புனித யூதா ததேயுவை நோக்கி ஜெபம் மற்றும் புகழ்மாலை

 ✝️🌹மாட்சிமைமிக்க அப்போஸ்தலரும் வேதசாட்சியுமான புனித யூதா ததேயுவே🧎‍♂️ 

✝️🌹எங்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய உறவினரே🧎‍♂️ 

✝️🌹புண்ணியங்கள் மின்னித் துலங்கும் தூயவரே🧎‍♂️ 

✝️🌹புதுமை வரங்களில் சிறந்தவரே🧎‍♂️ 

✝️🌹தம்மை தேடி வந்தவர்களை தப்பாமல் ஆதரிக்கும் தயாள உள்ளங் கொண்டவரே🧎‍♂️ 

✝️🌹உம்மை நாங்கள் வாழ்த்துகிறோம்.🧎‍♂️

✝️🌹இந்த அற்புத வரங்களை உமக்களித்த அன்பு தேவனுக்கு ஆராதனை செலுத்துகிறோம்🧎‍♂️ 

✝️🌹இதய பூர்வமான நன்றி நவில்கிறோம்.🧎‍♂️

✝️🌹எங்களுக்குத் தேவையான ஆன்ம சரீர நலன்களையெல்லாம் அடைந்து தந்தருள உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்🧎‍♂️ 

✝️🌹சிறப்பாக இப்போது எங்களுக்கு மிகவும் அவசியமாக இந்த வரங்களைப் பெற்றுத்தாரும்.🧎‍♂️

*(நம் தேவைகளை எடுத்துக் கூறுவோம்)*

✝️🌹நேசிக்கப்படத் தக்கவரும் உள்ளப் பண்பாடு உடையவரும் இறைப் புகழை பாடுபவருமான பெயர் பெற்று இயங்கும் தயாள இருதய புனித யூதா ததேயுவே 🧎‍♂️

✝️🌹உமது வல்லமையில் எங்கள் நம்பிக்கை வீண் போக விடாதேயும்.🧎‍♂️

✝️🌹யூதாசின் பெயர் ஒற்றுமையால் உமக்கு நேர்ந்த பக்திக் குறையைக் பரிகரித்து வகையின்றி வாடுவோருக்கு வல்லமையுடன் உதவி புரியும் அரிய வரத்தை இறைவன் உமக்கு அளித்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தருளும்.🧎‍♂️

✝️🌹இப்பெரிய வரத்திற்காக நாங்களும் உம்முடன் சேர்ந்து இறைவனின் புகழைப் பாடத் துணை புரியும்🧎‍♂️ 

✝️🌹அவருக்கு நன்றி செலுத்த தயை செய்யும்.🧎‍♂️ 

✝️🌹நீர் எங்களுக்கு செய்கின்ற இப்பேருதவிக்காக எங்கள் வாழ்நாளெல்லாம் நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்போம் .🧎‍♂️

✝️🌹உமது வல்லமையுள்ள மன்றாட்டை மக்களிடையில் அறியச் செய்வோம். 🧎‍♂️

✝️🌹பலர் அறியாப் புனிதரே ! 🧎‍♂️

✝️🌹சிறப்பு இயல்புகள் பல படைத்தவரே ! 🧎‍♂️

✝️🌹பலன் தரும் உமது பக்தி பாரெங்கும் பரவ எங்களால் ஆன பிரயாசையெல்லாம் எடுப்போம் என்றும் உறுதியாய் வாக்களிக்கிறோம்.🧎‍♂️

