌹சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.🧎‍♂️ *(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)* ✝️🌹நேசிக்கப்படத் தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர் பெற்று இயங்கும் தயாள இருதய புனித யூதா ததேயுவே 🧎‍♂️ ✝️🌹உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போக விடாதேயும்.🧎‍♂️ ✝️🌹யூதாசின் பெயர் ஒற்றுமையால் உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் ...

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே

Image
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே - நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது சோர்ந்து 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3. காண்கின்ற உலகம் தேடவில்லை காணாதப் பரலோகம் நாடுகிறோம் 4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால் பாக்கியம் நமக்கு பாக்கியமே 5. மன்னவன் இயேசு வருகையிலே மகிழ்ந்து நாமும் களிகூருவோம் 6. மகிமையின் தேவ ஆவிதாமே மண்ணான நமக்குள் வாழ்கின்றார்

அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளேநல் வீட்டைக் கட்ட நீரே வருவீர்

Image
1. அடியார் வேண்டல் கேளும், இயேசுவே உம் பாதம் சேர்ந்தோம் தாசர் இந்நாளே நல் வீட்டைக் கட்ட நீரே வருவீர், உம் ஆசி தேடி வந்தோம் நாங்களே. 2. எங்கள் நல் வீட்டில் நீரே தங்குவீர் பந்தியில் நீரும் கூட அமர்வீர். எங்கள் நற்பேச்சில் நீரும் மகிழ்வீர், எங்கள் துன்பத்தை இன்பமாக்குவீர். 3. பாலனாய் வந்த இயேசு ரட்சகா, எம் பாலர் முகம் பாரும், நாயகா தெய்வ கிருபை நற்குணம் நற்செயல் யாவிலும் இவர் ஓங்கச் செய்வீரே. 4. வாலிபர் நெறி தவறாமலும், ஈனர் இழிஞரைச் சேராமலும், ஞானமாய் வாழ்ந்து சீலமுடனே நல் சேவை செய்ய நீர் அருள்வீரே. 5. மூத்தோர் முதியோர் யாரையும் அன்பாய் காரும், உம் பலம் ஆறுதல் தாரும் நோயுற்றோர் பலவீனர் யாரையும் தளர்ச்சி தீர்த்துத் தாபரித்திடும். 6. எம் வீட்டை இந்நாள் பிரிந்து சென்று எங்கெங்கோ தங்கும் எல்லாப்பேரையும் அன்பாய் அணைத்து ஆதரித்திடும் அவரைக் காத்து அல்லும் பகலும். 7. ஆண்டாண்டாய் எங்கள் வீடு வளர, ஆவியில் அன்பில் என்றும் பெருக, எங்கள் நல் நாட்டில் இன்ப இல்லங்கள் இயேசுவின் வீடாய் என்றும் பொலிக.

அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே

Image
அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே (2) இடம் அசைய உள்ம் நிரம்ப இறங்கி வாருமே(2) பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே (2) கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே (2) அசைவாடும்... தேற்றிடுமே உள்ங்களை இயேசுவின் நாமத்தினால் (2) ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால் (2) அசைவாடும்... துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால் (2) நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே (2) அசைவாடும்...

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும்

Image
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2) 1. முட்செடி நடுவே தோன்றினீரே மோசேயை அழைத்து பேசினீரே (2) எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2) எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2) அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும் 2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே இறங்கி வந்தீர் அக்கினியாய் (2) இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2) எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2) 3. ஏசாயா நாவை தொட்டது போல எங்களின் நாவைத் தொட்டருளும் (2) யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2) எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2) 4. அக்கினி மயமான நாவுகளாக அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2) அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2) ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2) 5. இரவு நேரத்தில் நெருப்புத் தூணாய் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2) இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2) எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)

அகோர கஸ்தி பட்டோராய்வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய்

Image
1. அகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து, குரூர ஆணி தைத்தோராய் தலையைச் சாய்த்துக்கொண்டு, மரிக்கிறார் மா நிந்தையாய்! துன்மார்க்கர் சாகும் வண்ணமாய் மரித்த இவர் யாவர்? 2. சமஸ்தமும் மா வடிவாய் சிஷ்டித்து ஆண்டுவந்த, எக்காலமும் விடாமையாய் விண்ணோரால் துதிபெற்ற மா தெய்வ மைந்தன் இவரோ? இவ்வண்ணம் துன்பப்பட்டாரோ பிதாவின் திவ்விய மைந்தன்? 3. அநாதி ஜோதி நரனாய் பூலோகத்தில் ஜென்மித்து, அரூபி ரூபி தயவாய் என் கோலத்தை எடுத்து, மெய்யான பலியாய் மாண்டார் நிறைந்த மீட்புண்டாக்கினார் என் ரட்சகர், என் நாதர்.

அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா | Akilamengum sella va

Image
அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கழ்படிந்து எழுந்து வா – 2 1. ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா - 2 2. தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா – 2 3. நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2