*🙏🏻ஆமென்🙏🏻✝️🙏*

 
✝️🌷❣️🌷✝️🌷❣️🌷✝️

*புனித யூதா ததேயு புகழ் மாலை*

✝️🌷❣️🌷✝️🌷❣️🌷✝️

✝️🌷ஆண்டவரே இரக்கமாயிரும்🧎‍♂️

✝️🌷கிறிஸ்துவே இரக்கமாயிரும் 🧎‍♂️

✝️🌷ஆண்டவரே இரக்கமாயிரும்🧎‍♂️

✝️🌷கிறிஸ்துவே எங்களுக்குச் செவி சாய்த்தருளும்.🧎‍♂️

✝️🌷பரலோக பிதாவாகிய சர்வேசுரா
 - *எங்கள் மேல் இரக்கமாயிரும்*🧎‍♂️

✝️🌷உலக மீட்பரான சுதன் சர்வேசுரா - *எங்கள் மேல் இரக்கமாயிரும்*🧎‍♂️

✝️🌷பரிசுத்த ஆவி சர்வேசுரா - *எங்கள்மேல் இரக்கமாயிரும்*🧎‍♂️

✝️🌷பரிசுத்த திரியேக சர்வேசுரா - *எங்கள் மேல் இரக்கமாயிரும்*

✝️🌷புனித மரியாயே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*

✝️🌷புனித யூதா ததேயுவே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷திருக்குடும்பத்தின் நெருங்கிய உறவினரே - 
 *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷மாட்சிமை மிக்க அப்போஸ்தலரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தெய்வீக ஆசிரியரின் உத்தம மாணக்கரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தேவ பராமரிப்புகள் அமைந்த யாத்திரிகரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷வேத விசுவாசத்தின் சாட்சியே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தரித்திரத்தை நேசித்தவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தாழ்ச்சிக்கும் பொறுமைக்கும் மாதிரிகையே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தேவ அன்பின் தீபமே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்* 🧎‍♂️

✝️🌷புனிதத்தின் விண்மீனே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷இறையருளின் பேழையே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷பேய்களை நடு நடுங்கச் செய்கிறவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷திருச்சபையின் தூணே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷துன்புறுவோரின் ஆறுதலே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷பாவிகளுக்காக பரிந்து பேசுபவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷திக்கற்றவர்களின் சகாயமே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷திகைக்கின்றவர்களின் பிரகாசமே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷நம்பிக்கையிழந்தவர்களின் ஊன்றுகோலே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷வியத்தகு அற்புதங்களைச் செய்கிறவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷தேவ வரங்களை வழங்குவதில் மிகவும் பேறு பெற்றவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷உம்மை மன்றாடுவோர்க்கு தப்பாமல் உதவி புரிபவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷உம்மிடம் நம்பிக்கை வைப்பவர்களுக்குத் தவறாமல் உதவி செய்கிறவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷அவசரமுள்ளவர்களுக்கு தாமாகவே வந்துதவும் பேருபகாரியே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷இக்கட்டான வேளைகளில் உடன் உதவிபுரிய வல்லமை வாய்ந்தவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷திக்கற்றவர்களுக்காகப் பரிந்து பேசுவதில் பேர் பெற்றவரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷உம்மை வணங்குவோர்க்கு அன்புள்ள மெய்க் காப்பாளரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷எங்கள் சிறப்பு பாதுகாவலரே - *எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்*🧎‍♂️

✝️🌷உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே - *எங்கள் மன்றாட்டை கேட்டருளும் ஆண்டவரே.*🧎‍♂️

✝️🌷உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே - *எங்கள் பாவங்களைப் போக்கியருளும் ஆண்டவரே.*🧎‍♂️

✝️🌷உலகின் பாவங்களைப் போக்குகிற சர்வேஸ்வரனுடைய செம்மறி புருவையாகிய இயேசுவே - *எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே.*🧎‍♂️

*🙏🏻✝️💒🧎‍♂️🙏ஜெபிப்போமாக🙏🏻✝️💒🧎‍♂️🙏*

✝️🌺 எல்லா வல்லமையும் இரக்கமும் உள்ள மீட்பரான ஆண்டவரே🧎‍♂️ 

✝️🌺 உமது அளவில்லாத அன்புக்குரியவரும் உமது மனித அவதாரத்தில் நெருங்கிய உறவினரும் - அப்போஸ்தலருமான புனித யூதா ததேயு வழியாக நாங்கள் கேட்கும் மன்றாட்டுக்களையெல்லாம் தயவாய்த் தந்தருளும் படி உம்மை மன்றாடுகிறோம் -

 *ஆமென் ✝️🙏✝️.*

         

Comments

Popular posts from this blog

மனசெல்லாம் மெல்ல மெல்ல மரியே உன் பேரைச் சொல்ல Manasellam mella mella maraiaye un Perai Solla

இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியிரே -Iraivanidam Parinthu Pesum Punitha Anthoniyarey

இறை அன்னையை நோக்கிப் புனித பெர்நார்துவின் மன்றாட்டு